Total Pageviews

Tuesday, July 24, 2018

வரலாறு - அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கம்

அரசியலமைப்புச்சட்டம் என்றால் என்ன?
கொடுக்கப்ப்ட்ட நாட்டின் அரசாங்க அமைப்பையும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கு இடையேஏ உள்ள உறவையும் விவரிக்கின்ற சட்டத்தின் ஆற்றல் உடைய ஒரு  சட்டரீதியான ஆவணம் தான் அரசியலமைப்புச்சட்டம்.  
ஒரு நாடு மற்ற நாடுகளுடனும், வேற்று நாட்டவர்களுடனும் எவ்வாறு உறவுகொள்ளும் என்பதையும் ஒரு அரசியலமைப்புச்சட்டம் விவரிக்கலாம்.


ஒரு அரசியலமைப்புச்சட்டம் என்பது அந்த நாட்டின் கருத்துக்களையும் விருப்பங்களையும் பிரதிபலித்து, மதிப்பீடுகளை தூண்டிவிட்டு, அதன் மக்களை ஒன்றாக்கிம் அரசாங்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு அரசியலமைப்புச்சட்டம் என்பது ஒரு நாட்டின் உச்சகட்ட சட்டமும், மற்ற எல்லா சட்டங்களின் சட்டபண்புகளையும் சோதிக்கும்படி எதிரேயுள்ள தரநிலையும் ஆகும்.  இதன் விளைவாக, அரசியலமைப்புச்சட்டத்தின் சலுகைகளுக்கு எதிராக முரண்படுகின்ற எந்த ஒரு சட்டமும் மதிப்பில்லாததும், ஆற்றல் இல்லாததுமாக இருக்கின்றது.  அப்படிப்பட்ட சட்டம்அல்ட்ரா வயர்ஸ்என்று அறிவிக்கப்படுகின்றது.

அல்ட்ரா வயர்ஸ்: அல்ட்ரா வயர்ஸ் என்பது ஒரு லத்தீன் வாக்கியம், இதன் அர்த்தம்அதிகாரத்தை மீறியஎன்பதாகும்.  
ஒருவருடைய சட்டபூர்வமான வல்லமையை அல்லது அதிகாரத்தை மீறியது என்பது இதன் பொருள்.

நம்முடைய அரசியலமைப்புச்சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. 
இந்த நாள் , குடியரசு தினமாக கொண்டாடப்படுகின்றது. 
ஜனவரி 26 ஆம் நாள் அரசியலமைப்புச்சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்ட நாளாக வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனென்றால் 1930 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கிலேயரிடம் இருந்து பூர்ண ஸ்வராஜ்” (முழுமையான சுதந்திரம்) கிடைப்பதை அடையாளபூர்வமாக அறிவித்தது.

மக்களாட்சி , சமூக பொருளாதார நீதி, குடியரசுக்கொள்கை, அரசியல் சுதந்திரங்கள் ஆகிய அடிப்படை கருத்துக்களின் சாராம்சத்தை அரசியலமைப்புச்சட்டத்தின் அத்தியாவசிய கோட்பாடாக பிரபலப்படுத்துவதில் தேசிய இயக்கங்கள் முக்கிய பங்கு வகித்தன.

1885 ல் தோன்றிய இந்திய தேசிய காங்கிரஸ் உண்மையில் முறைப்படி 1920ல் இருந்து காந்தியடிகளின் முயற்சிகளின் காரணமாக முறைப்படி செயலாற்ற தொடங்கியது, அவர் காங்கிரசின் அரசியலமைப்புச்சட்டத்தை தேர்தல் கொள்கையின் அடிப்படையில் மாற்றி அமைத்தது.

1895 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச்சட்ட மசோதா, என்னும் குடியாட்சி மசோதா தோன்றியது, அது கருத்து சுதந்திரம், சட்டத்த்டிற்கு முன்பாக சமத்துவம், சொத்துரிமை , உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை கருத்தரித்தது.  

மாகாண சட்டமன்றங்களின் ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கோரும் அரசியலமைப்புச்சட்ட சீர்திருத்தங்களுக்கான காங்கிரஸ் - முஸ்லீம் லீக் திட்டத்தை 1916 ஆம் ஆண்டின் காங்கிரஸ் - லீக் ஒப்பந்தம் கொண்டுந்தது. 

1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த சீர்திருத்தங்கள் அரசியலமைப்புச்சட்ட சீர்திருத்தங்களின் காலமும், வேகமும் ஆங்கிலேயர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்பதை வலியுறுத்தின.

பிப்ரவரி 1924 ஆம் ஆண்டு, மத்திய சட்டமன்ற சபையில் மோதிலால் நேரு ஒரு தீர்வை அறிமுகம் செய்தார், ஒரு ஆரம்ப தேதியில், முக்கியமான சிறுபான்மையினரின் உரிமைகளையும், நலனையும் காக்கும் நோக்கத்தில், , “இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்கான திட்டம்வகுப்பதற்கான பிரதிநிதித்துவ வட்ட மேச மாநாட்டிற்கு அழைப்புவிடுக்குமாறு அதில் அரசாங்கத்திடம் கோரப்பட்டது. 

இந்த தீர்வுதேசிய கோரிக்கைஎன்று அழைக்கப்பட்டது, அது மத்திய சட்டசபையில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 

ஜூலை 7 ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு, மாநில செயலாளர் லார்ட் பிர்கென்ஹெட், தன்னுடைய உரையை ஆற்றினார்.

இந்தியாவின் மகத்தான மக்களிடையே பொதுவான ஏற்றுக்கொள்ளுதலை நியாயமான அளவில் தன் பின்னே கொண்டு செல்லும் அரசியலமைப்புச்சட்டத்தை அவர்கள் உருவாக்கட்டும்என்று இந்தியர்கள் தங்கள் சொந்த அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க சவால்விட்டார்.

பிர்கென்ஹெட்டின் சவாலுக்கு பதிலளிக்கும்வகையில், இந்திய அரசியலமைப்புச்சட்ட கொள்கையை தீர்மானிக்க அனைத்து இந்திய காங்கிரஸ் மாநாடு மே 1928 ஆம் ஆண்டு மோதிலால் நேருவின் தலைமையில் ஒரு செயற்குழுவை நியமித்து. 
ஆகஸ்டு 10 ஆம் தேதி 1928 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட நேரு அறிக்கை இந்திய அரசியலமைப்புச்சட்ட வரவுக்கான வெளிக்கோட்டை தாக்கல்செய்தது.  
நாட்டிற்கான ஒரு அரசியலமைப்புசட்ட கட்டமைப்பை ஏற்படுத்த இந்தியர்கள் ஏற்படுத்திய முதல் பெரும் முயற்சி இது தான். 

நேரு அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்:
(1)    இந்தியர்கள் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ள தன்னாட்சி அடிப்படையிலான அதிகார நிலை.
(2)    மத்தியிலும் மாநிலங்களிலும் பெரும்பான்மைவகிக்கும் இஸ்லாமியர்களுக்கு இடவொதுக்கீடு அளிக்கின்ற கூட்டுவாக்களர்களுக்கான கோரிக்கை. 
(3)    தனிப்பட்ட வாக்காளரை மறுத்தல்.
(4)    அரசியலமைப்புச்சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பத்து அடிப்படை உரிமைகள் உட்பட பத்தொன்பது அடிப்படை உரிமைகள்.
(5)    மொழிரீதியான மாகாணங்களுக்கான கோரிக்கை.
(6)    இஸ்லாமியர்களின் கலாச்சார மற்றும் சமய உரிமைகளுக்கான முழு பாதுகாப்பு.
(7)    அரசாங்கம் மதத்தில் இருந்து முற்றிலும் பிரிந்து இருக்க வேண்டும்.
(8)    பெரியோர் வாக்குரிமையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபையை கொண்ட இந்திய பாராளுமன்றம் மத்தியில் அமைக்கப்பட. 

·         1934 ஆம் ஆண்டு அரசியல்நிர்ணய சபை என்கிற கருத்து முதல் முறையாக மனபேந்த்ரா நாத் ராயினால் முன்வைக்கபப்ட்டது. 
·         1935, இந்திய தேசிய காங்கிரஸ் முதல் முறையாக அதிகாரபூர்வமாக அரசியல்நிர்ணய சபையை கோரியது.
·         1936-1937 ஆம் ஆண்டுகளின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளிலும் அரசியல்நிர்ணய சபைக்கான கோரிக்கை இடம்பெற்றது.
·         1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு , ஆச்சாரியா க்ரிபாலனியால் உருவாக்கபப்ட்ட வரவு தீர்மானத்தை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது, அதில் இந்திய அரசாங்க சட்டம் 1935 ரத்துசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசியல்நிர்ணய சபை என்றால் என்ன?
அரசியல்நிர்ணய சபை (சிலநேரங்களில் அரசியலமைப்பு மாநாடு அல்லது அரசியல்நிர்ணயமன்ற சபை என்று வழங்கப்படுகின்றது) என்பது ஒரு அரசியலமைப்புச்சட்டத்தை வரைவதற்காக அல்லது ஏற்றுக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

 ஒரு அரசியல்நிர்ணய சபை என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொதுவாக அமைக்கப்படும், ஒரு குறுகிய நேரத்திற்கும் அது நிறைவேற்றப்பட்ட பிறகு அந்த சபை களைக்கப்படும்.

1940 ஆம் ஆண்டு வைசிராய் லின்லித்கௌவினால் ஏற்படுத்தப்பட்டஆகஸ்டு சலுகைமுதல் முறையாக புதிய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்படுவது இந்தியர்களின் முதன்மையான (தனிப்பட்டது இல்லை என்றாலும்) கடமை என்று வலியுறுத்தியது. 

1942 ஆம் ஆண்டு மார்ச், இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களின் வீழ்ச்சியின் தொடக்கத்தில், ஆங்கிலேய அரசாங்கத்தின்  பரிந்துரை அறிவிப்பு வரைவுடன் சர் ஸ்டாஃபர்ட் க்ரிப்ஸ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார், அது இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் (காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்) ஒப்பந்தத்திகுள் வந்தால் (போரின் முடிவில் ) ஏற்றுக்கொள்ளப்பட இருந்தது:
a)      இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்நிர்ணய சபையினால் இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும்;
b)      அரசியலமைப்புச்சட்டம் இந்தியாவுக்கு அதிகார நிலை, ஆங்கிலேய பொதுநலவாய நாடுகளோடு சம பங்களிப்பு ஆகியவற்றை கொடுக்க வேண்டும்;
c)       அனைத்து இந்திய மாகாணங்களும் மாநிலங்களும் உள்ளடங்கிய ஒரு இந்திய ஐக்கியம் இருக்க வேண்டும்; ஆனால்
d)      அரசியலமைப்புச்சட்டத்தை ஏற்காத எந்த ஒரு மாகாணமும் (அல்லது இந்திய மாநிலம்) அக்காலத்தில் இருந்த தன்னுடைய அரசியலமைப்புச்சட்ட நிலையை பெற்றுக்கொள்ல சுதந்திரம் பெறும், அப்படிப்பட்ட இணங்காத மாகாணங்களுடன் ஆங்கிலேய அரசாங்கம் தனிப்பட்ட அரசியலமைப்புச்சட்ட ஏற்பாட்டுக்குள் நுழையலாம்.

ஆனால் இரண்டு கட்சிகளும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள உடன்பட தவறினார்கள், முஸ்லீம் லீக் வலியுறுதியது :
a)      இனரீதியாக இந்தியா இரண்டு தன்னாட்சி நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும், திரு.ஜின்னா குறிப்பிட்டு ஒதுக்கீடு செய்த சில மாகாணங்கள் ஒரு தனிப்பட்ட்ட முஸ்லீம் நாடாக உருவாக்கப்பட்டு, அது பாகிஸ்தான் என்று அழைக்கப்பட வேண்டும்;
b)      ஒரு அரசியல்நிர்ணய சபைக்கு பதிலாக இரண்டு அரசியல்நிர்ணய சபைகள் இருக்க வேண்டும், அதாவது., பாகிஸ்தானை உருவாக்க தனி அரசியல்நிர்ணய சபை வேண்டும்.

க்ரிப்ஸ் பரிதுரைகள் நிராகரிக்கப்பட்ட பிறகு இரண்டு கட்சிகளையும் சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதில் லார்ட் வேவல் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட சிம்லா மாநாடும் உள்ளடங்கும். 
இவை தோல்வியடைந்த பிறகு, ஆங்கிலேய மந்திரி சபை கிரிப்ஸ் உட்பட தன்னுடைய சொந்த உறுப்பினர்கள் மூன்று பேரை அனுப்பி, மற்றும் ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டது.

19 பிப்ரவரி 1946 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம்  மந்திரிசபை மிஷன்ஒன்றை சுதந்திரம் மற்றும் அரசியலமைப்புச்சட்டம் உருவாக்குவதில் தீர்வுகாண இந்தியாவுக்கு அனுப்பியது. 
இந்த மிஷனில் இடம்பெற்றவர்கள்
1)      லார்ட் பெதிக் லாரன்ஸ், இந்தியாவின் மாநில செயலாளர்
2)      சர் ஸ்டாஃபர்ட் க்ரிப்ஸ், வணிக மன்றத்தின் தலைவர்
3)      . வி. அலெக்சாண்டர், கடற்படை நிர்வாகக்குழுவின் முதல் லார்ட்

லார்ட் வேவல், இந்திய வைசிராய், இதில் பங்கெடுக்கவில்லை.
இந்த மிஷன் அரசியல்நிர்ணய சபையின் திட்டத்தை முன்வைத்தது, இது ஏறத்தாழ முஸ்லீம் லீகுக்கு திருப்த்தியளித்தது.


அரசியல்நிர்ணய சபையின் உள்ளடக்கம்
·         மந்திரிசபை மிஷன் திட்டம் என்று அழைக்கப்படும் மந்திரிசபை மிஷனினால் வரையறுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டது.
·         மொத்த எணிக்கை 389 ஆக இருக்க வேண்டும்
                              () 296 இடங்கள் பிரிடிஷ் இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
                                         -292 உறுப்பினர்கள் பதினோரு ஆளுநர் மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும். 
                                         -4 உறுப்பினர்கள் நான்கு தலைமை கமிஷனர்கள் மாகாணங்களில் இருந்து, ஒவ்வொன்றில் இருந்து ஒருஇவர் எடுத்துக்கொள்லப்பட வேண்டும்.
                               (பி)93 இடங்கள் பிரபுத்துவ மாநிலங்களுக்கு.

  • ஒவ்வொரு மாகாணத்திலும், பிரபுத்துவ மாநிலங்களிலும் இருக்கும் இடங்கள் அத மக்கள்த்தொகையை  பொருத்து நியமிக்கப்பட வேண்டும். 
ஒவ்வொரு பத்து லட்சம் மக்கள்த்தொகைக்கும் சராசரியாக ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு பிரிடிஷ் மாகாணத்தின் இட ஒதுக்கீடும் மூன்று முக்கிய சமுதாயங்களாகிய சீக்கியர்கள் முஸ்லீம்கள் மற்றும் பொதுவானவர்கள் (முஸ்லீம் மற்றும் சீக்கியர் அல்லாத அனைவரும்) அவர்களுடைய மக்கள்த்தொகையின் விகிதத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • ஒற்றை மாற்று வாக்குச்சீட்டின் மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைமையின்படி வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும்.
  • பிரபுத்துவ மாநிலங்களின் பிரதிநிதிகள் , பிரபுத்துவ மாநிலங்களின் தலைவர்களினால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
  • அரசியல்நிர்ணய சபை தேர்தல் (பிரிடிஷ் இந்திய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட 296 இடங்களுக்கு) ஜூலை - ஆகஸ்டு 1946 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.  208 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது
                                        -73 இடங்களில் முஸ்லீம் லீக்
                                        -15 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள்
                                        -96 காலியாக இருந்தன, பிரபுத்துவ மாநிலங்கள் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்ததே இதற்கான காரணம்.

அரசியல்நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946  ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. 
இதில் வெறும் 207 உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெற்றனர். 
அரசியல்நிர்ணய சபை கூட்டப்படுவதை தவிர்க்க தவறிய முஸ்லீம் லீக் , இதில் கலந்துகொள்ள மறுத்தது. 
டாக்டர். சச்சிதானந்த் சின்ஹா, மூத்த உறுப்பினர் சபையின் தற்காலிக தலைவராக, பிரெஞ்சு நடைமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
டிசம்பர் 11, 1946 ஆம் ஆண்டு, டாக்டர்.ராஜேந்திர பிரசாத் மற்றும் எச்-சி.முக்கர்ஜீ ஆகியோர் சபையின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
சர் பி.என்.ராவ் சபையின் அரசியலமைப்புச்சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

முதல் கூட்டத்தின்போது அரசியல்நிர்ணய சபையின் உறுப்பினர்கள்

குறிக்கோள்களின் தீர்வு :
ஜவஹர் லால் நேரு வரலாற்று தீர்வை டிசம்பர் 13 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டு நகர்த்தினார். 
அரசியலமைப்பின் கட்டமைப்புக்கான அடிப்படைகளையும், கோட்பாட்டையும் இந்த குறிக்கோல்கள் வரையறுத்தன. 
டிசம்பர் 19ஆம் தேதி வரை இந்த தீர்வுகள் விவாதிக்கப்பட்டன, ஆனால் முஸ்லீம் லீக் மற்றும் பிரபுத்துவ மாநிலங்களின் பிரதிநிதிகள் இணைந்துகொள்வதற்காக இது ஏற்றுக்ககொள்ளப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. 
அடுத்த கூட்டத்தில், இந்த தீர்வு ஜனவரி 22 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு சபையினால் ஏற்றுக்கொள்ளபப்ட்டது. 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அரசியல்நிர்ணய சபை ஒரு அரசாங்க அமைப்பாகவும், புதிய நாட்டிற்கான சட்டவரைவாகவும் மாறியது.

 அரசியல்நிர்ணய சபையின் வேலை ஐந்து நிலைகளாக ஒருங்கிணைக்கப்பட்டது:
(1)    அடிப்படை பிரச்சனைகளில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி செயற்குழுக்கள் கேட்டுக்கொள்ளப்பட்ட்டன.
(2)    அரசியலமைப்புச்சட்ட ஆலோசகர், பி.என்.ராவ் இந்த செயற்குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையிலும், மற்ற நாடுகளின் அரசியலமைப்புச்சட்டம் குறித்த தன்னுடைய ஆய்வையும் வைத்து   ஒரு அரம்பகட்ட வரைவை ஏற்படுத்தினார்.
(3)    டாக்டர் பி ஆர். அம்பேத்கார் தலைமையிலான வரையறுக்கும் செயற்குழு, ஒரு விரிவான அரசியலமைப்புச்சட்ட வரைவை முன்வைத்தார், அது பொது விவாதத்திற்காகவும், கருத்துக்களுக்காகவும் வெளியிடப்பட்டது.
(4)    வரைவு அரசியலமைப்புச்சட்டம் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
(5)    அரசியலமைப்புச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுதல்.

அரசியல்நிர்ணய சபையின் செயற்குழுக்கள்:
அரசியல்நிர்ணய சபையின் சில முக்கிய செயற்குழுக்கள் இவற்றின் கீழ் இருந்தன
செயற்குழுக்கள்
பொறுப்பில் இருந்த மந்திரி
(1)    ஐக்கிய அதிகாரங்கள் செயற்குழு
ஜவஹர் லால் நேரு
(2)    ஐக்கிய அரசியலமைப்புச்சட்ட செயற்குழு
ஜவஹர் லால் நேரு
(3)    மாகாண அரசியலமைப்புச்சட்ட செயற்குழு
சர்தார் படேல்       
(4)    வரைவு செயற்குழு
டாக்டர்.பி.ஆர். அம்பேத்கார்
(5)    அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான ஆலோசனை செயற்குழு

         இரண்டு உப செயற்குழுக்கள்
         (a)அடிப்படை உரிமைகள் துணை செயற்குழு

         (b)சிறுபான்மையினர் துணை செயற்குழு
சர்தார் படேல்



ஜே.பி.க்ரிபாலனி

எச்.சி.முக்கர்ஜீ

(6)    செயல்முறை சட்டங்கள் செயற்குழு
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
(7)    மாநிலங்கள் செயற்குழு (மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் செயற்குழு )
ஜவஹர் லால் நேரு
(8)    வழிநடத்தும் செயற்குழு
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
(9)    வட கிழக்கு எல்லைப்புற பழங்குடி இடங்கள் மற்றும் அசாம்  விலக்கப்பட்ட & பகுதி 
விலக்கப்ப்ட்ட பகுதிகளின் துணை-செயற்குழு

கோபிநாத் பார்டொலோய்

(10)விலக்கப்பட்ட மற்றும் பகுதி விலக்கப்பட்ட இடங்கள்             (அசாம் தவிற மற்ற இடங்கள்)
துணை-செயற்குழு

.வி.தக்கார்


சில சிறு செயற்குழுக்கள் இதன் கீழ் இருக்கின்றன:
செயற்குழுக்கள்
பொறுப்புள்ள மந்திரிகள்
(1)    அரசியல்நிர்ணய சபையின் செயல்பாட்டுக்கான செயற்குழு
ஜி.வி.மாவ்லாங்கர்
(2)    வணிக செயற்குழுவின் வரிசை
டாக்டர்.கே.எம்.முன்ஷி
(3)    சபை செயற்குழு
பி.பட்டாபி சீதாராமய்யா
(4)    தேசிய கொடிக்கான தனிப்பட்ட செயற்குழு
டி. ராஜேந்திர பிரசாத்
(5)    வரைவு அரசியலமைப்புச்சட்டத்தை சோதிப்பதற்கான சிறப்பு செயற்குழு
அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்
(6)    சான்றுகள் செயற்குழு
அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்
(7)    நிதி மற்றும் பணியாளர் செயற்குழு
. என். சின்ஹா


வரைவு செயற்குழு :
எல்லா செயற்குழுக்களிலும் இதுவே மிகவும் முக்கியமானது.  இது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் நாள் அமைக்கப்பட்டது.
இதில் ஏழு உறுப்பினர்கள் இருந்தார்கள்.
(1)    டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் (தலைவர்)
(2)    என். கோபால்ஸ்வாமி ஐயர்
(3)    அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர்
(4)    டாக்டர்.கே.எம்.முன்ஷி
(5)    சையது மொஹமது சாதுல்லா
(6)    என். மாதவ் ராவ் (உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்த பி எல் மிட்டருக்கு பதிலாக இவர் பதவிவகித்தார்)
(7)    டி. டி.  கிருஷ்ணமாச்சாரி (1948 ஆம் ஆண்டு மரணமடைந்த டி பி கைத்தானுக்கு பதிலாக இவர் பதவிவகித்தார்)

1948 பிப்ரவரி முதல் வரைவு வெளியிடப்பட்டது. 
திருத்தங்களை விவாதிக்கவும், பரிந்துரைக்கவும் எட்டு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டது. 
1948 அக்டோபர் மாதம் இரண்டாம் வரைவு வெளியிடப்பட்டது. 
1948 நவம்பர் 4 ஆம் தேதி இறுதி வரைவு அறிமுகம் செய்யப்பட்டது.

அரசியலமைப்புச்சட்டத்தின் சலுகைகளும் அவற்றின் ஆதாரமும்
நீதித்துறையின் சுதந்திரம்
நீதிமுறை மேலாய்வு
நிர்வாக தலைவராக ஜனாதிபதி
ராணுவ படைகளின் உச்சகட்ட தலைவராக ஜனாதிபதி
துணை ஜனாதிபதி மாநிலங்களின் சபை உத்த்யோகத்தில் தலைவர்,
அடிப்படை உரிமைகள்
முகப்புரை
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்கப்படுதல்



ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்புச்சட்டம்




சட்டம் ஏற்படுத்தும் செயல்முறை
சட்டத்தின் ஆட்சி
ஒற்றை குடியுரிமை அமைப்பு
மந்திரித்துவ பொறுப்பு உடைய பாராளுமன்ற அமைப்பு
ஐக்கிய ராஜ்யங்கள் அரசியலமைப்புச்சட்டம்

வலுவான மையம் உடைய கூட்டமைப்பு
ஐக்கியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் எஞ்சிய அதிகாரங்களை மத்தியில் வைத்தல்
கேனடாநாட்டின் அரசியலமைப்புச்சட்டம்
உத்தரவு கொள்கைகள்
ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை
மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்படுதல்
ஐயர்லாந்துநாட்டின் அரசியலமைப்புச்சட்டம்
அவசரநிலை மற்றும் அடிப்படை உரிமைகள் மீது அதன் தாக்கம்
ஜெர்மனிக்கான வெய்மார் அரசியலமைப்புச்சட்டம்
ஒரேநேரத்தில் பட்டியல்
வணிகம், வர்த்தகம் மற்றும் உடலுறவு தொடர்பான சலுகை
ஆஸ்திரேலிய அரசியலமைப்புச்சட்டம்
அரசியலமைப்பு திருத்தங்கள்
ஆப்பிரிக்க அரசியலமைப்புச்சட்டம்
அடிப்படை கடமைகள்
ஜப்பான் அரசியலமைப்புச்சட்டம்
குடியாட்சி
பிரெஞ்சு அரசியலமைப்புச்சட்டம்

அரசியலமைப்புச்சட்டம் இயற்றல்:
நவம்பர் 4, 1948 ஆம் ஆண்டு முதல் வாசிப்புக்காக இது அறிமுகம் செய்யப்பட்டது.  இரண்டாம் வாசிப்பு 15 நவம்பர் 1948 தொடங்கி, அக்டோபர் 1949 முடிந்தது. மூன்றாம் வாசிப்பு  14, நவம்பர் 1949 அன்று தொடங்கியது.
சபையினால் தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்புச்சட்டம் நிறைவேற்றப்படட்டும்என்னும் தீர்மானத்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் ஏற்படுத்தினார்.
நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு வரைவு அரசியலமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
மொத்தமுள்ள 299 உறுப்பினர்களில் 284 அங்கிருந்தனர், அரசியலமைப்புச்சட்டம் கையெழுத்திடப்பட்டது. 

நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு ஏற்றுகொள்ளப்பட்ட அரசியலமைப்புச்சட்டத்தில் ஒரு முகவுரையும், 395 சட்டவரைவுகளும், 8 அட்டவணைகளும் இருந்தன.

ஜவஹர் லால் நேரு அரசியலமைப்புச்சட்டத்தில் கையெழுத்திடுதல்


 
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் அரசியல்நிர்ணய சபையின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திடுதல்

தீர்மானம் என்றால் என்ன?
பாராளுமன்ற செயல்முறையின்படி, ஒரு ஆலோசனை சட்டசபையின் அங்கத்தினரால் சபை ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று  முறைப்படி பரிந்துரைப்பதே தீர்மானம் ஆகும். 
சுருக்கமாக கூறினால், தீர்மானம் என்பது ஒரு நடவடிக்கை எடுக்கும்படி உந்துதல், அதாவது ஒரு நடவடிக்கையை தூண்டுதல்.

ஒரு சட்டவரைவு என்றால் என்ன?
இங்கே சட்டவரைவுக்கான ஆங்கில அர்த்தம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆர்டிக்கல் (பெயர்ச்சொல்): ஒப்பந்தம், அரசியலமைப்புச்சட்டம், அல்லது உடன்படிக்கை போன்ற  எழுதப்பட்ட ஆவணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஒரு வரிசையின் பொருள்.

அட்டவணை என்றால் என்ன?
அட்டவணை என்னும் வார்த்தைக்கான ஆங்கில அர்த்தம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஒரு ஆவணத்தோடு சேர்க்கப்பட்டு இருக்கும் விவரங்களின் துணை அறிக்கை இது.

அரசியல்நிர்ணய சபையின் விமர்சனங்கள்:
(1)    இது ஒரு பிரதிநிதித்துவ அமைப்பு அல்ல- இதன் உறுப்பினர்கள் இந்திய மக்களால் உலகளாவிய பெரியோர் வாக்குரிமையின்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.
(2)    இது ஒரு தன்னாட்சி அமைப்பு அல்ல - இது ஆங்கிலேய அரசாங்கத்தின் பரிந்துரையினால் ஏற்படுத்தப்பட்டது. 
(3)    இது காங்கிரஸ் ஆதிக்கம் உடையது - பெரும்பாலான உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள். 
க்ரேன்வில் ஆஸ்டின் கருத்துப்படி - “அரசியல்நிர்ணய சபை  என்பது ஒரு கட்சி நாட்டின் ஒரு கட்சியின் அமைப்பு.  இந்த சபை தான் காங்கிரஸ் , காங்கிரஸ் தான் இந்தியா.
(4)    இது நேரத்தை விரயமாக்கியது.  இதை அமைக்க நீண்ட காலம் தேவைப்பட்டது.  (2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 துள்ளியமாக).
(5)    இதில் வழக்கறிஞர்களும் அரசியல்வாதிகளுமே ஆதிக்கம் செலுத்தினார்கள் - சமுதாயத்தின் மற்ற பிரிவினார் போதுமான அளவு பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
(6)    இது இந்துக்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது - லார்ட் விஸ்கவுண்ட் சைமன் இதை இந்துக்களின் அமைப்புஎன்றார்.

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் சரியான மீண்டும் மீண்டுமாக செய்யப்பட்ட விமர்சனம் என்னவென்றால், அதில் தனிப்பட்டது எதுவும் இல்லை,  பெரும்பாலான சலுகைகள் முந்தைய ஆங்கிலேய அரசாங்கத்தின் சட்டங்கள் அல்லது மற்ற நாடுகளின் அரசியலமைப்புச்சட்டம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டவையே என்பதாகும். 
முந்தைய ஆங்கிலேய அரசாங்கத்தின் சலுகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்பது உண்மை என்றாலும், நாட்டுக்கு தேவையான சட்டங்கள் மட்டுமே திரும்பபெறப்பட்டுள்ளன என்பதும் கூறப்பட வேண்டும்.

அதேபோல, உலகம் முழுவதிலும் உள்ள அரசியலமைப்புச்சட்டங்களில் இருக்கும் சலுகைகளை பார்த்தபோதிலும் அவை நகலெடுக்கப்பட்டுள்ளன என்று முடுவுக்கு வருவது தவறாகும். 
மற்ற நாடுகளிடம் இருந்து கடன்வாகிய அம்சங்களை சரியாக ஆராந்தால் அரசியல்நிர்ணய சபையில் அவை நன்கு விவாதிக்கப்பட்டு, இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன என்பது வாசகர்களுக்கு தெளிவாக புரியும்.

11 பிரதிகளை உடைய அரசியல்நிர்ணய சபை நடவடிக்கைகள்இங்கே கிடைக்கும்:
                        http://parliamentofindia.nic.in/ls/debates/debates.htm
இந்திய அரசியல்நிர்ணய சபை அதிகமான முயற்சிகளை எடுத்து இன்று நாம் பெருமைப்படும் அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கி இருக்கிறது என்பதை விவாதங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.  எந்த அரசியலமைப்புச்சட்டமும் எந்த சட்டமும் கல்லிலே அமைக்க முடியாது என்பதால் , துவும் ஒரு பரிபூரணமான ஆவணம் இல்லை, சட்டவரைவுகளை தேவைக்கு ஏற்ப, திருத்தம் செய்யலாம் என்கிற கடினமான திருத்த செயல்முறையும் நம்முடைய அரசியலமைப்புச்சட்டம் தனித்துவம் மிக்கதாக மாற்றுகின்றது.

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...