Total Pageviews

Friday, October 27, 2017

சொர்க்கத்தில் கடிகாரம்

சொர்க்கத்துக்கு சென்ற இறந்த ஒருவர் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து, அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார் - ஏன் இத்தனை கடிகாரங்கள் என்று...
அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடி
காரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க - 
பலமாக சிரித்த அந்த தேவதை, இல்லை அது மதர் தெரஸாவின் கடிகாரம். அவர் பொய் ஏதும் பேசவில்லை. ஆகவே முட்கள் நகராமல் உள்ளன என்றார்..!
நம்ம ஆளு ஆர்வமிகுதியால், அப்ப மோடி கடிகாரம் எங்கே இருக்கிறது என்று கேட்க -
அதுதான் எங்க ஆபீஸில் டேபிள் பேனாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றதாம் அந்த தேவதை.

No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...