Total Pageviews

Wednesday, May 17, 2017

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் - விளையாட்டின் மூலம் கற்றல்



நோய்களை தடுப்பதும், ஆரோக்கியத்தை வளர்ப்பதுமே மேம்பட்ட உடல்நலனை பெறுவதற்கான வழிகள். தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடங்கிய ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் பெறப்படும் ஊட்டச்சத்து, நம் உடலுக்கு தேவையான முழு சக்தியையும் அளிக்கின்றது. ஊட்டச்சத்துக்கள் தேவையான விகிதத்தில் இல்லாவிட்டால், அது குறைபாட்டிற்கும், மோசமான உடல்நிலைக்கும் வழிவகுக்கும். பெரியோர்களை காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான விகிதத்தில் உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு அத்தியாவசியம் என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சேர்த்து தங்களுடைய ஊட்டச்சத்து தேவைகளை சந்திப்பது என்பதையும் அவர்களுக்கு நன்கு கற்பிக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை போல மோசமான அறிகுறிகள் இல்லாதபோதே, வைட்டமின் பற்றாக்குறையை கண்டுபிடிக்க முடியும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே, அவர்கள் பாடப்புத்தகத்தை தாண்டி யோசித்து, தங்கள் வாழ்வோடு அவற்றை தொடர்புபடுத்தி யோசிக்கும்படி நான் செய்து இருக்கிறேன்.

ஒரு ஆசிரியராக, என் மாணவர்கள் நடுவே ஊட்டச்சத்துமிக்க உணவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நான் எப்போதுமே விருப்பமுடன் இருந்திருக்கிறேன். 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறித்து பாடம் எடுத்த போது, வைட்டமின்கள் குறித்த ஒரு விளையாட்டை உருவாக்கி, அதற்கு தேவையான பொருட்களை நான் ஆயத்தம் செய்தேன்.

இந்த விளையாட்டு உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மீது கவனம்செலுத்துகின்றது. இந்த “வணிக விளையாட்டு” மூலமாக மாணவர்கள் மறைமுகமாக வைட்டமின்கள் கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை நோய்களை குறித்து கற்றுக்கொள்ளலாம். இது என் மாணவர்களுக்கு ஆழமான புரிந்துகொள்ளுதலை அளிக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகள் வீட்டிலும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களோடு இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். சில நேரங்களில் அண்டை வீட்டில் இருக்கும் குழந்தைகளும் இந்த விளையாட்டை விளையாட கிடைக்கும் வாய்ப்பின் மூலமாக பயன் பெறலாம்.


பொருட்கள்
இது என்ன
நோக்கம்
வணிக வரைபடம்
பல்வேறு வைட்டமின்கள் கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் உடைய ஒரு பலகை
பகடையை ஒவ்வொரு முறை உருட்டும்போதும், விளையாடுபவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக
உதவி அட்டை
இந்த அட்டையில் ஆதார படமும், பெயரும், அதோடு அதில் இருக்கும் வைட்டமின் மற்றும் அது தொடர்பான பற்றாக்குறை குறைபாடும் இருக்கின்றது.
விளையாடுகிறவர் கூறிய பதில் சரியா தவறா என்பதை காசாளர் முடிவுசெய்ய உதவுவதற்காக.
சேகரிக்கும் அட்டை
ஐஸ் கிரீம் படம் உடைய ஒரு சிறிய அட்டை
சரியான பதிலுக்கு விளையாடுகிறவர் ஒரு ஐஸ்கிரீம் பெற்றுக்கொள்வார்
பகடை
விளையாடும் கருவி
உருட்டிவிட்டு எண்ணை பெற்று, அதற்கு ஏற்றபடி டோக்கனை நகர்த்துதல்
டோக்கன்
சில படங்கள் உள்ள ஒரு அட்டை, இது விளையாடுகிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும்
விளையாடும் ஒவ்வொருவரும் இதில் ஒன்றை வைத்து இருப்பார். இதை “START” பெட்டியில் வைத்து, பகடையில் உள்ள எண்ணுக்கு ஏற்றவாறு நகர்த்த வேண்டும்.


இந்த விளையாட்டு 6 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது (காலம் 1- பாடம் 2- உணவு பழக்கங்கள்).

எப்படி விளையாடுவது?
நோக்கம்: ஒரு உணவோடு தொடர்பு உடைய சரியான வைட்டமின் மற்றும் அது தொடர்பான பற்றாக்குறை நோயை மாணவர் கண்டுபிடிக்கும் பலகை விளையாட்டு இது.

நிபந்தனைகள்

1. இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக இப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
2. இந்த விளையாட்டை விளையாட ஒரே நேரத்தில் மூன்று பேர் தேவைப்படுவார்கள் - ஒருவர் காசாளர், இருவர் விளையாடுகிறவர்கள் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும் இவ்விளையாட்டில் பங்கேற்கலாம்).
விளையாடுகிறவர்களின் பங்கு
1. காசாளர்:
காசாளர் “உதவும் அட்டைகள்” மற்றும் ”சேகரிக்கும் அட்டைகளை வைத்து இருப்பார்”. அவரே விளையாடுகிறவர்களுக்கான டோக்கன் மற்றும் பணத்தையும் வைத்து இருப்பார்.
2. விளையாடுகிறவர்கள்:
விளையாடுகிறவர்கள் இவற்றை பெற்றுக்கொள்வார்கள்:
1. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட டோக்கன் அட்டை
2. அவர் விளையாட்டை தொடங்குவதற்கு முன்பு காசாளரிடம் இருந்து 20 பண அட்டைகளை பெற்றுக்கொள்வார்.

செயல்முறை
படி 1
விளையாடுகிறவர்கள் அனைவரின் டோக்கன்களும் “START" என்று குறிப்பிடப்பட்டுள்ள தொடக்க புள்ளியில் வைக்கப்படும்.
·                     "ஒன்று” என்கிற எண் கிடைக்கும்வரை விளையாடுகிறவர்கள் பகடையை உருட்டுவார்கள் (’ஒன்று; என்கிற எண் பகடையில் கிடைப்பதற்கான வாய்ப்பே, நுழைவதை தீர்மானிக்கிறது)

படி 2

·                     விளையாடுகிறவர் மீண்டுமாக பகடையை உருட்டுகிறார், பகடையில் அவருக்கு கிடைக்கும் எண்ணுக்கு ஏற்ற கட்டத்தை அவர் வணிக வரைபடத்தில் நகர்த்துகின்றார். உதாரணமாக, விளையாடுகிறவர் ஒருவருக்கு பகடையில் 6 என்கிற எண் கிடைத்தால், அவர் டோக்கனை வணிக வரைபடத்தில் 6வது கட்டத்திற்கு நகர்த்துவார்.
·                     டோக்கன் வைக்கப்பட்ட இடத்தில் இருக்கும் கட்டத்தில் இருக்கும் புகைப்படத்தில் இருந்து, அந்த புகைப்படத்தில் இருக்கும் உணவுப்பொருள் கொடுக்கும் வைட்டமி எது என்று சரியான விடை அளிப்பதன் மூலம் ஒரு சேகரிப்பு அட்டையை விளையாடுபவர் பெற்றுக்கொள்வார்; (எ.கா. டோக்கன் அட்டை பூசனிக்காயில் இருந்தால், அதற்கான பதில் வைட்டமின் ஏ. விளையாடுபவர் சரியான பதிலை அளித்து, காசாளரிடம் இருந்து ஒரு ‘சேகரிப்பு அட்டை’யை பெற்றுக்கொள்வார்.

படி 3

·                     அந்த வைட்டமினுக்கான குறைபாட்டு நோயை விளையாடுகிறவர் சரியாக கூற முடிந்தால் (எ.கா. வைட்டமின் ஏ குறைபாட்டு நோய் - மாலைக் கண்) அவர் மேலும் ஒரு சேகரிப்பு அட்டையை பெற்றுக்கொள்வார்.
·                     வைட்டமினுக்கான பதில் தவறாக இருந்தால், விளையாடுபவர் தொடர்ந்து பகடையினால் விளையாடுவார், ஆனால் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ரூ.5/ (பண அட்டை) ஐ இழப்பார்.
·                     விளையாடுகிறவர் ஒவ்வொருவரும் தன் பணம் முழுவதும் தீர்ந்து, தன் 20 அட்டைகளையும் இழக்கும்வரை விளையாடுவார்.
·                     அதிகமான எண்ணிக்கையில் “சேகரிப்பு அட்டைகள்” வைத்திருக்கும் நபரே வெற்றி பெற்றவர்.

1. நினைவூட்ட வேண்டிய குறிப்புகள்
·                     பகடையில் உள்ள எண்ணின் அடிப்படையில் டோக்கன் நகர்த்தப்படுகின்றது.
·                     சுழற்சி முறையில் விளையாடுகிற ஒவ்வொருவரும் பகடையில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்.
·                     வணிக வரைபடத்தில் இடமிருந்து வலமாக கட்டங்களில் நகர்ந்து இந்த விளையாட்டு தொடர்ந்து விளையாடப்படுகின்றது.
·                     அதிகபட்ச “சேகரிப்பு அட்டைகள்” பெற்ற நபரே இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்.
வணிகத்தின் மூலமாக கற்பதன் பயன்கள்

·                     மாணவர்கள் இவற்றை புரிந்துகொள்வார்கள்
1. உள்ளூரில் கிடைக்கப்பேறும் உணவுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவம்.
2. பல்வேறு வைட்டமின் பற்றாக்குறையினால் ஏற்படும் பற்றாக்குறை நோய்கள்.
·                     மாணவர்கள்
1. நல்ல ஊட்டச்சத்து பழக்கங்களை பயிற்சிசெய்வார்கள்
2. பெற்றோர்/உறவினர்கள்/நண்பர்களிடம் தகவலை பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த வணிக விளையாட்டின் ஒட்டுமொத்த நோக்கமே குழந்தைகளிடம் உற்சாகமான வழியில் கற்றலை கொடுத்து, ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்களை அவர்கள் நினைவுகூர்ந்து, தன் சொந்த ஆரோக்கியமான உணவு பழக்கங்களில் இந்த அறிவை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பது தான்.
இந்த விளையாட்டுக்கு மாற்றுகள்:
·                     தற்போது இருக்கும் படங்கள் மாணவர்களுக்கு பரீட்சையமான பிறகு படங்களை நாம் மாற்றிவிடலாம்.
·                     பரவலான வகையிலான ஊட்டச்சத்துக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான நேர்வரிசைகளும், சாய்வரிசைகளும் சேர்க்கப்படலாம்.
·                     பற்றாக்குறை நோய்களின் அறிகுறிகளை இந்த விளையாட்டின் தொடர்ச்சியாக நாம் கேட்கலாம்.
·                     மற்ற தலைப்புகளுக்கும் இந்த விளையாட்டு மாற்றி அமைக்கப்படலாம்.
·                     ஆசிரியருக்கான இழுக்கும் தாள் (நடு பக்கத்தை பார்க்கவும்)




வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...