Total Pageviews

Thursday, February 20, 2020

வரலாறு - ஐரோப்பியர்களின் வருகை

முன்னுரை:
ஒட்டோமன் கைப்பற்றியதற்கும், கான்ஸ்டான்டினோபிலை சிறைபிடித்ததற்கும் பின்னர் கிழக்கிலும் மேற்கிலும் இருந்த பழைய வணிக பாதைகள் மூடப்பட்டன.  புதிய வணிக பாதைகளை கண்டுபிடிப்பதற்கு இது வழிவகுத்தது.


ஆசிய பகுதியில் நடைபெற்ற வணிகம் அரேபிய வணிகர்களாலும், மாலுமிகளாலும் நடத்தப்பட்டது.
மத்தியதரைக்கடல் பகுதியிலும், ஐரோப்பிய பகுதியிலும் இத்தாலியர்கள் ஏகாதிபத்தியம் செலுத்தி வந்தார்கள்.
ஆசியாவில் இருந்து பல மாநிலங்கள் வழியாக, பலருடைய கை மாறி இந்த சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன.  இருப்பினும், வணிகம் அதிக லாபம் ஈட்டி வந்தது.

ஐரோப்பியா மற்றும் ஆசியாவில் இருந்த வணிகத்தை இத்தாலியர்கள் (வெனைஸ் மற்றும் ஜினோவாவை சார்ந்த வணிகர்கள்) கட்டுப்படுத்தியதோடு, கிழக்கு ஐரோப்பியர்கள் அதாவது ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகளை சார்ந்தவர்களுக்கு எவ்வித பங்கும் கொடுக்க மறுத்தனர். 
எனவே, இத்தாலிய அரபு வணிக ஏகாதிபத்தியத்தை உடைத்து, துருக்கிய பகைவர்களை கடக்காமல் செல்லும் பாதைகளை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகளை சார்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள்.           
அவர்கள் கப்பல் கட்டுவதிலும், கப்பல் ஓட்டுவதிலும் சிறந்தவர்கள் என்பது மற்றும் ஒரு குறிப்பு.
இந்த மறுமலர்ச்சி சாகச உணர்வை உருவாக்கியது.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே இருந்த பழங்கால வணிகப் பாதைகள்



1492 ஆம் ஆண்டு இந்தியாவை கண்டுபிடிக்க புறப்பட்ட ஸ்பெயினை சார்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்,  இந்தியா கிழக்கில் இருக்கிறது என்பதை நன்றாக அறிந்த போதிலும், அக்காலத்தில் உலகம் உருண்டை என்கிற கோட்பாடு அவருக்கு தெரிந்து இருந்ததால் மேற்கில் இருந்து தன் பயணத்தை தொடங்கினார்.  அவர் தவறுதலாக அமெரிக்காவில் தரையிறங்கினார்.
1498 ஆம் ஆண்டு, போர்ச்சுகளை சார்ந்த வாஸ்கோ--காமா ஐரோப்பிபாவில் இருந்து இந்தியாவுக்கு புதிய கடல் பாதையை கண்டுபிடித்தார்.
அவர் நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்து கேலிகட்டை அடைந்தார். 

             
     கிறிஸ்டோபர் கொலம்பஸ்                                வாஸ்கோ--காமா                             பார்த்தலோமேயூ தியாஸ்     


பார்த்தலோமேயு தியாஸ் வாஸ்கோடகாமாவுக்கு கப்பல் கட்ட உதவி செய்தார், வாஸ்கோடகாமா அதை பயன்படுத்தி நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்து, இந்தியாவுக்கான பாதையை தொடர்ந்தார். 
உலக வரலாற்றில் அப்படிப்பட்ட வழிதட கண்டுபிடிப்புகள் புதிய அத்தியாயத்தை திறந்து வைத்தன.

வாஸ்கோ ட காமாவின் இந்திய பயணம்

கேலிகட்டின் சமோரின் மனா விக்ரமாவால் வாஸ்கோ காமா நன்றாக வரவேற்கப்பட்டார்.
கேலிகட், கொச்சின்  மற்றும் கண்ணூரில் புதிய வணிக நிலையங்களை அமைக்க இது வழிவகுத்தது
ஆரம்பத்தில் இந்தியாவின் போர்ச்சுகளுடைய வணிக தலைநகரமாக கொச்சின் இருந்தது.  பின்னர் அது கோவாவுக்கு மாற்றப்பட்டது.

                                                       
வாஸ்கோ காமா கேலிகட்டில் தரையிறங்குதல்             மனா விக்ரமாவின் மன்றத்தில் வாஸ்கோ காமா 

வணிகத்தையும் வியாபாரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்காக போர்ச்சுகல் அரசாங்கம் போர்ச்சுகீசிய வணிக நிறுவனத்தை நிருவியது.  இந்த நிறுவனம் ஒரு ஆளுநரின் கீழ் செயல்படுவதாக இருந்தது.
பிரான்சிஸ்கோ டீ அல்மெய்தா 1503 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்ச்சுகீசிய கவர்னராக வருகை தந்தார்.
கடலிலே போர்ச்சுகீசியர்களின் ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தவும்,  தங்கள் செயல்களை முற்றிலும் வணிகரீதியான பரிவர்த்தனைகளுக்கு உட்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்பதே அவருடைய கொள்கை.  கிழக்கிலே ஒரு போர்ச்சுகீசிய சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்கிற சிந்தனையை அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.  இந்த கொள்கைநில நீர்கொள்கை என்று அழைக்கப்பட்டது.

ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெய்டா

அஞ்சதிவா, கண்ணூர் மற்றும் கொச்சினில் அவர் கோட்டைகளை கட்டினார்.
எகிப்து, துருக்கி மற்றும் குஜராத் ஆகிய இடங்களின் ஆட்சியாளர்களின் கூட்டணியால் அல்மெய்தா 1508 ஆம் ஆண்டு சாவுல், போரில் வீழ்த்தப்பட்டார். 
பின்னர் போர்ச்சுகீசியர்கள் திரும்பி வந்து டியூவில் உள்ள துறைமுகத்தை தாக்கினார்கள், இதன் விளைவாக டியூ போரில் (1509) கூட்டுக்குழுவுக்கு எதிரான ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்தார்கள்.

இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அல்ஃபோன்சோ டீ அல்புகுர்கீ. 
1503 ஆம் ஆண்டு அவர் ஒரு ராணுவ பகுதியின் தளபதியாக இந்தியாவிற்கு முதன் முதலில் வந்தார்.  1509 ஆம் ஆண்டு , இவருடைய சிறந்த கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் போர்ச்சுகீசியர்களுக்கான கவர்னராக நியமிக்கப்பட்டார். 
1510 ஆம் ஆண்டு, பிஜாபூர் சுல்தானியத்துக்கு சொந்தமான  கோவாவின் செல்வாக்கு மிகுந்த துறைமுகத்தை அவர் கைப்பற்றினார்.
இந்த ஆட்சியின் கீழ் தான் போர்ச்சுகீசியர்கள் பெர்சிய வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் வளைகுடா தொடங்கி மலாயாவில் உள்ள மலாக்கா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள ஸ்பைஸ் தீவுகள் வரை ஒட்டுமொத்த ஆசிய கடற்கரை மீதும் தங்கள் ஆதிக்கத்தை உருவாக்கினார்கள்.
1.         கடற்கரையில் உள்ள இதிய எல்லைகளை அவர்கள் கைப்பற்றி தங்கள் வணிகத்தையும் ஆதிக்கத்தையும் விரிவுபடுத்தவும், தங்கள் ஐரோப்பிய போட்டியாளர்களிடம் இருந்து தங்கள் வணிக ஏகாதிபத்தியத்தை தற்காத்துக்கொள்ளவும்  தொடர்ந்து போர் நடத்தினார்கள்.

அல்ஃபோன்ஸோ டிஆல்பகுர்கீ

ஏறத்தாழ அறை நூற்றாண்டுக்கு அதிக லாபம் ஈட்டிய கிழக்கத்திய வணிகத்தில் போர்ச்சுகள் ஏகாதிபத்தியம் செலுத்தி வந்தது.
இந்தியாவில் கொச்சின், கோவா, தியு, தாமன், சல்செட், பசெய்ன், சாவுல் மற்றும் மும்பை, மெட்ராஸ் அருகே சன் தாமே மற்றும் பெங்காலில் ஹூக்லி ஆகிய இடங்களில்  போர்ச்சுகள் தனது வணிக தளங்களை அமைத்தது.
தங்களுடைய ஆயுதம் தாங்கிய கப்பல்களின் மேலாதிக்கத்தினால் வணிகத்தோடு பலத்தையும் இணைத்து பயன்படுத்தியது, அவர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்த உதவியது.  முகலாய கடல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அவர்கள் பல வணிக சலுகைகளை முகலாய சக்கரவர்த்திகளிடம் இருந்து வெற்றிகரமாக பெற்றுக்கொண்டார்கள்.

போர்ச்சுகீசியர்கள் திருட்டு, கொள்ளை, மனிதாபிமானமற்ற செயல்கள் மற்றும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய கொடூரமான நடத்தையின் மத்தியிலும், இந்தியாவில் அவர்களுடைய சொத்துக்கள் 3 முக்கிய காரணங்களினால் ஒரு நூற்றாண்டு வரை நீடித்தது : 
1.       உயர்ந்த கடல்களின் மீது அவர்கள் கட்டுப்பாட்டை அனுபவித்தார்கள். 
2.       அவர்களுடைய சிப்பாய்களும், நிர்வாகிகளும் கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்தனர்.
3.       தென்னிந்தியாவில் முகலாயர்களின் செல்வாக்கு இல்லாமல் இருந்ததால், அவர்கள் முகலாய சாம்ராஜ்யத்தின் வல்லமையை எதிர்கொள்ள அவசியம் ஏற்படவில்லை.

போர்ச்சுகீசியர்கள் இந்தியாவுக்கு அளித்த பரிசுகள்:
·         இந்தியாவில் முதல் அச்சகம்
·         இந்திய மருத்துவ தாவரங்களில் முதல் அறிவியல் பணி. 
·         புகையிலை போன்ற சில பயிர்களையும், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், மிளகாய், அன்னாசி, சப்போட்டா மற்றும் நிலக்கடலை போன்ற சில காய்கறிகளையும் போர்ச்சுகீசியர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சி
16 ஆம் நூற்றாண்டின் பிந்தையை பகுதியில், இங்கிலாந்து, ஹாலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலக வர்த்தகத்தில் ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகீசியருக்கு இருந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடுமையாக போராடினார்கள், இதில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசியர்கள் தோல்வி அடைந்தனர்.
தற்போது நன்னம்பிக்கை முனையை பயன்படுத்தி இந்தியாவுக்கு செல்லும் பாதையை ஆங்கிலேயர்களும் டட்சுக்காரர்களும் பயன்படுத்த முடிந்தது, அதன் மூலமாக கிழக்கு சாம்ராஜ்யத்திற்கான போட்டியில் அவர்களும் பங்கெடுத்தனர்.
 இறுதியில் டட்ச், இந்தோனேசியா மீதும், ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை மற்றும் மலாயா மீதும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள். பங்கெடுத்தனர்.

டட்ச்
போர்ச்சுகீசியர்களுக்கு பிறகு டட்ச்காரர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். 
டட்ச் என்னும் மக்களை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? 
ஹாலந்து நாட்டை (நெதர்லாந்து) சார்ந்தவர்கள் டட்சுக்காரர்கள். 
இந்த மக்களின் தாய்மொழியும் டட்சு தான்.

1602 ஆம் ஆண்டு டட்ச் கிழக்கு இந்தியா நிறுவனம் உருவாக்கப்பட்டது, இதற்கு டட்ச் பாராளுமன்றம் உரிமம் வழங்கியது. இதன் மூலமாக போர் நடத்தவும், ஒப்பந்தங்களை முடிக்கவும், எல்லைகளை பெற்றுக்கொள்ளவும், கோட்டைகளை கட்டவும் அதிகாரம் வழங்கப்பட்டது. 
இந்தியாவிற்கு வந்த முதல் டட்சுக்காரர் கொர்னெலியு ஹௌட்மேன்.
இந்தியாவிற்கு வந்த பிறகு 1605 ஆம் ஆண்டு மசூபிப்பட்டிணத்தில், டட்சுக்காரர்கள் தங்கள் முதல் நிறுவனத்தை நிருவினார்கள்.  படிப்படியாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் வணிக மையங்களை ஏற்படுத்தி, போர்ச்சுகீசியர்களுக்கு அச்சுறுத்தலாக மாறினார்கள்.  போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மெட்ராஸ் (சென்னை) அருகே உள்ள நாகப்பட்டிணத்தை கைப்பற்றி, தென்னிந்தியாவில் தங்களுடைய முக்கிய புகலிடமாக அதை மாற்றினார்கள்.

டட்சுக்காரர்களின் முக்கிய ஆர்வம் இந்தியாவில் இல்லை மாறாக, ஜாவா தீவுகள், சுமத்ரா மற்றும் நறுமணப்பொருட்கள் விளைகின்ற நறுமண தீவு ஆகியவற்றின் மீது அவர்களுடைய கவனம் இருந்தது.
சீக்கிரத்தில் மலாயா கடற்கால் மற்றும் இந்தோனேசிய தீவுகளில் இருந்து  போர்ச்சுகீசியர்களை அவர்கள் வெளியே எடுதனர்.
சூரத், ப்ரோச், கேம்பே, அஹமதாபாத், கொச்சின், நாகப்பட்டிணம், மசூலிப்பட்டிணம், சின்சுரா, பாட்னா, ஆக்ரா ஆகிய இடங்களில் அவர்கள் வணிக தளங்களையும் ஏற்படித்தினார்கள்
.
1658 ஆம் ஆண்டு, அவர்கள் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து இலங்கையையும் கைப்பற்றினார்கள்.
ஆடைகளை இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதியாக  ஏற்படுத்திய பெருமை டட்சுக்காரர்களுக்கே செல்லும்.
இந்தியாவில் ஐரோப்பிய வணிகத்தில் ஆதிக்கம் வாய்ந்த சக்தியாக இருந்த போர்ச்சுகீசியர்களின் இடத்தை டட்சுக்காரர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

பிரிடிஷ்
ஆங்கிலேய வணிகர்கள் ஆசிய வணிகத்தை பேராசையுடன் பார்த்தார்கள்.  
போச்சுகீசியர்களின் வெற்றி, அதிகமான நறுமனப்பொருட்கள், பருத்தி, பட்டு, தங்கம், முத்துக்கள், மருந்துகள், பீங்கான், கருங்காலி ஆகியவற்றை தாங்கிய சரக்கு கப்பல்கள், மற்றும் அவர்கள் ஈட்டிய லாபம் ஆகியவை இங்கிலாந்து வணிகர்கள் இடம் கற்பனை தீயை விதைத்து, இப்படிப்பட்ட லாபகரமான வணிகத்தில் ஈடுபடும்படி அவர்களையும் அது தூண்டியது.
வணிக சாகசக்காரர்கள்என்னும் வணிகர்களின் குழுவின் கீழ் கிழக்கத்திய வணிகர்களுடன் வர்த்தகம் செய்யும் ஆங்கிலேய அமைப்பு ஒன்று 1599 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனம் பிரபலமாககிழக்கு இந்தியா நிறுவனம்என்று அழைக்கப்பட்டது. 1600 ஆம் ஆண்டு மகாராணி எலிசபெத் இதற்கு அரச பட்டயமும், கிழக்கிலே வணிகம் செய்ய பிரத்தியேக சலுகையும் அளித்தார்.
1608 ஆம் ஆண்டு, சூரத்தில் ஒரு தொழிற்சாலையை தொடங்க முடிவெடுக்கப்பட்டு, அரச சலுகைகளை பெற்றுக்கொள்ள கேப்டன் ஹாக்கின் ஜஹாங்கீரின் அரண்மனைக்கு அனுப்பப்பட்டார்.  (அக்காலத்தில் வணிக கிடங்குகளுக்குநிறுவனம்என்கிற பெயரே கொடுக்கப்பட்டது)
இதன் விளைவாக, ஆங்கிலேய நிறுவனம் மேற்கு கடற்கரையோரத்தில் தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

                                              
   கேப்டென் ஹாகின்ஸ்              ஜஹாங்கீர்


1615 ஆம் ஆண்டு, ஆங்கிலேய பிரதிநிதி சர் தாமஸ் ரோ முகலாய அரண்மனையை அடைந்து, வெற்றிகரமாக முகலாய சாம்ராஜ்யம் முழுவதும் வணிக மையங்களையும், தொழிற்சாலைகளையும் ஏற்படுத்த அனுமதி பெற்றார்.
1662 ஆம் ஆண்டு, பம்பாய் தீவை போர்ச்சுகீசிய இளவரசியை திருமணம் செய்வதற்கு வரதட்சனையாக இரண்டாம் சார்லஸ் மன்னருக்கு போர்ச்சிகீஸ் கொடுத்தது. 
இதை தொடர்ந்து கோவா, தாமன் மற்றும் தியூ தவிற மற்ற எல்லா சொத்துக்களையும் இந்தியாவில் இருந்து போர்ச்சுகீசியர்கள் இழந்தனர்.
இந்தோனேசிய தீவுகளில் நறுமனப்பொருள் வர்த்தகத்த பிரிவில் ஆங்கிலேய நிறுவனத்திற்கும், டட்ச் நிறுவனத்திற்கும் பிளவு ஏற்பட்டது.
இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையே நடந்த போர் இந்தியாவில் 1654 ஆம் ஆண்டு முதல் 1667 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்தோனேசியாவில் உள்ள அனைத்தையும் விட்டுக்கொடுக்க ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர், இந்தியாவில் உள்ள ஆங்கிலேயர்களின் தளங்களை விட்டுவிட டட்ச்காரர்களும் ஒப்புக்கொண்டனர்.
மற்ற ஐரோப்பிய சக்திகள் மீது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தி, அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு இந்தியாவில் தங்கள் ஆட்சியை தொடர்ந்தார்கள்.

சர் தாமஸ் ரோ                  இரண்டாம் சார்ல்ஸ் மன்னர்

டேன்கள்
1699 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள சேரம்பூரின் அருகே தங்களுடைய ஆட்சியாளரான அரசர் ஐந்தாம் ஃப்ரெட்ரிக் அவர்களுக்கு மரியாதை செலுதும் விதமாக ஃப்ரெட்ரிக்நாகூர் என்னும் காலனியை டேனிஷ் கிழக்கு இந்தியா நிறுவனம் ஏற்படுத்தியது.  டென்மார்க்குடன் நடைபெற்ற போரில் இரண்டு முறை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட ஃப்ரெட்ரிக்நாகூர், வணிக மையமாக தோல்வி அடைந்தது.  இருப்பினும், சேரம்பூரின் வணிக தோல்விக்கு பதிலாக அதிகப்படியான வெற்றி கலாச்சார பரிமானத்தில் கிடைத்தது.
தங்கள் பிரதேசங்களில் ஆங்கிலேயர்கள் மிஷனரி பணிகளுக்கு தடை விதித்து இருந்ததால், இந்தியாவில் மிஷனரிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக சேரம்பூர் மாறியது.

வேதாகமத்தின் நகல்களை அச்சிடுவதற்காக ரெவரண்ட் வில்லியம் கேரீ 1799 ஆம் ஆண்டு, சேரம்பூரில் ஆசியாவின் முதல் அச்சகத்தை நிருவினார்.  1819 ஆம் ஆண்டு,  மேற்கத்திய கல்விமுறையை முதல் முறையாக ஆசியாவில் கற்பித்த சேரம்பூர் கல்லூரியை கேரீ நிருவினார். 
1845 ஆம் ஆண்டு டென்மார்க் சேரம்பூரை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக்கொடுத்தனர், இதன் மூலமாக வங்கால மாநிலத்தில் 150 ஆண்டுகளாக இருந்த அவர்களுடைய இருப்பு முடிவுக்கு வந்தது.   

பிரெஞ்சு :
வணிக காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த கடைசி ஐரோப்பியர்கள் பிரெஞ்சுகாரர்கள் தான். 
அரசர் பதினாங்காம் லூயிசின் காலத்தில், 1664 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கு இந்தியா நிறுவனம் உருவாக்கப்பட்டு, இந்தியாவுடன் வணிகம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டது.
1667 ஆம் ஆண்டு சூரத்தில் தனது முதல் நிறுவனத்தை பிரெஞ்சு கிழக்கு இந்தியா நிறுவனம் அமைத்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கடற்கரை பகுதிகளில் அவர்கள் தங்கள் நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள்
மஹே, காரைக்கால், பாலாசொர், காசிம் பசார் போன்ற இடங்கள் பிரெஞ்சு கிழக்கு இந்தியா நிறுவனத்தின் சில முக்கிய மையங்கள் ஆகும்.
1742  ஆம் ஆண்டு பாண்டிச்சேரியின் ஆளுநராக டூப்லீக்ஸ் நியமிக்கப்பட்டார். 
இந்தியாவில் ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்த அவர் இலக்கு வைத்து இருந்தார். 
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முக்கிய போட்டியாளர்களாக பிரெஞ்சுக்காரர்கள் இருந்தார்கள்.

தென்னிந்தியாவில் ஆங்க்லோ-பிரெஞ்சு போராட்டம்
மத்திய காலங்களில் ஐரோப்பிய அரசியல்களில் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். 
இந்தியாவிலும், இந்த் இரண்டு நாடுகளின் நிறுவனக்களும் வணிக ஏகாதிபத்தியத்தில் தங்கள் பகைமையை தொடர்ந்தனர். 
ஆகவே, இந்த இரண்டு ஐரோப்பிய வணிக நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட போர்களுக்கும், சதியாலோசனைகளுக்கும் நாற்றாங்காலாக இந்தியா மாறியது. 

18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்த நிலையற்ற அரசியல் சூழ்நிலை, ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு கிழக்கு இந்தியா நிறுவனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் தங்கள் பகைமையை நீட்டித்துக்கொள்ள  ஒரு வாய்ப்பாக அமைந்தன. 

கோரமண்டல் கடற்கரையில் மெட்ராஸ் மற்றும் புதுச்சேரியை ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் முக்கிய வணிக மையங்களாக வைத்து இருந்தன.  இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான உறவு மிகவும் பரபரப்பாக இருந்தது.  கர்னாடக பகுதி முற்றிலும் அரசியல் பரபரப்பினால் நிறைந்து இருந்தது.
இந்த பகுதியில் சகோதரத்துவ தொடர் சண்டைகளில் ஆதரவு அளித்து, பல்வேறு பிரச்சனைகளில் எதிர் நிலையை கொண்டு இருப்பது ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இயல்பாக இருந்தது. 
தொடங்கப்பட்ட ஆங்க்லோ-பிரெஞ்சு போராட்டம் கர்நாடக போர் என்று அழைக்கப்பட்டது.
1740 மற்றும் 1763 ஆம் ஆண்டுகளுக்கு இடையே தென்னிந்தியாவில் ஆங்க்லோ-பிரெஞ்சு பகைமை மூன்று கர்நாடக போர்களின் வடிவத்தில் வெளிப்பட்டது. 

கர்நாடக பகுதி

முதல் கர்நாடக போர் (1746-48)
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்க்லோ-பிரெஞ்சு போட்டிகளின் நீட்டிப்பாகவே முதல் கர்நாடக போர் வெடித்தது.
ஐரோப்பாவில், 1740 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய தொடர்போர் வெடித்தது.  ஆஸ்திரேலிய அரியணையில் தங்கள் பிரதிநிதிகளை  வைக்க வேண்டும் என்று பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்கள் விரும்புகிறார்கள்.
மேலும், இந்தியாவில் வீழ்ச்சி அடைந்துகொண்டு இருந்த முகலாய அதிகாரத்தின் தொடக்கத்தில், ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு கிழக்கு இந்திய நிறுவனங்கள் இரண்டுமே இந்திய வணிகத்தின் கட்டுப்பாட்டை பெற விரும்பின.
இது மோதலை ஏற்படுத்தி, இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் போர் ஏற்படும் நிலை உருவானது.
முதல் கர்நாடக போரின்போது, கடல்வழியாகவும், நிலத்தின் வழியாகவும் மெட்ராசை பிரெஞ்சு கைப்பற்றியது. 
மெட்ராசை கைப்பற்றியதற்கு பழிவாங்ம்படியாக, 1748 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரியர் அட்மிரல் போஸ்காவெனின் தலைமையில் ஒரு பெரிய ஆங்கிலேய படை இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்டது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலிய தொடர் போர் முடிவுக்கு வந்தது, 
ஐக்லாசேபெல் உடன்படிக்கை மற்றும் ஐரோப்பிய பகைமைகள் முடிவுக்கு வந்தது, இதன் காரணமாக இந்தியாவில் போர் முடிவுக்கு வந்தது. 
மெட்ராஸ் பிரிடிஷிடம் திரும்ப கொடுக்கப்பட்டது, இருசாராரின் சிறைக்கைதிகளும், பிரதேசங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டார்கள்.

இரண்டாம் கர்நாடக போர் (1749-54)
ஹைதராபாத் நிசாம், நிசாம்-உல்-முல்க் அசாப்ஜாவின் மரணத்தை அடுத்து ஆட்சியமைப்பதில் ஒரு மோதல் ஏற்பட்டது.  கர்நாடக நவாப்துவத்தில் ஒரு முரண்பட்ட கருத்து ஏற்பட்டது. 
புதுச்சேரியில் உள்ள கவர்னர் ஜெனரல், டூப்லீக்ஸ்  இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு, சந்தா சாகிபை நவாப் பதவிக்கும், முசார் ஜாங்கை நிசாம் பதவிக்கும் ஆதரிக்க தீர்மானித்தார். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் அவர்களுடைய எதிர அணியான நசீர் ஜாங் மற்றும் முஹமது அலியை ஆதரித்தார்கள்.
இருப்பினும், நடைபெற்ற போரில், நசீர் ஜாங் மற்றும் முசாபர் ஜாங் இருவருமே மரணம் அடைந்தார்கள். 
ஆனால், போர்வீரர்-தந்திரியாக இருந்த  பிரெஞ்சு ஜெனரல், புசி சலாபத் ஜங்கை ஹைதராபாதின் நிசாமாக ஏற்படுத்தி, அந்த மாநிலத்தின் பிரச்சனைகளில் வழிநடத்துவதற்காக ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கி இருந்தார்.  
வடக்கு சிர்கார்களை நிசாம் பிரெஞ்சுகாரர்களுக்கு விட்டுக்கொடுத்தார். 
இக்காலகட்டத்தில் டெக்கன் பகுதியில் பிரெஞ்சு ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் ராபர்ட் கிளைவின் வருகையை தொடர்ந்து நிலைமை தலைகீழாக மாறியது.
நசீர் ஜங் - ஹைதராபாத் நிசாமின் மகன்.
முசாஃபர் ஜங் - ஹைதராபாத் நிசாமின் பேரன்.
அன்வருதீன் - கர்னாடிக் நவாபின் மகன்
சந்தா சாகிப் - கர்னாடிக் நவாபின் சகோதரன்/சகோதரியின் மகன்.
                                                                                   
                                                                                    டூப்லீக்ஸ்

200 ஐரோப்பியர்கள் மற்றும் 300 இந்திய போர்வீரர்களுடன் கிளைவ் அனுப்பப்பட்டார். 
சரியான நேரத்தில் மராத்தா தலைவர் முரான் ராவ் வருகை தந்தது, ராஜா சாகிபை வீழ்த்த கிளைவுக்கு உதவியது. 
திருசிராப்பள்ளி (திருச்சி) முற்றுகையை அகற்றும்படி சந்தா சாகிப் நிர்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் தப்பிச் செல்லும்போது தஞ்சாவூர் மன்னரால் கொல்லப்பட்டார்.  இதன் மூலம், முஹமது அலி கர்னாடிக் நவாபாக மாறினார். 
டூப்லிக்ஸ் தனது பதவியை திரும்பப்பெற முயற்சித்தார், ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 
1754 ஆம் ஆண்டு அவர் திரும்பப் பெறப்பட்டார்.  அவருக்கு பின்னான வந்த காதியூ ஆங்கிலேயர்களுடன் சமாதானமான உறவை வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தி, இறுதியில் 1754 ஆம் ஆண்டு அவர்களுடைய போரில் ஈடுபட்டு, புதுச்சேரி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

இரண்டாம் கர்னாட போரை முடிவுக்கு கொண்டு வந்த புதுச்சேரி உடன்படிக்கையில் பின்வரும் சலுகைகள் இருந்தன.
  • இந்திய ஆட்சியாளர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்க ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்க்லளின் வாக்குறுதி.
  • புசி தன்னுடைய ராணுவத்துடன் ஹைதராபாதில் தங்குவதை இரண்டு சாராரும் ஏற்றுக்கொண்டார்கள்.
  • இருவரும் கைப்பற்றிய இடங்களின் பகுதிகளை ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுகாரர்களும் திரும்ப கொடுத்தல்.
  • இரண்டு அரசாங்கங்களின் தாயகத்திலும் அங்கீகாரம் பெற்ற பிறகு தான் ஒப்பந்தம் இறுதிநிலை செய்யப்படும்.

மூன்றாவது கர்னாடக போர் (1757-63)
1756 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற போர் இந்தியாவிலும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய படைகளுக்கு இடையே மோதலை புதுப்பித்தது.  மூன்றாவது கர்னாடக போர் தென்னிந்தியாவை கடந்து வங்கால மாநிலத்திற்கு சென்றது. அங்கே  1757 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகள் சந்திர்நாகூர் பிரெஞ்சு முகாம்களை கைப்பற்றினார்கள்.
இருப்பினும், 1760 ஆம் ஆண்டு வேண்டிவாஷ் போரில் ஆங்கிலேய தளபதி சர் ஐர் கூட் என்பவர் காம்டி டி லேலி தலைமையிலான பிரெஞ்சு படையை தீர்க்கமாக வீழ்த்திய போது, போர் முடிவுக்கு வந்தது. 
வேண்டிவாஷுக்கு பிறகு,  பிரெஞ்சு தலைநகரம் புதுச்சேரி 1761 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது.

ஐர் கூட்                                                      

1763 ஆம் ஆண்டு பேரிஸ் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டபோது, இந்த போர் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் சந்தெர்நாகூரும், புதுச்சேரியும் பிரான்சிடம் கொடுக்கப்பட்டு, இந்தியாவில் பிரெஞ்சு நிறுவனங்கள் (வணிக தளங்கள்) அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.  
ஆங்கிலேய வாடிக்கையாளர் அரசாங்கங்களை ஆதரிக்க பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்னும் பிரெஞ்சு லட்சியங்கள் முடிவுக்கு வந்து, இந்தியாவின் ஆதிக்க வெளிநாட்டு சக்தியாக பிரிடிஷ் மாறியது.  








வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...