Total Pageviews

Wednesday, April 20, 2016

இயற்பியல் - காஸ் விதி


காஸ் விதி.

இப்பகுதியில் நீங்கள் காஸ் விதியை குறித்து கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்,

முறையின்றி பரவிக்கிடக்கும் பெருவாரியான மின்னூட்டங்களை கருதுங்கள். P என்கிற புள்ளியில் இருக்கும் மின் புலனை கலப்பு வெக்டர் கூட்டலின் மூலமாகவே கணக்கிட இயலும். மின் புலனை எளிதாக கணக்கிடுவதற்கு காஸ் விதி பயன்படுத்தப்படுகின்றது. மின் பாயம் என்னும் ஸ்கேலாரை மின் புத்தோடு இணைக்கும் மிக அடிப்படையான விதிகளில் ஒன்று காஸ் விதி.

நாம் காஸ் விதியை குறித்து விரிவாக படிப்போம். அதற்கு முன்பு, முதலில் மின் புலம், பரப்பு உறுப்பு, காஸியன் பரப்பு மற்றும் பாயம் போன்ற கணியங்கள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். மின்னூட்டத்தை சுற்றிலும் ஒரு மீச்சிறு மின்னூட்டம் ஒரு விசையை உணரக்கூடிய இடமே மின்புலம் எனப்படும். மின் புலம் என்பது ஒரு மின்னூட்ட அலகினால் உணரப்படும் விசை என்று வரையறுக்கப்படுகிறது, அது ஒரு மீச்சிறு நேர்மறை சோதனை மின்னூட்டத்தினால் உணரப்படும் விசையின் திசையில் செயல்படும். மின் புலத்தை குறித்துக்காட்ட மின் விசைக்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்து, பரப்பு உறுப்பை கருதுக. இது, தன் திசை வெளிப்புறமாகவும் ஒரு மூடிய பரப்பிற்கு செங்குத்தாகவும் இருக்கின்ற ஒரு வெக்டர் கணியம். காஸியன் பரப்பு என்பது ஒரு கற்பனையான, மூடப்பட்ட சீரொத்த பரப்பு, இதைக் கொண்டு மின் புலம் கணக்கிடப்படும்.

காஸ் விதியை இப்படி பொதுமைப்படுத்தலாம், எந்த ஒரு மூடப்பட்ட பரப்பிலும் இருக்கும் மொத்த மின் பாயம், அந்த பரப்பில் இருக்கும் q என்ற மொத்த மின்னூட்டத்தின் 1 வகுத்தல் எப்சிலான் பூஜியம் முறை இருக்கும். எந்த காஸியன் பரப்புக்கும் காஸியன் விதி பொருந்தும். அது அந்த பரப்பின் அளவு மற்றும் வடிவத்தை சார்ந்தது அல்ல.







வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...