இந்தியா பல்லாயிரம்
ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.
நமது முன்னோர்கள் விட்டுசென்ற
ஆதாரங்களின் மூலமாக நாம்
இதை அறிந்துகொள்கிறோம். கைகளினால்
காகிதத்தில் எழுதப்பட்ட பதிவுகள்
இருக்கின்றன. ஆனால்,காகிதங்கள்
உருவாக்கப்படுவதற்கு முன்பே,
உலர்ந்த பனை இலைகளிலும்,
பிர்ச் மரப்பட்டைகளிலும், செம்பு
தகடுகளிலும் பதிவுகள் இருந்தன.
சில வேளைகளில் பெரிய
பாறைகள், தூண்கள், கற்சுவர்கள்
அல்லது களிமண் மற்றும்
கற்களினால் செய்யப்பட்ட கல்வெட்டுகளிலும் அவை பதிக்கப்பட்டு இருந்தன. எழுத்து
அறிவு இல்லாத காலத்திலே
வாழ்ந்த பழங்கால மக்களுடைய
வாழ்க்கை, அவர்கள் விட்டுச்
சென்ற அவர்களுடைய மட்பாண்டங்கள்,
ஆயுதங்கள் மற்றும் கருவிகள்
போன்ற பொருட்கள் மூலமாக
நமக்கு தெரிய வருகின்றன.
|
நகர வாழ்க்கைக்கு செல்லும் மனிதன்:
ஆண்டுகள் செல்லச்
செல்ல சில சிறிய
கிராமங்கள், வளர்ந்து பெரிதாகின.
புதிய தேவைகள் எழுந்தன,
புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன.
பெரிய கிராமங்களில் வசித்த
மக்கள் தங்கள் தேவைக்கு
அதிகமாக உணவை தயாரித்ததால்
அவர்கள் செழிப்படைந்தனர். தங்கள்
மிதமிஞ்சிய உணவுக்கு பதிலாக
அவர்கள் ஆடைகள், பாத்திரங்கள்,
ஆபரணங்கள் போன்ற பிற
பொருட்களை வாங்கினார்கள். நெசவாலர்களும்,
குயவர்களும், ஆசாரியர்களும் தாங்கள்
உருவாக்கிய பொருட்களை பிற
குடும்பத்தினர் பயிர்செய்த
உணவுப்பொருட்களுக்கு பதிலாக
பண்டம்மாற்று செய்துகொண்டனர். படிப்படியாக
வணிகம் அதிகரித்தவுடன், கலைஞர்கள்
ஒன்றாக சேர்ந்து வாழ
தொடங்கினார்கள், அந்த கிராமங்கள்
நகரங்களாக மாறின.
|
பொதுவாக மக்கள்
நகரத்தில் வாழத் தொடங்குவது
நாகரிகத்தின் ஆரம்பம் என்று
கருதப்படுகின்றது. மக்கள் பொருளாதார
தேவைகளை திருப்தி செய்வதை
தாண்டி யோசிக்க தொடங்கும்
மனித கலாச்சாரத்தின் வளர்ச்சி
அடையும் பருவமே நாகரிகம்.
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “மொஹன்ஜொ-தாரோ தெரு ஒன்றில் இருக்கும் மூடப்பட்ட கழிவுநீர்பாதை” பக்கம் 22ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
1826 ஆம்
ஆண்டு சார்ல்ஸ் மேசன்
என்கிற ஒரு ஆங்கிலேயர்
மேற்கு பஞ்சாபில் உள்ள
(தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது)
ஹரப்பா என்னும் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
பழங்கால
குடிமக்களின் உயர்ந்த சுவர்களையும்,
கோபுரங்களையும் அவர்
பார்வையிட்டார்.
அந்த
நகரம் மகா அலெக்சாந்தர்
வாழ்ந்த காலத்தை சார்ந்தது
என்று அவர் நம்பினார்.
|
![]() |
1872
ஆம் ஆண்டு சர்
அலெக்சாந்தர் கன்னிங்ஹம் என்கிற
தொல்பொருள் ஆராச்சியாளர் ஹரப்பா
என்கிற இடதிற்கு வந்தார்.
இவ்விடத்தில் இருந்து
அவர் சில தொன்மையான
பொருட்களை சேகரித்தார், ஆனால்
அவை எந்த காலகட்டத்தை
சார்ந்தவை என்று அவரால்
கணக்கிட முடியவில்லை.
|
தொல்பொருள்
ஆராச்சிக்காக முதன் முதலில்
தோண்டி எடுக்கப்பட்ட இடம்
ஹரப்பா. 1920 ஆம் ஆண்டு
முதல் தயாராம் சாஹ்னி,
எம்.எஸ்.வாட்ஸ்
மற்றும் மார்டிமர் வீலர்
போன்ற தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஹரப்பாவில் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டார்கள்.
இந்த
நகரத்தின் அழிவடைந்த பகுதிகள்
ஏறத்தாழ மூன்று மைல்
சுற்றளவுக்கு கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போதும்
பயன்பாட்டில் இருக்கும் சில
முக்கியமான வணிக பாதைகளுக்கு
நடுவே ஹரப்பா இருந்தது,
ஹரப்பாவின் தனிமைப்படுத்தப்பட்ட இட
அமைப்புக்கு இது விளக்கம்
அளிக்கிறது.
இந்த பாதைகள்
ஹரப்பாவை மத்திய ஆசியா, ஆஃப்கானிஸ்தான்
மற்றும் ஜம்முவோடு இணைக்கின்றன.
ஹரப்பாவின் மேம்பட்ட நிலை,
தொலைதூர நாடுகளில் இருந்து
உயர்தர பொருட்களை வாங்கக்கூடிய
அதன் திறனோடு தொடர்பு
உடையது.
|
1922 ஆம்
ஆண்டு ஜி.டி.பேனர்ஜி
மற்றும் சர் ஜான்
மார்சர் என்பவர்களால் சிந்துநதிக்கரையில் மொஹன்ஜொ-தாரோ
நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹரப்பா
நாகரிகத்தில் இதுவே மிகப்பெரிய
இடம் ஆகும்.
மொஹன்ஜொ-தாரோவில்
குசான் காலகட்டத்தை சார்ந்த
ஒரு புத்த மடத்திற்கு
கீழே குடியிருப்புகள் இருந்தன.
அக்காலத்தில் இருந்து
இந்த பண்டை நகரங்களின்
நாகரிகத்தில் எஞ்சிய பொருட்கள்
சிந்து சமவெளியில் மட்டுமே
கிடைக்கப்பெற்றதால், இது சிந்து
சமவெளி நாகரிகம் என்று
பெயர்பெற்றது.
|
![]()
ஸ்ரீ ஜி.டி.
பேனர்ஜீ
|
சிந்து சமவெளியில்
கண்டெடுக்கப்பட்ட நகரங்களை
போன்ற பல நகரங்கள்
இந்தியாவின் வடக்கு மற்றும்
மேற்கு பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நகரங்களில் வாழ்க்கை
முறை ஹரப்பாவை போன்று
இருப்பதால் சிந்து சமவெளி
நாகரிகம் தற்போது ஹரப்பா
கலாச்சாரம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நகரங்களில்
ஒன்று சண்டிகர் அருகே
உள்ள ரூபாரிலும், மற்றொன்று
அஹமதாபாத் அருகே உள்ள
லோதலிலும், மூன்றாவது ராஜஸ்தானில்
உள்ள காலிபங்கனிலும், மற்றொன்று
சிந்துவில் உள்ள கோட்
டிஜியிலும் இருக்கின்றது.
|
![]() |
1947 ஆம்
ஆண்டு இந்தியா பிரிக்கப்பட்ட போது இந்த
நாகரிகத்தை சார்ந்த 40 இடங்கள்
மட்டுமே அறியப்பட்டு இருந்தன.
இப்போது இந்தியாவின்
பல பகுதிகளில் இருந்து
இந்த கலாச்சாரத்தை சார்ந்த
1400 குடியிருப்புகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த 1400 இடங்களில்
925 குடியிருப்புகள் இந்தியாவிலும்,
475 குடியிருப்புகள் பாகிஸ்தானிலும் இருக்கின்றன.
|
மக்கள் முந்தைய
கற்கால வாழ்க்கையை விட
மேம்பட்ட வாழ்க்கயை வாழ்ந்து
வந்தார்கள் என்பதால் இது
நாகரிகம் என்று அழைக்கப்படுகின்றது.
நகரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு இருந்தன, ஹரப்பாவில்
வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு
பெற்று இருந்தனர். படம்
போன்ற குறியீடுகளில் அவர்களுடைய
மொழி இருந்தது, அது
’படவெழுத்து’
என்று அழைக்கபடுகின்றது.
|
ஆசியா மற்றும்
ஆப்பிரிக்காவின் பிற
பகுதிகளில் நாகரிகம் வளர்ச்சி
அடைந்த காலத்தில் ஹரப்பா
நாகரிகமும் வளர்ச்சி அடைந்தது.
குறிப்பாக நைல் நதி,
யூபிரதீஸ், டைகிரிஸ் மற்றும்
ஹுவாங் ஹோ ஆகிய
பகுதிகளில் அதே சமயத்தில்
நாகரிகம் வளர்ச்சி அடைந்தது.
|
ஏறத்தாழ கி.மு.
2500ல் ஹரப்பா கலாச்சாரம்
முக்கியத்துவம் அடைந்தது.
முந்தைய ஹரப்பா
காலகட்டம்: கி.மு. 3500-2600
முதிர்ச்சி அடைந்த
ஹரப்பா காலகட்டம்: கி.மு.
2600-1900
பிந்தைய ஹரப்பா
காலகட்டம்: கி.மு.
1900-1300.
|
ஹரப்பா
கலாச்சாரம் பரவி இருந்த
இடங்கள் :
சிந்து,
பாலுகிஷ்தானில் உள்ள சுட்ககென்டோர்(மக்ரான் கடற்கரை
(பாகிஸ்தான் – ஈரான் எல்லை)
ஏறத்தாழ
பஞ்சாப் முழுவதும் (கிழக்கு
மற்றும் மேற்கு), ஹரியானா;
மேற்கு
உத்திரபிரதேசம் ( மீரட்
மாநகரை சார்ந்த ஆலம்கிர்பூர்);
ஜம்மூ
( அக்னூர் மாநகரை சார்ந்த
மண்டா),
வடக்கு
மஹாராஷ்ட்ரா ( அஹ்மத்நகர்
மாநரை சார்ந்த தாய்மாபாத்);
வடக்கு
ராஜஸ்தான், மற்றும் குஜராத்.
|
ஆறுகளின் அடிப்படையில்
ஹரப்பா குடியிருப்புகள் பரவியிருக்கும் விதம்:
1.
40 குடியிருப்பு பகுதிகள்
சிந்துவிலும் அதன் கிளைகளிலும்
இடம்பெற்று இருக்கின்றன.
2.
அதிகபட்சமாக 1100
குடியிருப்பு பகுதிகள் (80%) சிந்துவுக்கும் கங்கைக்கும் இடையே
இருக்கும் பெரிய சமவெளியில்
இருக்கின்றன, இங்கே முக்கியமாக
சரஸ்வதி நதி அமைப்பு
மட்டுமே இடம்பெற்று இருக்கிறது,
தற்போது அது வரண்டுவிட்டது.
3. சரஸ்வதி
நதி அமைப்பை தவிற
250 குடியிருப்பு பகுதிகள் இந்தியாவில்
இருக்கின்றன, அவற்றில் பல
குஜராத்திலும், சில மஹராஷ்ட்ராவிலும் இருக்கின்றன.
|
மேற்கண்ட பரப்புகளில்
இருந்து ஹரப்பா நாகரிகம்
சிந்து நதியை அல்ல
கங்கை நதிக்கும், சிந்து
சந்திக்கும் இடையே இருக்கும்
சரஸ்வதி நதி அமைப்பையே
மையமாக கொண்டு இருக்கிறது
என்பது தெளிவாகிறது.
எனவே அறிஞர்கள்
இதனை சிந்து-சரஸ்வதி
நாகரிகம் என்று அழைக்கின்றனர்.
|
எகிப்திலே இந்த
காலகட்டத்தில் பிரமிடுகளை
கட்டிய பார்வோன்களின் நாகரிகம்
இருந்தது. இப்போது ஈராக்
என்று அழைக்கப்படும் இடத்திலே
சுமேரியன் நாகரிகம் இருந்தது
(மெசபொத்தாமிய நாகரிகம்).
ஹரப்பாவில் இருந்த மக்கள்
சுமேர் (தெற்கு ஈராக்கில்
உள்ள ஒரு நகரம்)
மக்களிடம் வணிக தொடர்புகள்
வைத்து இருந்தார்கள்.
|
முந்தைய ஹரப்பா இடங்கள்:
·
மெர்கார்: பாலுகிஸ்த்னில் இருக்கிறது
·
முன்டிகாக் தெற்கு
ஆஃப்கானிஷ்தானில் இருக்கிறது.
ஒரு அரண்மனையும் கோவிலும்
கண்டுபிடிக்கப்பட்டன. மட்பாண்டங்கள் சுத்திகரிக்கப்பட்டு, அதன்
மீது அலங்காரமாக பறவைகள், எருதுகள் மற்றும்
பைப்பல் மரங்கள் ஆகியவை
சிவப்பு பட்டையிலே கருப்பு
மையினால் சித்தரிக்கப்பட்டு இருந்தன.
·
டாம்ப் சதாத்:
பாலுகிஸ்தான் மாநிலத்தில் உள்ள
கிவிட்டா சமவெளியில் இது
அமைந்துள்ளது, முன்டிகாகில் இடம்பெற்று
உள்ள வளர்ச்சிகள் இங்கும்
இடம்பெற்று இருந்தன. களிமண்
பொத்தான் – முத்திரைகள், செம்பு
கத்தி வாள்கள், எலும்பு
கருவிகள் மற்றும் வண்ணம்
பூசப்பட்ட பல வகையான
மட்பாண்டங்கள் இந்த
இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
|
![]()
ஹரப்பாவின் மட்பாண்டங்கள்
|
காகர்/ஹாக்ரா-சிந்து அச்சு:
·
அம்ரி: முதன்முதலில் 1929
ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய
ஹரப்பா இடம் இது
தான். சிந்து நதியின்
அருகே உள்ள வளமான
வண்டல் நிலத்தில் இது
அமைந்துள்ளது. கைகளால் செய்யப்பட்ட
மட்பாண்டங்கள், ஒரே நிற
மட்பாண்டங்கள், நன்கு வண்ணம்
பூசபட்ட மட்பாண்டங்கள், இந்திய
திமிலுடைய காளைகளால் அலங்கரிக்கப்பட்ட சர்க்கரத்தினால் செய்யப்பட்ட
மட்பாண்ட்கள்ங்கள் வரை
சிந்து சமவெளி மட்பாண்ட
பாரம்பரியத்தின் வளர்ச்சியை
அம்ரி வெளிப்படுத்துகின்றது.
·
கோட் டிஜி:
இது மொஹன்ஜொ-தாரோவுக்கு
எதிரே சிந்து நதியின்
இடப்பக்க கரையிலே அமைந்து
இருக்கிறது.
·
கும்லா:
இது கோமல் சமவெளியில்
அமைந்து உள்ளது.
·
ரெஹ்மான் தேரி
·
லேவான் மற்றும்
தாராகாய் கிவிலா.
|
![]()
கோட் டிஜி
|
ஹக்ரா-சிந்து
அச்சின் புவியியல் கண்ணோட்டம்:
|
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா:
·
ஹரப்பா.
·
காலிபங்கன்:
வடக்கு ராஜஸ்தானில் தற்போது
வரண்டுவிட்ட காகர் நதியிலே
அமைந்து இருக்கிறது. விவசாயத்திற்காக ஏர்களை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன.
·
பானாவாலி
& குணால்: ஹரியானாவில்
உள்ள ஹிசாலிர் மாநகரத்தில்
தற்போது வரண்டுவிட்ட காகர்
மற்றும் சரஸ்வதியிலே இந்த
முந்தைய ஹரப்பா இடம்
அமைந்துள்ளது.
ஹரியானாவில் உள்ள
ஏனைய பிற முந்தைய
ஹரப்பா இடங்கள் சிஸ்வால்,
பாலு, சோதி பாரா
உள்ளிட்டவை.
|
சுற்றுச்சூழல்:
அக்காலத்திலே இந்தியாவின்
வடக்கு மற்றும் மேற்கு
பகுதிகள் (தற்போது உள்ள
பாகிஸ்தான் உட்பட) காடுகளால்
சூழப்பட்டு இருந்தன. வானிலை
உலர்வாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது.
இப்போது இருப்பதை போல
சிந்துவும், ராஜஸ்தானும் அப்போது
பாலைவனமாக இருக்கவில்லை.
|
இந்த இடங்களில்
வாழ்ந்த மனிதர்கள் புலி,
யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற காட்டு
விலங்குகளையே அறிந்து இருந்தார்கள்.
|
செம்மரி
ஆடு மற்றும் வெள்ளாடு
தவிற, திமில் உடைய
எருதுகளையும் வீட்டிலே வளர்த்ததாக
தெரிகிறது. பல குடியிருப்பு
பகுதிகளில் காட்டுப்பன்றிகள், எருமை
மாடுகள், யானைகள் மற்றும்
ஒட்டகங்களின் எழும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
ஹரப்பா
மக்கள் குதிரைகளை அறிந்தது
இல்லை என்று தோன்றுகிறது.
|
காடுகள் விரகுகளை
கொடுத்தன, அவை செங்கற்சூளையில் பயன்படுத்தபட்டு செங்கல்கள்
உருவாக்கப்பட்டன, அவற்றை வைத்து
நகரங்களில் உள்ள கட்டிடங்கள்
கட்டபட்டன. படகுகள் செய்யவும்
மரங்கள் பயன்படுத்தப்பட்டன.
|
நிலம் மிகவும்
வளமானதாக இருந்தது. வாற்கோதுமையும்,
கோதுமையும் அதிகமாக பயிர்செய்யப்பட்டதாக தெரிகிறது. நிலங்கள்
உழப்பட்டு இருக்கின்றன, எனவே,
விளைச்சல் அதிகமாக இருந்தது.
நதிகளில் இருந்து வரும்
வாய்க்கால் நீரின் மூலமாக
பாசனம் நடைபெற்றது.
|
நகரங்களில் வாழ்ந்த
மக்கள் நிலங்களில் விவசாயம்
செய்யவில்லை. பல்வேறு பொருட்களை
உருவாக்கி பண்ட மாற்றம்
செய்ததன் மூலமாக வாழ்க்கை
நடத்திய கலைஞர்களாகவும், வணிகர்களாகவுமே அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் பாசிகள், ஆடைகள்
போன்ற கைவினைப் பொருட்களை
செய்தனர், அவற்றுள் சில
ஈராக்கில் உள்ள சுமேர்
போன்ற தூர தேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
|
நகரங்களும் அங்குள்ள கட்டிடங்களும்:
மொஹன்ஜொ-தாரோ
மற்றும் ஹரப்பா ஆகிய
நகரங்கள் இரண்டு பகுதிகளாக
பிரிக்கப்பட்டு இருக்கின்றன
::
1.
மேல் பகுதி: உயர்த்தப்பட்ட மேடைகளில்
‘கோட்டை’ கட்டப்பட்டது. இந்த
பகுதியில் பொது கட்டிடங்கள்,
களஞ்சியங்கள், முக்கியமான தொழிற்கூடங்கள் மற்றும் சமய
வழிபாட்டு தளங்கள் ஆகியவை
உள்ளடங்கி இருந்தன.
2.
கீழ் பகுதி:
இங்கே வாழ்ந்த மக்கள்
தங்கள் குல தொழில்களை
செய்து வந்தனர்.
நகரம் தாக்குதலுக்கு உட்படும் போதும்,
வெள்ள அபாயம் ஏற்படும்
போதும், கீழ் நகரத்தில்
வசித்தவர்கள் கோட்டைகளில் அடைக்கலம்
புகுந்தனர்.
|
மொஹன்ஜொ-தாரோ
கோட்டை
|
ஹரப்பாவின் கோட்டையில் இருந்த களஞ்சியங்கள்:
ஹரப்பாவின்
பெயர்பெற்ற கட்டிடங்களில் ஒன்று
மகா களஞ்சியம்.
மிகவும் விலையுயர்ந்த
கட்டிடங்கள் சதுர அமைப்பிலே
ஆற்றின் அருகே அமைந்து
இருந்தன.
களஞ்சியங்களில் பயிர்களை
சேமித்து வைத்து, படகுகள்
மூலமாக ஆற்றிலே கொண்டு
செல்வது மளிவாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததால் இதற்கு
குறைவான செலவே தேவைப்பட்டது.
|
உலை
:
இங்கே உலோக
வேலை செய்கிறவர்கள் செம்பு,
வெண்கலம், ஈயம் மற்றும்
வெள்ளீயம் போன்ற பல்வேறு
பொருட்களை உருவாக்கினார்கள்.
இந்த பகுதியில்
குயவர்களும் வாழ்ந்து வந்தார்கள்.
.
தொழிற்சாலைக்கு அருகே
தொழிலாளர்கள் அனைவரும் சிறு
குடியிருப்புகளில் வசித்து
வந்தார்கள்.
|
அகழியினால் பாதுகாக்கப்பட்ட மொஹன்ஜொ-தாரோ
கோட்டையில் மற்ற கட்டிடங்களும் இருந்தன. இவற்றுள்
மிகவும் பிரசித்தமான கட்டிடம்
மகா குளியலறை.
|
மகா
குளியலறை:
·
செங்கல்லினால் கட்டப்பட்ட
இந்த கட்டிடம் 12 மீ.
க்கு 7 மீ அளவிலே
3 மீ ஆழம் உடையதாக
இருக்கிறது.
·
இரண்டு முனைகளில்
இருந்தும் படிகள் மூலமாக
இந்த இடத்தை அணுகலாம்.
·
இந்த குளியலறையின்
அடிப்பகுதியில் இருந்து
நீர் வெளியேறாமல் தடுக்க
நிலக்கீல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
·
பக்கத்து அறையில்
இருக்கும் பெரிய கிணற்றில்
இருந்து தண்ணீர் இங்கே
அனுப்பப்படுகின்றது.
·
தண்ணீரை வெளியேற்றுவதற்கு கழிவுநீர்வெளியேற்றும் வசதியும்
இருந்தது.
·
குளியலறையை சுற்றிலும்
முகப்புகளும், அடுக்கு அடுக்கான
அறைகளும் இருந்தன.
|
![]()
மொஹன்ஜொ-தாரோவின்
மகா குளியலறை
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “மொஹன்ஜொ-தாரோவில் இருந்த மகா குளியலறையின் எஞ்சிய பகுதிகள்” பக்கம் 27ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
மொஹன்ஜொ-தாரோ
மேட்டில் இருந்த கோட்டையில்
காணப்பட்ட களஞ்சியத்தில் 27 செங்கற்கட்டி
வேலைப்பாடு தொகுதிகளும், அவற்றின்
குறுக்கே காற்றுவெளியேறும் வடிகால்களும்
இருந்தன. களஞ்சியத்தின் கீழே செங்கற்கள்
அடுக்கும் இடங்கள் இருக்கின்றன,
அங்கிருந்து பயிர்கள் கோட்டைக்குள்
தூக்கி செல்லப்பட்டு சேமிக்கபடுகின்றன.
|
மகா
குளியலறையின் மறுபக்கத்திலே ஒரு
நீண்ட கட்டிடம் இருக்கின்றது
(230 x 78 அடி),
அது மிக உயரிய
அதிகாரிகளின் வசிப்பிடம் என்று
அடையாளம் காணப்பட்டு உள்ளது.
அங்கே கூரை உடைய
தாழ்வாரங்கள் மூன்றின் திறப்பிலே
33 சதுர
அடி அளவில் ஒரு
திறந்த முகப்பு இருக்கிறது.
|
ஹரப்பா நகரங்களில்
மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள்
ஆராய்ச்சிகளின் மூலமாக
அந்த நகரத்தின் பல்வேறு
நுழைவாயில்களில், பெரிய நுழைவாயில்
கதவுகள் இருந்தது தெரிய
வந்துள்ளது. இந்த நுழைவாயில்
கதவுகள் உள் கட்டமைப்பில்
இருந்தும் பார்க்ககூடியதாக இருந்தன.
தோலவீராவில் ஒரு
பெரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளை ஜிப்சம் பிசினால்
செய்யப்பட்டு, மர கட்டையில்
வைக்கப்பட்ட ஒரு விழுந்துபோன
அடையாள பலகை அது.
அந்த கல்வெட்டில்
இருந்த எழுத்துக்கள், எழுதுவதற்கான
மிகப்பெரிய உதாரணங்கள்.
பெயரையோ அல்லது
பதவியையோ குறிக்கும் பத்து
குறியீடுகள் அதில் இருந்தன,
அவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ
37 செ.மீ.
உயரமும், 25 முதல் 27 செ.மீ
அகலமும் இருந்தன.
|
வீடு:
தெருக்கள் நேராகவும்,
ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாகவும் செல்லுமாறு நன்கு
திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு
இருந்தது மொஹன்ஜொ-தாரோவின்
கீழ் நகரம்.
நவீன நகரங்களில்
இருக்கும் பெரிய வீதிகளை
போல வீதிகள் மிகவும்
அகலமாக இருந்தன, பிரதான
வீதி 10 மீ அகலம்
உடையதாக இருந்தது. வீதியின்
இரண்டு பக்கங்களிலும் வீடுகள்
கட்டப்பட்டு இருந்தன. பெரும்பான்மையான வீடுகளில் குறைந்தபட்சம் இரண்டு அடுக்குகளாவது இருந்தன.
|
·
வீடுகள்
செங்கல்லினால் கட்டப்பட்டு இருந்தன. அவற்றுக்கு கெட்டியான, வலிமையான சுவர்கள் இருந்தன. அவை சாந்து பூசப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு இருந்தன.
·
கூரைகள்
தட்டையாகவும், குறைந்த ஜன்னல்களையும், அதிகமான கதவுகளை உடையனவாகவும் இருந்தன, அவை அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டு இருந்தன.
·
சமையல்
அறையில் நெருப்புக்கான இடமும், தானியங்களையும், எண்ணெயயும் சேகரித்து வைக்க பெரிய ஜாடிகளும் இருந்தன.
·
குளியலறைகள்
வீட்டின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு இருந்தன, கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள், தெருவில் இருக்கும் பொது சாக்கடையோடு இணைக்கபட்டும் இருந்தன.
·
தெரு
சாக்கடை தெரு ஓரத்தில் ஓடிக்கொண்டு இருந்தன, அவை தூய்மையாக இருப்பதற்காக செங்ககற்களால் ஓரத்தில் கட்டி வைத்து இருந்தனர், சில சாக்கடைகள் கற்பலகைகளினால் மூடப்பட்டும் இருந்தன.
·
மனைவிகள்
வாசனை திரவியங்களை அறைக்க பயன்படுத்திய ஆட்டுக்கல் மற்றும் குழவிகள் வைக்கப்பட்டிருந்த முகப்பிலே அப்பம் சுடுவதற்கான கொப்பரை ஒன்றும் இருந்தது. ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற வீட்டு வளர்ப்பு மிருகங்களும் அங்கே வைக்கப்பட்டு இருந்தன.
·
சில
வீடுகள் தங்கள் சொந்த கிணறுகளை பயன்படுத்தினார்கள்.
இந்த வீடுகள்
வணிகர்களுக்கும், வெளியூர்களில் இருந்தவர்களுக்கும் சொந்தமானவை.
களஞ்சியங்களிலும், செங்கற்சூழைகளிலும் பணிசெய்த ஏழை
தொழிலாளர்களின் ஒற்றை
அறை வீடுகளும் அங்கே
இருந்தன.
|
பண்டைகால இந்தியா வகுப்பு
VI என்சிஇஆர்டி புத்தகம்
அத்தியாயம் 2, “காலிபங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட
கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகள்” பக்கம்
28ல் இருக்கும் படத்தை
இணைக்கவும்.
|
இந்த நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட வீடுகளில் மூன்று
வித்தியாசமான சமுதாய வகுப்புகள்
இருந்தன:
1.
ஆட்சிசெய்த மக்கள்,
அவர்கள் கோட்டை பகுதியில்
வாழ்ந்தது போல் தெரிகின்றது.
2.
பணக்கார வணிகர்களும்,
மற்ற மக்களும், இவர்கள்
கீழ் நகரத்தில் வாழ்ந்தனர்.
3.
ஏழை தொழிலாளர்கள்.
நகரங்களில் இருந்த
இந்த குழுக்களை தவிற,
நகரங்களுக்காக உணவுப்பொருட்களை விளைவித்த விவசாயிகளும்
சுற்றுப்புறத்தில் இருந்தார்கள்.
|
நாட்டுப்புறங்களில் அலைந்து
திரிந்து வாழ்ந்து வந்த
இடையர்கள் இருந்தார்கள், அவர்கள்
சமுதாயங்களுக்கு இடையே
இணைப்பை உருவாக்கினார்கள். தங்கள்
கால்நடைகளை மேய்ப்பதற்காக அழைத்துச்
செல்லும் போது அவர்கள்
சில வணிக பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.
|
உணவு:
கோதுமை மற்றும்
வாற்கோதுமை மாவுகளில் வேகவைத்த
அப்பங்களை மக்கள் சாப்பிட்டார்கள்,
அவர்கள் மாமிசத்தையும் மீனையும்
கூட சாப்பிட்டார்கள்.
அவர்களுக்கு பழங்களை
மிகவும் பிடிக்கும், குறிப்பாக
மாதுளை மற்றும் வாழைப்பழங்களை விரும்பினார்கள்.
|
ஆடைகள்:
களிமண் ராட்டைகள்
கண்டுபிடிக்கப்பட்டது, வீட்டில் உள்ள
மகளிர் பஞ்சு நெசவு
செய்வதிலும், நூல் நெய்வதிலும்
ஈடுபட்டதை வலியுறுத்துகின்றது.
பெண்கள் குட்டைப்பாவாடை அணிந்து இருந்தார்கள்,
அதை அரைக்கச்சையை கொண்டு
இடுப்பிலே அணிந்து இருந்தார்கள்.
ஆண்கள் தங்களை
சுற்றிலும் பெரிய துணிகளை
சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.
ஆண்கள், பெண்கள்
ஆகிய இருபாலருமே நகைகளை
விரும்பினார்கள்.
ஆண்கள் தாயத்துகளை
அணிந்து இருந்தார்கள், பெண்கள்
சிம்பங்களையும், கழுத்துமாலைகளையும் அணிந்து
இருந்தார்கள்.
முத்துக்களினாலும், தங்கத்தினாலும்,
வெள்ளியினாலும் நகைகள்
செய்யப்பட்டு இருந்தன.
|
உலோகக்கலவைகளின் அடிப்படையில்
தங்கம் கர்நாடகாவில் இருந்து
வந்திருக்கும் என்று
அறிவுறுத்தப்படுகின்றது.
|
கேளிக்கைகளும் பொம்மைகளும்:
·
நவீன மாட்டு
வண்டிகளை போன்ற சிறிய
களிமண் வண்டிகள். இவை
மக்கள் பயணம் செல்வதற்காக
எருதுகளால் இழுத்துச் செல்லப்படும்
வண்டிகள்.
·
மொஹன்ஜொ-தாரோவில்
கண்டுபிடிக்கப்பட்ட நிர்வாணமாக
ஆடும் வெண்கல சிலையே
ஹரப்பா நாகரிகத்தின் புகழ்பெற்ற
கலைப்பொருள் ஆகும்.
தலையை பின்னே இழுத்துக்கொண்டு, செருகிய கண்களோடு, வலது கையை இடுப்பிலே வைத்துக்கொண்டு, இடது கையை தொங்கவிட்டுக்கொண்டு இருக்கும் சிலை, நடனம் ஆடும் நிலையில் அந்த சிலை இருக்கிறது. அவள் அதிகமான வளையல்களை அணிந்து இருக்கிறாள், அவள் கூந்தலை கொண்டையிட்டு இருக்கிறாள். ஹரப்பா கலைகளில் இது ஒரு சிறப்பான கலைப்பொருளாக கருதப்படுகின்றது. |
![]()
சிறிய களிமண்
வண்டிகள்
|
![]()
வெண்கல நடனமாடும்
சிலை
|
பறவைகள் மற்றும்
எல்லா விதமான ஊரும்
பிராணிகளின் வடிவங்களிலும் ஊதும்
குழல்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
குழந்தைகளிடயே கோலிகுண்டுகளும் பிரபலமாக இருந்தன.
சிறுமிகளுக்கான பொம்மைகளும்
இருந்தன. வயதில் பெரியவர்கள்
சூதாடி மகிழ்ந்தனர்.
|
தொழில்கள்:
நூல் நூற்பதும்,
பஞ்சு மற்றும் கம்பளியை
நெசவு செய்வதும் மக்களுடைய
தொழிகளில் ஒன்றாக இருந்தது.
ஹரப்பா மக்கள்
ஆடைகளை பயன்படுத்தினார்கள். பெர்சிய
வளைகுடா மற்றும் சுமேர்
வழியாக ஆடைகள் ஏற்றுமதியும்
செய்யப்பட்டன.
|
குயவர்கள் மற்ற
எல்லாரைவிடவும் அதிக
அலுவலாக இருந்தார்கள், அழகான
மட்பாண்டங்களை உருவாக்கினார்கள்.
பெரும்பான்மையான மட்பாண்டங்கள் சிவப்பு நிறத்தில்
இருந்தன. அவற்றின் மீது
கருப்பு கோடுகள், புள்ளிகள்,
வடிவங்கள், மரம், இலை,
மற்றும் விலங்குகள் போன
வடிவங்கள் வண்ணம் பூசப்பட்டு
இருந்தன.
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “லோத்தலில் கண்டுபிடிக்கபட்ட வண்ணம்பூசிய ஜாடி” பக்கம் 31ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
மாலைகளும் தாயத்துகளும்
தயாரிப்பது மிகவும் பிரபலமான
வேலை.
மாலைகள் களிமண்,
கல், பிசின், சிப்பி
மற்றும் தந்தங்களில் இருந்து
உருவாக்கப்பட்டன.
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “மொஹனஜொ-தாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகள்” பக்கம் 32ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
உலோக வேலைகள்:
ஈட்டிகள், கத்திகள்,
கோடரிகள், தூண்டில் ஊசிகள்
மற்றும் சவரக்கத்திகள் போன்றவை
செம்பு மற்றும் வெண்கல
கருவிகளும் ஆயுதங்களும் செய்யப்பட்டன.
மட்பாண்டங்களை போன்ற
உருவத்திலேயே வீட்டிலே உள்ள
பாத்திரங்கள் உலோக தகடுகளால்
செய்யப்பட்டு இருந்தன.
|
மொஹன்ஜொ-தாரோவில்
மாவுக்கல்லிலே செய்யப்பட்ட
தட்டையான சதுர அச்சுகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
மாவுக்கல் சாஹிர்-இ-சக்தா
மற்றும் கீர்தார் மலைகளில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
முத்திரையின் ஒரு
பக்கம் பொதுவாக எருது,
மரம் அல்லது ஒரு
காட்சி வடிவம் இருக்கும்,
படத்திற்கு மேலே ஒரு
வரி படவெழுத்து இருக்கும்
(ஹரப்பா
மக்கள் பயன்படுத்திய சித்திரம்
போன்ற குறியீடுகள்)
வணிகர்களும், வியாபாரிகளும் தங்கள் சரக்குகளை
முத்திரையிட இந்த முத்திரைகளை
பயன்படுத்தினார்கள்.
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “ஹரப்பா கலாச்சாரத்தின் முத்திரைகள்” *திமிலுள்ள எருதுகள் & * காண்டாமிருகங்கள் பக்கம் 32ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
வணிகம்:
ஹரப்பா மக்கள்
சுமேர் மக்களோடும், பெரிய
வளைகுடாவில் இருந்தோர்களோடும் வணிக
தொடர்பு வைத்திருந்தனர்.
ஈராக்கில் கிடைத்த
முத்திரைகள் மற்றும் பொருட்களில்
இருந்து இது தெளிவுபெறுகின்றது.
சரக்குகளை கப்பலேற்றுவதற்கு லோத்தல் முக்கிய தளமாக இருந்தது.
(கேம்பே
வளைகுடாவின் கரையோர நிலப்பரப்பில் லோத்தல் அமைந்துள்ளது)
|
பண்டைகால இந்தியா வகுப்பு XI என்சிஇஆர்டி புத்தகம் படம் 8.5, “லோத்தலில் உள்ள கப்பல் பட்டரை” பக்கம் 70ல் இருக்கும் படத்தை இணைக்கவும்.
|
பல்வேறு எடைகளும்
அளவீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன, அவை
அனைத்தும் துள்ளியமாக இருந்தன.
எடைகள் 1,2,4,8 முதல்
64 வரையும், பிறகு 160 வரையும்
செல்கின்றன, அங்கிருந்து பதினாறு
புள்ளியியல் பெருக்கல்களாக செல்கின்றது::
320, 640, 6400(1600x4), 8000(1600x5), மற்றும்
128000(1600x8).
16 மற்றும்
அதன் பெருக்கல்களின் பாரம்பரியம்
இந்தியாவில் 1950 ஆம்
ஆண்டு வரை தொடர்ந்தது.
பதினாறு சடாங்க்
ஒரு சேர் எனவும்,
16 அனாக்கள் ஒரு ரூபாயாகவும்
இருந்தன.
நீளம் ஒரு
37.6 செ.மீ
உடைய ஒரு அடியினாலும்,
51.8 முதல் 53.6 செ.மீ
உடைய ஒரு கியூபிட்டினாலும் அளக்கப்பட்டது.
|
வடக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களோடு
அவர்கள் வணிக தொடர்பு
வைத்திருந்தார்கள், அங்கிருந்து ஹரப்பா
மக்கள் பிரபலியமான நீலக்கற்களை
கொண்டு வந்தார்கள்: லாபிஸ்
லாசுலி
|
சுட்காஜென்டர்:
பாகிஸ்தான் ஈரான்
எல்லைக்கு அருகே பாலுஸ்தானில்
மக்ரான் கடற்கரை அருகே
இருக்கும் இந்த நகரை
சுற்றி பாதுகாப்பு சுவர்கள்
இருக்கின்றன. துரைமுகம் அருகே
இருக்கும் வணிக மையமாக
இது செயல்பட்டது.
|
சமயம்:
ஹரப்பாவின் அரசாங்கம்,
சமுதாயம் மற்றும் சமயத்தை
வெளிப்படுத்தும் கல்வெட்டுகள்
எதும் இல்லை.
ஆதாரங்கள் பின்வருமாறு:
·
தாய் தெய்வத்தின்
களிமண் சிலைகள் கிடைக்கெப்பெற்று உள்ளன.
·
சிறிய கல்
முத்திரையில் அமர்ந்திருக்கும் ஆண்
தெய்வத்தின் சித்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
·
பைப்பல் மரம்
தெய்வீகதன்மை உடையதாக கருதப்பட்டதாக தெரிகிறது, முத்திரைகளில் இதன் படம்
அடிக்கடி இடம்பெற்றது.
·
எருதுகளையும் அவர்கள்
தெய்வீகதன்மை உடையதாக கருதினார்கள்.
இது அவர்களுடைய
சமயம், முக்கியமாக உள்நாட்டில்
வளர்ந்ததையும், “இந்துமதத்தின் வம்சாவழியிலே
முன்தோன்றிய” மதமாகவும் தெரிகிறது.
|
பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் அத்தியாயம் 2, “பசுபதி முத்திரை” மற்றும் ”மொஹென் ஜொதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தாடி வைத்த உருவம்” ஆகியவற்றை பக்கம் 34ல் இருக்கும் படத்தை இணைக்கவும். அதோடு பண்டைகால இந்தியா வகுப்பு VI என்சிஇஆர்டி புத்தகம் படம் 8.11. பக்கம் எண் 77யும் இணைக்கவும்.
|
தனிநபர்கள் பல்வேறு
யோக நிலைகளில் இருப்பது
போன்ற எண்ணற்ற மங்கிய
சிவப்பு நிற சிற்பங்கள்,
ஹரப்பாவை சார்ந்தவர்கள் யோகாசனம்
செய்தார்கள் என்பதை வலியுறுத்துகின்றன.
|
ஹரப்பாவில் சில
மக்கள் இறந்தவர்களை புதைத்தார்கள்,
மற்றும் சிலர் தாழியில்
அடக்கம் செய்தார்கள்.
தாழி அடக்கம் |
![]()
கல்லரைகளில்
வீட்டு மட்பாண்டங்கள், நகைகள்
மற்றும் கண்ணாடிகள் இருந்தன,
அவை இறந்தவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கலாம்.
|
ஹரப்பா மக்களின் வீழ்ச்சி:
ஹரப்பா கலாச்சாரம்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள்
இருந்தது.
கி.மு.
1500 ஆம் ஆண்டில் ஆரியர்கள்
இந்தியாவுக்கு வந்தபோது
ஹரப்பா கலாச்சாரம் அழிவடைந்தது.
அழிவுக்கான காரணம்
தெளிவாக தெரியவில்லை.,
தொடர்ச்சியாக ஏற்பட்ட
வெள்ளம் இதற்கு ஒரு
காரணமாக இருக்கலாம்;
அல்லது
மக்கள் உயிரிழப்பதற்கு காரணமான நொய்
அல்லது கொடுமையான வியாதி
ஏதேனும் ஏற்பட்டு இருக்கலாம்.
வானிலை மாற்றம் அடைந்து,
அந்த நிலப்பகுதி கொஞ்சம்
கொஞ்சமாக வரண்டு, பாலைவனம்
போல் மாறியிருக்கலாம்; அல்லது
நகரங்கள் தாக்கப்பட்டு,
மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
இந்தியாவின் வரலாற்றில்
ஹரப்பா நகரங்களின் வீழ்ச்சி
எதிர்மறையான ஒரு படி.
|
ஹரப்பாவுக்கு பின்
வந்தவர்கள் யாருக்கும் நகர
வாழ்க்கையை பற்றி தெரியாது.
எனவே ஆயிரம்
ஆண்டுகளுக்கு பிறகு தான்
இந்தியாவில் மீண்டும் நகர
வாழ்க்கை தொடங்கியது.
|












