Total Pageviews

Friday, February 20, 2015

வரலாறு - 1857 ஆம் ஆண்டின் புரட்சி

 இந்த தலைப்பை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, நாம் சில அடிப்படை வார்த்தைகளை புரிந்துகொள்வோம்.


கிளர்ச்சி
இது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் அல்லது தலைவருக்கு எதிரான ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கை.

கலகம்
ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதே இதன் பொருள்.

ஆர்ப்பாட்டம்
இது தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சி, குறிப்பாக போர்வீரர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதை குறிக்கும்.

1857 வரை ஓட்டம்
லார்ட் டல்ஹவுசி இந்தியாவிற்கு திரும்பியதால் ஏற்பட்ட பெற்றிட்த்தை நிரப்புவதற்காக லார்ட் கேனிங் இந்தியாவிற்கு கப்பலில் பயணமானார்.
இதற்கு முன்பாக பிரிடிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள ராயல் கமிஷனில் பணிபுரிந்த கேனிங்கிடம் நல்ல பொது நிர்வாக திறமை இருப்பதாக அறியப்பட்ட்து. 1856 ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அவர் இந்தியாவில் தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தார்.  கிழக்கு இந்திய நிறுவனத்தின் கடைசி கவர்னர் ஜெனரல் லார்ட் கேனிங் தான்.

1857 ஆம் ஆண்டின் புரட்சி காலனியவாதிகளின் மனப்பாங்கு மற்றும் காலனி ஆட்சியின் கொள்கைகளின் விளைவாக உண்டானது ஆகும். ஆங்கிலேய விரிவாக்க கொள்கைகள் மற்றும் பல ஆண்டுகளாக நடைபெற்ற நிர்வாக புதுமைகள் ஆகியவை இந்திய மாநிலங்களின் ஆட்சியாளர்கள், சிப்பாய்கள், ஜமீன் தார்கள், விவசாயிகள், வணிகர்கள், கலைஞர்கள், பண்டிதர்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்டோரை மோசமாக பாதித்தது. அதிகரித்து வந்த அதிருப்த்தி 1857 ஆண்டு ஒரு கடும் புயலாக வெடித்து, ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்தது.

மீரத் நகரத்தில், மே 10 ஆம் தேதி, 1857 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய நிறுவனத்தின் சிப்பாய்களின் ஆர்பாட்டமாக இந்திய கிளர்ச்சி தொடங்கியது. விரைவில் அவை மற்ற ஆர்பாட்டங்களையும் அரசியல் கலகங்களையும் தொடங்கின. அதிகமாக இவை மேல் கங்கை சமவெளிகளிலும், மத்திய இந்தியாவிலும் தொடங்கின. தற்கால உத்திர பிரதேசம், பீகார், வடக்கு மத்திய பிரதேசம் மற்றும் தில்லி பகுதிகளில் அதிகமான பகைமைத்துவம் இருந்த்து.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நிறுவனத்தின் அதிகாரத்திற்கு இந்த கலகம் போதுமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 1858 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி குவாலியரின் வீழ்ச்சியோடு தான் இந்த ஆர்ப்பாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த ஆர்பாட்டம் முதல் இந்திய சுதந்திரப் போர், மகா கலகம், இந்திய கலகம், 1857 ஆம் ஆண்டின் கலகம், 1857 ஆம் ஆண்டின் எழுச்சி, சிப்பாய் கலகம் மற்றும் சிப்பாய் ஆர்பாட்டம் ஆகிய பெயர்களாலும் வழங்கப்படுகின்றது.

பல மனதாங்கல்களின் விளைவாக இந்த கலகம் ஏற்பட்டது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட என்ஃபீல்ட் ரைபில்களின் காகித கேட்ரிட்ஜுகளை கடித்து துப்பும்படி சிப்பாய்களிடம் கேட்டுக்கொண்ட போது இது உச்சகட்ட்த்தை அடைந்த்து.
ரைபிலுக்குள் கேட்ரிட்ஜை செலுத்துவதற்கு முன்பாக கொழுப்பு தடவிய காகித உரை நீக்கப்பட வேண்டும்.
மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு அந்த கேட்ரிட்ஜில் பூசப்பட்டு இருந்த்தாக நம்பப்படுகின்றது.
இது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது.

கொழுப்பு த்டவிய கேட்ரிட்ஜுகள் தொடர்பான பிரச்சனையில் கொடுக்கப்பட்ட ஆணையை மீறியதற்காக 1857 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி, 85 சிப்பாய்களின் சீருடைகள் களையப்பட்டு 10 ஆண்டுகள் கடுமையான சிறைதண்டனை வழங்கப்பட்டது.


மறுநாள் மற்ற சிப்பாய்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் சக பணியாளர்களை விடுதலை செய்தார்கள். இந்த சிப்பாய்கள் தில்லியை நோக்கி அணிவகுத்து சென்று, மே 11 ஆம் தேதி அதிகாலையில் செங்கோட்டையை அடைந்தார்கள். அங்கே அவர்கள் முகலாய சக்கரவர்த்தி இரண்டாம் பகதுர் ஷாவை இந்த கலகத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வர்ப்புறுத்தினார்கள். அவரை ஷாஹென்ஷா-இ-இந்துஸ்தான் (இந்திய சக்கரவர்த்தி) என்று பிரகடனம் செய்தார்கள்.
முகலாய சாம்ராஜ்யத்தின் நீண்ட கால ஆட்சி இந்தியாவின் அரசியல் ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாக மாறிவிட்டது என்கிற உண்மையை கடைசி முகலாய மன்னரை நாட்டின் தலைமைத்துவத்துற்கு நேரடியாக ஏற்றிய சம்பவம் அங்கீகரிக்கின்றது. 



ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பஹதுர் ஷா, இந்தியாவின் அனைத்து தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதி ஒரு ஒருங்கிணைந்த படையை ஏற்படுத்தி ஆங்கிலேய ஆட்சியை விரட்டும்படி வலியுறுத்தினார். 

     தில்லி நகரை கைப்பற்ற சிப்பாயிகள் அணிதிரண்டு சென்றனர். அரசியல் பிரதிநிதி சைமன் ஃப்ரேசர் மற்றும் சில ஆங்கிலேயர்கள் கொல்லைபப்ட்டனர், பொது அலுவலகங்கள் அபகரிக்கபட்டன அல்லது அழிக்கப்பட்டன.

மீரத் புரட்சி மற்றும் தில்லியை கைபற்றுதல் ஆகுயவை சிப்பாய் புரட்சிக்கும், ஏறத்தாழ வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் எழுந்த புரட்சிக்கும், முன்னோடியாக இருந்தது. தென் இந்தியா அமைதியாக இருந்தது, பஞ்சாப் மற்றும் வங்காலம் மற்றுமே சிறிதளவும் பாதிக்கப்பட்டது.

மீரத் சம்பவத்திற்கு முன்பாகவே, பல்வேறு படைத்தளங்களில் வெறுப்பின் முழங்க்கங்கள் இருந்தன. 
பெர்ஹாம்பூரை சார்ந்த 19 வது உள்நாட்டு காலாட்படையினர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்ட் ரைபில்களை பயன்படுத்த மறுத்து, பிப்ரவர் 1857 ஆம் ஆண்டு கலகத்தில் ஈடுபட்டனர். இது மார்ச் 1857 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டது.

1857, மார்ச் 29 ஆம் தேதி பராக்பூரை சார்ந்த (கல்கத்தாவுக்கு அருகே) 34 வது படைப்பிரிவில் இருந்த மங்கல் பாண்டே என்னும் இளம் சிப்பாய், மற்ற படைப்பிரிவுகளில் இருந்து ஒரு படி முன்னேறிச் சென்று, கொழுப்பு தடவிய கேட்ரிட்ஜுகளின் பிரச்சனை காரணமாக அவருடைய படைப்பிரிவை சார்ந்த சார்ஜண்ட் மேஜரை துப்பாக்கியால் சுட்டார்.
பின்னர் மங்கல் பாண்டே தூக்கிலிடப்பட்டார், அவருடைய படைப்பிரிவு களைக்கப்பட்டது.


புரட்சிக்கான காரணங்கள் :
 இந்திய விவசாயத்தை சுரண்டுதல் : வணிக தனியுரிமை கிழக்கு இந்திய நிறுவனத்தை கனிசமான அளவில் செல்வாக்கு பெறச் செய்தாலும், அதன் முக்கியமான வருமான ஆதாரம் தற்போது நிலத்தில் இருந்து பெறப்பட்டது. இயன்ற வரை அதிகமான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக புதிய நில தீர்வு முறைகளை அது உருவாக்கியதுநிரந்தர, ரயட்வாரி மற்றும் மஹால்வாரி முறைகள். இவை மக்களை ஒடுக்கின. இந்திய சந்தைகளில் ஆங்கிலேயர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் குவிந்ததால், கலைஞர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

அரசியல் காரணங்கள்:
ஆங்கிலேயர்களின் பிராந்திய இணைப்பு இந்திய மாநிலங்களில் இருந்த எண்ணற்ற ஆட்சியாளர்களும், தலைவர்களும் பதவியிழக்க காரணமாக அமைந்தது. துணை
கூட்டணி (லார்ட் வெல்லஸ்லீ அறிமுகம் செய்த்து) மற்றும் மறுப்பு கோட்பாடு (லார்ட் டல்ஹவுசீ அறிமுகம் செய்த்து) ஆகிய அடக்குமுறை கொள்கைகள் சமுதாயத்தை அளும் பிரிவினரை கோபப்படுத்தின.
ஆங்கிலேயர்கள் பின்பற்றிய இணைப்பு கொள்கை மாநிலங்களின் ஆட்சியாளர்களுக்கு கசப்பு உணர்வை ஏற்படுத்தியது. ஆகவே, தீவிர எதிரிகளாக மாறினார்கள். ஆகவே, அவர்கள் அவரவருடைய பிரதேசங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகங்களில் ஈடுபட்டார்கள்.

இந்திய அரசர்களும், அரசிகளும் ஆட்சி செய்த இந்திய மாநிலங்களை ஆங்கிலேய நிர்வாகம் எடுத்துக்கொண்டதால் இந்தியர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்காமல் செய்தது. தற்போது இந்தியர்கள் அடிமட்ட வேலையில் மட்டுமே ஈடுபட்டனர்.

சமுதாய காரணங்கள்:
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சமுதாய சீர்திருத்தங்களை, இந்திய சமுதாயத்தின் பழமைவாத பிரிவுகள் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள். சத்தி முறையை ஒளித்தல், விதவை மறுமணத்தை ஆதரித்தல், பெண்களுக்கு மேற்கத்திய கல்வியை நீட்டுதல் ஆகியவை நாட்டின் சமுதாய களத்திற்குள் தலையிடுவதாக கருதினார்கள். 
ஆங்கிலேயர்கள் இந்தியர்களோடு கலக்கவே இல்லை, இந்திய உயர் குடிமக்களையும் அவர்கள் வெறுப்போடு பார்த்தனர். தற்போது சமத்துவம், விடுதலை, உள்ளிட்டவற்ற இதே மேற்ல்கத்திய கல்வி மூலமாக அறிந்துகொண்ட கல்வியறிவு பெற்ற இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட இனவாத மனப்பாங்கு பிடிக்கவில்லை.

மதரீதியான காரணங்கள்:
இந்தியர்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆங்கிலேய அரசாங்கம் தீர்மானித்துவிட்ட்து என்னும் பயம் மக்களை பற்றிக்கொண்ட்து.  கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள், கோவில்களூக்கும் மசூதிகளுக்கும் சொந்தமான நிலங்களுக்கு வரிவிதித்தல், மற்றும் 1856 ஆம் ஆண்டின் மத இயலாமைகள் சட்டம் ஆகியவை அவர்களுடைய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.
இச்சட்டம் இந்து சடங்குகளை மாற்றியமைத்த்து, உதாரணமாக மதம் மாறுவதால் தந்தையுடைய சொத்தில் பங்கு பெறுவது மகனுக்கு உரிமை மறுக்கப்படாது.

ராணுவ காரணங்கள்:
பல்வேறு காரணங்களினால் ராணுவத்தில் பெரும் அதிருப்தி நிலவி வந்த்து.
நிறுவனத்தின் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான நிபந்தனைகள் சிப்பாய்களின் மத நம்பிக்கைகளுக்கு முரண்பாடாகவே செயல்பட்டு வந்தன.
ஜாதி மற்றும் பிரிவு சார்ந்த அடையாளங்களை அணிந்துகொள்வதற்கு சிப்பாய்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன.
        அக்காலத்தில் இந்து மத்த்தின்படி, கடலை கடந்தை ஜாதியில் இருந்து விலக்கப்படுவார். 1856 ஆம் ஆண்டின் பொது சேவை ஆள்சேர்ப்பு சட்டத்தின்படி அரசாங்கத்திற்கு தேவைப்பட்டால் இந்திய சிப்பாய்கள் கட்டாயமாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்று நிர்பந்தித்த்து. 
தங்களுடன் பணியாற்றிய ஆங்கிலேய சிப்பாய்களோடு ஒப்பிட்டால் தங்களுடைய ஊதியம் குறைவாக இருக்கிறது என்றும் இந்திய சிப்பாய்கள் வருத்தம் அடைந்தனர்.
ஒவ்வொரு கட்ட்த்திலும் இந்திய சிப்பாய் தாழ்வாகவே கருதப்பட்டு, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் உள்ளிட்ட காரியங்களில் இனரீதியாக வேறுபடுத்தியே பார்க்கப்பட்டார்கள்.. ஆங்கிலேய சிப்பாய்களை விட இந்திய சிப்பாய்களுக்கு குறைவான வருமானமே கொடுக்கப்பட்டது. இந்திய சிப்பாய்களுக்கு வீரம் அதிகமாக இருந்தாலும், சுபேதாரை காட்டிலும் அதிகமான பதவிக்கு செல்ல முடியாது.

1857 ஆம் ஆண்டின் புரட்சி சிப்பாய்களின் கலகத்தில் இருந்து தொடங்கியது. இந்த சிப்பாய்கள் வடக்கு மற்றும் வட மேற்கு இந்தியாவின் விவசாய மக்களிடம் இருந்து பெறப்பட்டவர்கள். ஆங்கிலேயர்களின் நில வரி கொள்கைகள் விவசாயத்தை நலிவடையச் செய்து, அழித்துகொண்டு இருந்தது. இது சிப்பாய்களையும் பாதித்தது.

ஆவாத் இணைக்கப்பட்ட சம்பவம் நிறுவன சிப்பாய்களின் உணர்வுகளை பெரிதும் பாதித்தது, ஏனென்றால் பெரும்பாலான சிப்பாய்கள் ஆவாதில் இருந்து தான் வந்தார்கள். புதிய ஆட்சியின் கீழ், ஆவாத் மக்கள் நிறுவனத்திற்கு மேலும் அதிகமான கப்பமும், கூடுதல் வரியும் செலுத்த வேண்டியதாக இருந்தது.

உடனடி காரணம்:
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அதிருப்தி நீண்ட காலமாக இந்தியர்களிடம் வளர்ந்து வந்தது. 1857 ஆம் ஆண்டின் போது அது பெரிய கலகமாக வெடித்த்து.
கொழுப்பு தடவிய கேட்ரிட்ஜுகள் ராணுவத்தில் அதிருப்தி ஏற்படுவதற்கான புதிய காரணம் அல்ல, ஆனால் தங்கள் அதிருப்தியை வெளிக்கொண்டு வர அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த்து. கலகத்தில் ஈடுபட்ட சிப்பாய்களோடு, பொது மக்களும், பதவியிழந்த ஆட்சியாளர்களும், அவர்களை சார்ந்திருந்தவர்களும், திருப்தி அற்ற ஜமீன்தார்களும் இணைந்துகொண்டார்கள்.

புயல் மையங்களும், கலகத்தின் தலைவர்களும்
தில்லி கான்பூர், லக்னௌ, பேரில்லீ, ஜான்சி மற்றும் ஆராஹில் இந்த கலகத்தின் புயல் மையங்களாக செயல்பட்டன.


தில்லி:
தில்லியில் பெயரளவிலும், அடையாளமாகவும் முகலாய மன்னர் பகதுர் ஷா தலைமைத்துவம் வகித்தார். இருப்பினும், உண்மையான அதிகாரம் பக்த் கான் தலைமையிலான சிப்பாய்களின் மன்றத்திடமே இருந்த்து. பக்த் கான் என்பவர் தான் பாரெய்லீயில் சிப்பாய்களின் கலகத்தை வழிநட்த்தி, அவர்களை 1857 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி தில்லிக்கு கொண்டு வந்தார்.
சக்கரவர்த்தியின் பெயரில் மாநிலத்தின் பிரச்சனைகளை மன்றமே நடத்தி வந்த்து.
சக்கரவர்த்தியின் பெலவீனமான உடலமைப்பும், வயது முதிர்வும், தலைமைத்துவ திறன்களின் குறைபாடும் கலகத்திற்கு மையமாக செயல்பட்டு, கணக்கிட முடியாத சேதங்களை ஏற்படுத்தியது.

கான்பூர்:
மூன்றாம் பேஷ்வா பாஜி ராவின் வளர்ப்பு மகனாகிய நானா சாஹெப் கான்பூரில் கலகத்திற்கு தலைமைதாங்கினார். 
நானா சாஹேபின் குடும்ப பதவி மறுக்கப்பட்டு, பூனாவில் இருந்து ஆங்கிலேயர்களால் வெளியேற்றப்பட்டார். அவர் கான்பூருக்கு அருகே உள்ள பித்தூரில் வாழ்ந்து வந்தார்.
அரசியல் புயல் விறுவிறுப்பு அடைந்தபோது, கான்பூரில் முகாமிட்டு இருந்த கிழக்கு இந்திய நிறுவனத்தின் இந்திய படைகளை நானா சாஹெபின் தளபதி டாண்டியா டோப் வென்றார். அவர் நானே சாஹெபின் அதிகாரத்தை நிலைநிறுத்தி, அவருடைய புரட்சிப்படைக்கு தலைமை தளபதியானார்.
நானா சாஹெப் கான்பூரில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டியடித்து தன்னை பேஷ்வா என்று பிரகடனம் செய்தார்.
பஹதுர் ஷாவை அவர் இந்தியாவின் சக்கரவர்த்தியாக அங்கீகரித்து, தன்னை அவருடைய ஆளுநராக பிரகடனம் செய்துகொண்டார்.

                                                                                                                                                                  
                                                                                                  ராமசந்திர பாண்டுரங் டோப்

லக்னௌ:
1857 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி லக்னௌவில் கலகம் வெடித்த்து, அனுதாப அலை பதவியிழந்த நவாபுக்கு சாதகமாக இருந்த்து.
ஆவாதின் பேகம், ஹஸ்ரத் மஹால் தலைமைத்துவம் அளித்து, தன்னுடைய மகன் பிர்ஜிஸ் காதிரை ஆவாதின் நவாபாக அறிவித்தார்.
ஆனால் இங்கு மீண்டுமாக, பாசியாபாதின் மௌலாவி அஹமதுல்லா அதிக புகழ்பெற்ற தலைவராக இருந்து, கலகங்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.

பேகம் ஹஸ்ரத் மஹால்

பாரெய்லீ:
கான் பஹதுர் கான் கடைசி ரோஹில்லா தலைவர், ஹாபிஸ் கானுடைய வழிமரபினர்.
கான் பஹதுர் ஆட்சிசெய்த குடும்பத்தின் தலைவராகவும் ஆங்கிலேய சிறைக்கைதியாகவும் இருந்தார். தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை திரும்ப பெறுவதற்கு இந்த கலகம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியதால், இவர் தன்னை பாரெய்லி வைசிராயில் உள்ள தில்லியின் மன்னர் என்று தன்னை அறிவித்தார். இவர் ஒரு படையை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு கடும் எதிர்ப்பை அளித்தார்.
1858 மே 7 ஆம் தேதி இவர் வீழ்த்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேபால் எல்லையில் இவர் கைப்பற்றப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

                                                                            கான் பஹதுர் கான்

ஜகதீஷ்பூர்:
 பீகாரில் ஜகதீஸ்பூர் ஜமீன்தார் குன்வர் சிங் கலகத்தை வழிநடத்தினார்.
 He joined the sepoys when they reached Arrah from Dinapore.

Kunwar Singh

ஜான்சி:
கலகத்தின் மிகவும் சிறப்பான தலைவர் ராணி லெக்‌ஷ்மி பாய். ஜான்சியில் உள்ள சிப்பாய்களுக்கு இவர் தலைமைத்துவம் ஏற்றார்.
இவருடைய கணவர் ராஜா கங்காதர் ராவ் மரணம் அடைந்த பிறகு, இவருடைய வளர்ப்பு மகன் அரியணையில் ஏறுவதற்கு லார்ட் டல்ஹவுசி மறுப்பு தெரிவித்தார். மறுப்பு கோட்பாட்டை செயல்படுத்தி அவருடைய மாநிலம் இணைக்கப்பட்டது.
அவர் அவருடைய அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  மூன்று ஆண்டுகளுக்கு பிறகு லெக்‌ஷ்மி பாய் மீண்டுமாக ஜான்சியின் கட்டுப்பாட்டை பெற்றுக்கொண்டார்.
ஜனவரி 1858 ஆம் ஆண்டு, ஜான்சியை நோக்கி ஆங்கிலேய படை முன்னேறி, அந்நகரை வெற்றிகரமாக கைப்பற்றியது. இருப்பினும், ராணி லெக்‌ஷ்மி பாய் தன்னுடைய மகனோடு தப்பிச் சென்று, கால்பிக்கு சென்றார். அங்கே டாண்டியா டோபை சந்தித்து குவாலியருக்கு நேராக அணிவகுத்து சென்றார்.
இறுதியாக அவர் 1858 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி ஹூக் ரோஸ் தலைமையிலான ஆங்கிலேய படையை எதிர்த்து குவாலியர் போரில் சண்டையிட்டு மரணம் அடைந்தார்.


புரட்சியின் தலைவர்கள்
தில்லி
பகதுர் ஷா ஜாபர் மற்றும் பக்த் கான்
ஜான்சி
ராணி லக்‌ஷ்மி
பீகார்
குன்வர் சிங்
மதுரா
தேவி சிங்
மீரத்
கடம் சிங்
ஃபைசாபாத்
முஹமத் உல்லா
கான்பூர்
நானா சாஹெப், டாண்டியா டோப் மற்றும் அசிமுல்லா கான்.
அலகாபாத்
லியாகத் அலி
குவாலியர்
டாண்டியா டோப்
ஹரியானா
ராவ் துலாராம்
சாம்பல்பூர்
சுரேந்தர் சாய்
பாரேலி
கான் பஹதுர் கான்
சடாரா
ரங்கோ பாபுஜ் குப்டே
ஹைதராபாத்
சோனாஜி பண்ட்
கர்னாடகா
மாவ்ல்வி சையத் அலாவுதின், பீமாராவ் மடார்கி மற்றும் சோடா சிங்.
கோலாபூர்
அன்னாஜி பாட்னாவிஸ்
மெட்ராஸ்
குலாம் கோஸ் மற்றும் சுல்தான் பக்ஸ்
கோயம்புத்தூர்
முல்பகல் சுவாமி

தோல்வி:
1857 செப்டம்பர் 20ஆம் தேதி ஆங்கிலேயர்கள் தில்லியை கைப்பற்றினார்கள்.  இதற்கு முன்பாகவும் கான்பூர், ஆக்ரா, லக்னௌ மற்று பல இடங்களில் போராளிகள் பின்னடைவை சந்தித்தார்கள். முந்தைய பின்னடைவுகள் போராளிகளுக்கு ஊக்க்க்குறைவு அளிக்கவில்லை, ஆனால் தில்லியின் வீழ்ச்சி நிச்சயமாக அவர்களுடைய ஊக்கத்தை சீர்குலைத்த்து.
பஹதுர் ஷா சிறைக்கைதியாக எடுத்துக்கொள்ளப்பட்டார், அரச பிரபுக்கள் கைப்பற்றப்பட்டு கூனி தர்வாசாவுக்கு முன்பாக வெட்டிக்கொல்லப்பட்டார்கள்.

ஒருவர் பின் ஒருவராக புரட்சியின் மகத்தான தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தார்கள்.
கான்பூரில் நானா சாஹெப் வீழ்த்தப்பட்டார், அதன் பின் அவர் நேபாலுக்கு தப்பி ஓடினார்.
டாண்டியா டோப் மத்திய இந்திய காடுகளுக்குள் தப்பிச் சென்று, அங்கிருந்து ஏப்ரல் 1859 வரை கொரில்லா தாக்குதல்களை நடத்தினார்.
ஒரு ஜமீன்தார் நண்பர் மான் சிங்கினால் காட்டிக்கொடுக்கப்பட்டு, தூக்கத்தில் இருக்கும்போது கைதுசெய்யப்பட்டார்.
1859 ஆம் ஆண்டின் போது, குன்வர் சிங், பக்த் சிங் மற்றும் பாரெய்லியை சார்ந்த கான் பஹதுர் கான் ஆகிய அனைவரும் இறந்துவிட்டனர். ஆவாதின் பேக்ம் நேபாலுக்கு தப்பிச் சென்றார்.
1859 ஆம் ஆண்டு இந்த கலகம் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி மீண்டும் முழுமையாகவும், உறுதியாகவும் நிலைநாட்டப்பட்டது.


தோல்விக்கான காரணங்கள்:
1)      ஒருங்கிணைந்த நிகழ்ச்சி மற்றும் சிந்தனை குறைபாடு
2)      இந்தியர்களுக்கு இடையே ஒற்றுமையின்மை
3)      கல்வியறிவு பெற்ற இந்தியர்களின் ஆதரவு குறைபாடு
4)      தலைவர்கள் இடையே ஒற்றுமையின்மை
5)      ஆங்கிலேயர்களின் ராணுவ மேன்மை Military superiority of the British

தாக்கம் :
 Transfer of power :
அதிகார இடமாற்றம்: இந்தியாவை நிர்வாகிக்கும் அதிகாரம் கிழக்கு இந்திய நிறுவனத்திடம் இருந்து ஆங்கிலேய முடியாட்சிக்கும் 1858 ஆம் சட்டத்தின் மூலமாக இடம் மாறியது. இப்போது ஒரு செயற்குழுவின் உதவியோடு இந்தியாவுக்கான மாநில செயலாளர் இந்தியாவின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருப்பார்.

ராணுவ ஒருங்கிணைப்பில் மாற்றங்கள்:
 ஐரோப்பிய போர்வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வங்கால ராணுவத்தில் இரண்டு இந்திய போர்வீரர்களுக்கு ஒரு ஐரோப்பிய போர்வீரரும், பம்பாய் மற்றும் மெட்ராஸ் ராணுவங்களில் இரண்டு முதல் போர்வீரர்கள் என்றும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், ஐரோப்பிய ராணுவங்கள் முக்க்கிய புவியியல் மற்றும் ராணுவ நிலைகளில் வைக்கப்பட்டனர்.

பிரித்து ஆட்சிசெய்தல்:
புரட்சிக்கும் திட்டம் வகுத்தது இஸ்லாமியர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்ததால், இஸ்லாமியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, பொது பணிநியமனங்களிலும், மற்ற துறைகளிலும் இனப்பாகுபாடுகள் செய்யப்பட்டன.

பிரபுக்களுக்காக புதிய கொள்கை:
 இணைக்கப்பட் வேண்டும் என்கிற் முந்திய திட்ட்ம் தற்போது கைவிடப்பட்டு, இந்த மாநிலங்களின் ஆட்சியாளர்கள் தற்போது தங்கள் வாரிசுகளை தத்தெடுத்துக்கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டது.

மிகவும் உணர்வுமிக்க இந்திய பிரிவுகளாகிய ஜமீன்தார்கள், பிரபுக்கள் மற்றும் நிலவுரிமையாளர்கள் ஆகியோரை ஆறுதல்படுத்த ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள்.

மதிப்பீடு:
அதிகாரபூர்வமான ஆங்கிலேய விளக்கம் என்னவெனில், வங்கால் ராணுவம் மட்டுமே புரட்சியில் ஈடுபட்டது, சட்டம் ஒழுங்கு இயந்திரம் சீர்குலைந்ததால் அரசியல் கலகங்கள் ஏற்பட்டது. ஆனால் இந்த கண்ணோட்டத்திற்கு பலர் சவால்விட்டனர். பழமைவாத தலைவர் பென்ஜமீன் டிஸ்ரேலி, “கிரீஸ் கேட்ரிட்ஜ்களினால் சாம்ராஜ்யங்க்ள் அழிவதோ, விழுவதோ இல்லைஎன்றார். இப்படிப்பட்ட விளைவுகள் போதுமான காரணங்களினாலும், போதுமான் காரணங்கள் ஒன்றிணைவதாலும் ஏற்படுகின்றன.

1857-1858 வரை கலகம் பரவிய விதம் மற்றும் அரசியல் ஆர்பாட்டம் குறித்த விவரமான குறிப்பு

2 பிப்ரவரி 1857     -       பெராம்பூரில் 19 ஆம் உள்நாட்டு காலாட்படையின் ஆர்பாட்டம்.

10 மே  1857         -        மீரத்தில் சிப்பாய்களின் கலகம்

11-30  மே 1857   -       தில்லி, ஃபெரோஸ்பூர், பம்பாய், அலிகார், எடாவா, புலன்ஷார், நசீராபாத் பாரெய்லி, மொரதாபாத், ஷாஜஹான்பூர் மற்றும் உத்திரபிரதேசத்தின் மற்ற நிலையங்களில் புரட்சி வெடித்த்து.


                                            இந்தியாவின் சக்கரவர்த்தியாக முகலாய சக்கரவர்த்தி பிரகடனம் செய்யப்பட்டார்.

ஜூன்  1857                 -        குவாலியர், பாரத்பூர்,  ஜான்சி அலகாபாத், ஃபைசாபாத், லக்னௌ ஆகிய இடங்களில் கலகங்கள்.,

                                             சிந்து-கங்கை சமவெளி, ராஜ்புதானா மற்றும் இந்தியாவின் மற்ற சில பகுதிகளுக்கும் அரசியல் புரட்சிகள் பரவின.

ஜூலை  1857                   -        இந்தோர், ம்ஹௌ, சாகர் மற்றும் ஜீலம் சியல்கோட் போன்ற பஞ்சாபின் சில பகுதிகளில் கலகங்கள்.

ஆகஸ்டு 1857                   -        சாகர் மற்றும் நேர்புத்தா மாவட்டங்களில் அரசியல் புரட்சிகள் பரவின.

செப்டம்பர் 1857                  -        ஆங்கிலேயர்கள் தில்லியை மீண்டுமாக கைப்பற்றுதல் : மேலும் மத்திய இந்தியாவில் கலகங்கள் வெடித்தல்

அக்டோபர்  1857                    -         கோடா நகருக்கு புரட்சி பரவியது.

நவம்பர்  1857                   -         கான்பூருக்கு வெளியே போராளிகள் ஜெனரல் விந்தமை வீழ்த்துதல். 

டிசம்பர்  1857                    -         கான்பூர் போரை சர் காலின் கேம்பெல் வெற்றிபெறுதல்

                                               டாண்டியா டோப் தப்பிச்செல்கிறார்.

மார்ச்  1858               -         லக்னௌ ஆங்கிலேயர்களால் மீண்டும் கைப்பற்றப்படுதல்.

ஏப்ரல்  1858                  -           ஜான்சி ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சி அடைதல். குன்வர் சிங் தலைமையில் பீகாரில் பிரெஞ்சு எழுச்சி.

மே  1858                   -          பாரெய்லி, ஜக்தீஷ்பூர் மற்றும் கால்பியை ஆங்கிலேயர்கள் மறுமுறை கைப்பற்றுகிறார்கள்.

                                               இந்திய போராளிகளின் கொரில்லா போர் ரோஹில்கண்ட்.

ஜூலை-டிசம்பர் 1858             -          இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரம் மறுமுறை நிலைபடுத்தப்பட்டது.

VIEWS
வி.டி.சவாகர் 1909-1910 வரை இதுஇந்திய விடுதலைப் போர்என்று உறுதியாக கூறினார்.

”1857 ஆம் ஆண்டின் புரட்சி ஒரு மங்கிய ஒருங்கிணைப்பு தனது இழந்துபோன புகழை மீட்டுக்கொள்வதற்கான கடைசி முயற்சியாக இருந்ததுஎன்று தாராசந்த் எழுதினார்.

முதல் தேசிய சுதந்திரப் போர் 1857 என்று அழைக்கப்படும் இதை முதலாவதும் அல்ல, தேசியமயமானதும் அல்ல, சுதந்திரப்போரும் அல்ல என்னும் முடிவை மறுப்பது மிகவும் கடினமானதாகும்                                                                                                                                                                ஆர் சி மஜூம்தர்

,”ஒரு கலகம் புரட்சியாக மாறி, மீரட்டை சார்ந்த கலகக்காரர்கள் தங்களை தில்லியின் மன்னரின் கீழ் கொண்டு வந்தபோது, நிலம்படைத்த அரசகுடும்பம் மற்றும் பொது மக்களின் ஒரு பகுதியினர் அதற்கு ஆதரவு அளித்தார்கள். மதத்திற்காக தொடங்கப்பட்ட போராட்டம் சுதந்திரப் போராக முடிவடைந்தது              
                                                                                                                                                                           எஸ்.என்.சென்

புரட்சியாளர்கள் நடுவே ஒரே ஒரு திறமையுள்ள தலைவர் எழுந்திருந்தாலும், நாம் மீளமுடியாத அளவுக்கு தோற்றிருப்போம்
                                                                                                                                                          ஜான் லாரன்ஸ்

1857 ஆம் ஆண்டின் புரட்சி போர்வீரர்களும் விவசாயிகளும் ஜனநாயகமாக வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கும், உள்நாட்டு நிலவுரிமைத்துவத்திற்கும் எதிராக நடத்திய போராட்டம்.
                                                                                                                                                  மார்சிஸ்டுகளின் விளக்கம்  
 
இங்கே கிடக்கும் பெண் மட்டும் தான் புரட்சியாளர்கள் நடுவே இருந்த ஒரே ஆண்                                                                                                                                                                        ஹூக் ரோஸ்
 (ஜான்சி ராணிக்கு செலுத்திய புகழாரம்)

இது கலகத்தைவிடவும் மிகவும் அதிகமானதுஇருப்பினும் முதல் சுதந்திரப்போரை காட்டிலும் மிகவும் குறைவானது
                                                                                                                                                              ஸ்டான்லீ வால்பெர்ட்



வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...