Total Pageviews

Thursday, March 12, 2015

வேதியல் - வினையூக்கியின் தாக்கம்.


வினையூக்கியின் தாக்கம்.

ஒரு வேதியல் வினை வீதம் மீது வினையூக்கிகளின் தாக்கத்தை குறித்து இப்பகுதியில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

சில வேதியல் வினைகள் வேகமானவை, சில மெதுவானவை. ஒரு வேதியல் மாற்றத்தின் வேகம் தட்பவெப்பம், அழுத்தம் மற்றும் வினையூக்கி ஆகிய காரணிகளை சார்ந்து இருக்கின்றது. இப்பகுதியில், ஒரு வேதியல் மாற்றத்தின் வேகத்தில் வினையூக்கிக்கு இருக்கும் பங்கு என்ன என்பதை கற்றுக்கொள்வீர்கள்.

வேதியல் மாற்றத்தின் போது, மாற்றத்தில் ஈடுபடும் மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதி விளைவுப்பொருட்களாக மாற்றம் அடைகின்றன. எனினும், வினையாற்றும் மூலக்கூறுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் அனைத்தும் விளைவுப்பொருட்களை உண்டாக்குவதில்லை. விளைவுப் பொருட்கள் உருவாவதற்கு, மாற்றத்தில் ஈடுபடும் மூலக்கூறுகளில் செயலூக்க ஆற்றல் என்னும் ஒரு குறைந்தபட்ச ஆற்றல் இருக்க வேண்டும். செயலூக்க ஆற்றல் கொண்டுள்ள வினைபொருட்களின் விகிதத்தைப் பொறுத்து வேதியல் மாற்றத்தின் வேகம் மாறுபடும்.

ஒரு வேதியல் மாற்றத்திற்கு தேவைப்படும் செயலூக்க ஆற்றலை குறைப்பதற்காக ஒரு வினையூக்கி சேர்க்கப்படும் போது, அந்த வேதியல் மாற்றத்திற்கு வேறு ஒரு பாதையை வினையூக்கி உருவாக்குகின்றது. வினையூக்கி இல்லாத போது இயல்பான வேதி வினை பாதைக்கு தேவைப்படும் செயலூக்க ஆற்றலை காட்டிலும், இந்த மாற்றுப்பாதையில் குறைவான செயலூக்க ஆற்றலே தேவைப்படும்.
     
மாற்றுப்பாதையில் வினையூக்கியுடன் சேர்ந்து மாற்றத்தில் ஈடுபடும் ரசாயனங்கள் இடைநிலை விளைபொருளை உருவாக்குகின்றன. இடைநிலை விளைபொருள் மிகவும் நிலையற்றது. அது சிதைவுற்று விளைபொருளையும் வினையூக்கியையும் விளைவிக்கின்றது. இதன் மூலமாக வினையூக்கி ரசாயன மாற்றத்தில் மாற்றம் அடையாமல் இருக்கின்றது.



No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...