பேஸ்புக் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேஸ்புக்கில் செலவிடும் கோடிக்கணக்கான நபர்கள் உலகமெங்கும் உள்ளனர். சிலருக்கு பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள், செய்திகள், மீம்ஸ்களை பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது.
Total Pageviews
Sunday, January 23, 2022
பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்
பொதுவாக நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம்? எதற்காக பயன்படுத்துகிறோம்? சற்று யோசித்துப் பாருங்கள்… நம் செல்ஃபி புகைப்படத்தை நண்பர்களிடம் பகிரவோ அல்லது சுவாரஸ்யமாக செய்திகளை பொதுமக்களிடம் பகிரவோ அல்லது நமது சந்தோஷமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளவோ பயன்படுத்தி வருகிறோம்.
ஆன்லைனில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், நிச்சியம் முடியும்!
இதில் பல வழிகள் உள்ளது. எந்த முதலீடும் இன்றி (உங்கள் நேரமும் உழைப்பும் அவசியம் தேவை) பேஸ்புக்கில் சம்பாதிக்க சிறந்த வழிகளை உங்களுக்காக இங்கு கூறுகிறேன்.
இதன் மூலம் பகுதி நேரமாக கூட நீங்கள் சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் பேஸ்புக் பக்கம் மூலமாகவே லட்சக்கணக்காக சம்பாதித்த பல பேரை உதாரணமாக கூறலாம்.
முதலில், இதற்கென்று தனியாக நீங்கள் பேஸ்புக்கில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதன்பிறகு, உங்களுக்கு நங்கு தெரிந்த, பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். (உதாரணம்: கிரிக்கெட், சினிமா, அரசியல்). இது தான் மிகவும் முக்கியம்.
தொடர்ந்து உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான சுவாரஸ்யமான உள்ளடக்கங்களை (Content) பதிவிட வேண்டும். அப்போது தான் பலர் உங்கள் பக்கத்தை விரும்பி பின் தொடர்வார்கள்.
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு உள்ளடக்கமும் மற்றவர்கள் பகிரும்படியாக இருக்க வேண்டும். அது வீடியோவாகவோ அல்லது மீம்ஸாக கூட இருக்கலாம்.
உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி, அதிக பாலோயர்ஸ் (Followers) பெற்ற பிறகு, Amazon, ShareAsale, Clickbank, Cuelinks போன்ற பிரபலமான தளங்களில் விண்ணப்பித்து அஃப்ளியேட் மார்கெட்டிங் (Affiliate Marketing) மூலம் பணம் ஈட்டலாம்.
அதாவது உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மூலம் பொருட்களை சலுகை விலையில் விற்று, அதன் மூலம் கமிஷன் தொகை பெறலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பேஸ்புக் பேஜில் உள்ள Offers பகுதியில் நீங்கள் பதிவு செய்துள்ள இ-காமர்ஸ் தளத்தின் (Amazon, Flipkart, Cuelinks) லின்க்கை பதிவிடுவது மட்டும் தான்.
உங்கள் பேஜிற்கு வரும் ஒருவர், இந்த லின்க்கை கிளிக் செய்து அதிலுள்ள பொருட்களை வாங்கினால் அதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஒருவேளை அவர் லின்க்கை கிளிக் செய்து பொருட்கள் ஏதும் வாங்காவிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்காது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த ஒரு பிராண்டையாவது (Brand) பிரபலபடுத்த பணம் வாங்கி கொண்டு (Sponsered Post) பதிவு போடலாம். உங்கள் பேஜ் எந்தளவிற்கு பிரபலமோ அந்தளவிற்கு உங்களை தேடி பல பிராண்டுகள் வரும்.
உதாரணத்திற்கு, உங்கள் ஊரில் சிறிய குளிர்பான நிறுவனம் ஒன்று இருக்கிறது. டிவியிலோ அல்லது நியூஸ் பேப்பரிலோ விளம்பரம் செய்ய நிறைய தொகை ஆகும் என்பதால் தங்களது பிராண்டை பிரபலபடுத்த வேறு வழி தேடிக் கொண்டிருகிறது அந்த நிறுவனம்.
அப்போது ஒரு லட்சம் பாலோயர்ஸ் கொண்ட உங்கள் ஃபேஸ்புக் பேஜ் அவர்கள் கன்ணில் படுகிறது. உங்களிடம் வந்து, எங்களுடைய பிராண்டை பற்றி உங்கள் பக்கத்தில் பதிவு போட எவ்வுளவு தொகை ஆகும் என அவர்களே கேட்பார்கள். இதை சரியாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது உங்கள் கையில் தான் உள்ளது.
நீங்கள் இரண்டு வருடமாக கிரிக்கெட் தொடர்பான ஒரு பேஸ்புக் பேஜை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பேஜை 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
கிரிக்கெட் பேட், பந்து, கிளவுஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் பேஸ்புக் பேஜ் ஒன்றை தொடங்க முடிவெடுக்கிறது. புதிய பேஜ் தொடங்கி பாலோயர்ஸ்களை பெறுவது மிக கடினம். ஆகையால் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒரு பேஜை வாங்கினால் எளிதில் தனது பொருளை விற்பனை செய்யலாம் என்பது அந்த நிறுவனத்திற்கு தெரியும்.
இதனால் கிரிக்கெட் தொடர்பான பேஜ் ஏதாவது நல்ல தொகைக்கு வந்தால் விலைக்கு வாங்கும் முடிவில் இருக்கிறது அந்த நிறுவனம். இது சமந்தமாக பேஸ்புக்கில் விளம்பரமும் செய்கிறது.
இதை பார்க்கும் நீங்கள், உங்கள் பேஜை நல்ல தொகைக்கு விற்பனை செய்து இருந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் பேஜ் எத்தனை Likes பெற்றுள்ளதோ, அதைப் பொருத்தே உங்கள் தொகை கணக்கிடப்படும்.
இதுபோல் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு கூறியுள்ளேன். உங்களுக்கு தெரிந்த வேறு ஏதாவது இருந்தால் Comment-ல் கருத்து தெரிவியுங்கள்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழிகள்
நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம்.
ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும்.
சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை.
வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website):
உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள். இதற்கு நிறைய படிப்பறிவு எல்லாம் தேவையில்லை. கணினியை கையாளும் திறன் இருந்தாலே போதும். ப்ளாக்/வெப்சைட் உருவாக்குவதெற்கென்றே Blogger, Wordpress போன்ற தளங்கள் உள்ளன. இதில் உங்கள் கணக்கை தொடங்கி (முற்றிலும் இலவசம்) உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் அல்லது கதைகளை எழுதுங்கள்.
தற்போது கூகுள் நிறுவனம் தமிழுக்கும் Ad sense அறிமுகப்படுத்தியுள்ளதால், உங்கள் கதைகளை வாசிக்க வரும் வாசகர், உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். உங்கள் ப்ளாக்கிற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்தால் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
அடுத்ததாக, Affiliate Marketing என்பதன் மூலம் சம்பாதிப்பது. எளிமையாக கூறினால், மற்ற நிறுவனங்களின் பொருளை – அது புத்தகமாக, ஷூவாக, டிவியாக, எதுவேண்டுமானாலும் இருக்கலாம் – உங்கள் வெப்சைட்/ப்ளாக்கில் விற்பனை செய்வது. இதில் எப்படி நமக்கு பணம் கிடைக்கும் என கேட்கலாம். உங்கள் தளத்திற்கு வருகை புரியும் ஒருவர் இதிலுள்ள பொருள் ஒன்றை வாங்கினால் குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுக்கு கமிஷனாக கிடைக்கும்.
ஃப்ரீலேன்சர் (Freelancer):
இன்றைய நாளில் Content is King. ஆம், உள்ளடக்கமே இணையத்தை ஆட்சி செய்கிறது. உங்களுக்கு கட்டுரை எழுதும் திறமையோ அல்லது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் திறமை இருந்தால் உங்கள் காட்டில் பணம் மழை தான். நான் ஒன்றும் ஜோக் அடிக்கவில்லை. இந்த துறையில் வாய்ப்பு அபரிதமாக கொட்டிக் கிடக்கிறது. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் பனத்தை ஈட்டி தரும். சாதாரணமாக ஒரு வார்த்தைக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை மிக எளிதாக சம்பாதிகிறார்கள். தினமும் உங்களால் 1000 வார்த்தை எழுத முடுயும் என்றால், உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இதற்கென்று பல தளங்கள் உள்ளன. குறிப்பாக Upwork, Freelancer, Fiverr. அதில் நீங்கள் பதிவு செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கு தேவையான வேலையே தேர்வு செய்து வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். இதில் நம் வேலைக்கான தொகையை நாமே நிர்ணயிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் Freelance Tamil Conetent Writer என்று தேடினாலே பல வாய்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். எழுதும் திறமையுடையவர்கள் மட்டும் தான் இதில் சம்பாதிக்க முடியுமா என்றால், நிச்சியம் இல்லை. ஓவியம், கிராபிக்ஸ் டிசைன், போட்டோகிராபி, லோகோ டிசைன் போன்ற திறமைகள் இருந்தால், நீங்கள் இந்த தளங்கள் மூலம் சம்பாதிக்கலாம்.
Youtube:
யூடுயுப் மூலம் சம்பாதிக்கலாம் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் நீங்கள் எடுக்கும் வீடியோவை பதிவிடுவதின் மூலம் நிறைய பார்வையாளர்களை பெற்று விளம்பரம் மூலம் சம்பாதிக்கலாம். சுவாரஸ்யமான வீடியோக்களை பதிவிடுவதின் மூலம் நிறைய பார்வையாளர்களை பெறலாம். அல்லது மற்றவர்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றி விளக்குவது மற்றும்கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோ வெளியிடுவதின் மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
இப்போது புதிதாக ASMR வீடியோ Youtube-ல் பிரபலமாகி வருகிறது. இந்த மாதிரி வீடியோக்களில் நீங்கள் திரையில் கூட தோன்ற வேண்டாம். உங்கள் குரல் கூட தேவை இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெறும் ஓசை தான் இந்த ASMR வீடியோவில் முக்கியம். உதாரணமாக, நாம் சாப்பிடும் போதோ, அப்பளத்தை நொறுக்கும் போதோ, பரோட்டாவை பிசையும் போதோ, முடி வெட்டும் போது கத்திரிக்கோலில் இருந்து ஒரு ஓசை வருமல்லவா, அது தான் ASMR. இந்த வகை வீடியோவிற்கு வெளிநாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இணையம் என்பது கடல் போன்றது. அதில் மூழ்க மூழ்க தான் முத்தெடுக்க முடியும். ஆன்லைன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கும் சில வழிகள் மட்டுமே இதில் கூறியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள்.
Thursday, January 20, 2022
இணையவழி வேலைவாய்ப்புக்களை பெற உதவும் முக்கிய இரு இணையதளங்கள் | The best websites for Online Jobs
இணையவழி வேலைவாய்ப்புக்களை பெற உதவும் முக்கிய இரு இணையதளங்கள்.
Upwork என்பது இணையவழி வேலைவாய்ப்புக்களுக்கு முன்னர் மிகவும் பிரசித்திபெற்ற இரு இணையதளங்களின் சேர்க்கையாகும் (oDesk + Elance). Upwork இணையத்தளத்தில் உங்களுக்கு பிடித்த துறையில் உங்கள் வசதிக்கு ஏற்ப பொருத்தமான இணையவழி வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுவாக இவ்விணையதளம் இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்குவதில்லை, மாறாக இது தொழில் வழங்குனரையும் (Employer), தொழிலாளியையும் (Employee) இணைக்கும் ஓர் தளமாகவே இயங்கிவருகிறது.
நீங்கள் இங்கே புதிதாக இணைவதெனின் சற்று பொறுமையுடனேயே செயற்படவேண்டும். உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் பரீசீலிக்கப்படுவதோடு, இங்கே உள்ள பரீட்சைகள் மூலம் (Online Exams) உங்கள் ஆங்கில அறிவு மற்றும் குறித்த துறையில் வேலைசெய்வதற்கான உங்கள் தகமைகளும் பரிசீலிக்கப்பட்டு அவை உங்கள் Profile இல் பிரசுரிக்கப்படும். எனவே தொழில் வழங்குனர் (Employer) தன் வேலையை முறையாக செய்துமுடிக்கக் கூடிய தொழிலாளியை பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்.
Freelancer என்பதும் Upwork இணையதளத்தை ஒத்த ஒரு இணையவழி தொழில் வழங்கும் இணையதளமாகும். இங்கே நீங்கள் பல்வேறுபட்ட இணைவழி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Upwork இணையத்தளத்தினைப் போன்றே இவ்விணையதளமும் இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்குவதில்லை, மாறாக இதுவும் தொழில் வழங்குனரையும் (Employer), தொழிலாளியையும் (Employee) இணைக்கும் ஓர் தளமாகவே இயங்கிவருகிறது.
இங்கேயும் உங்கள் செயற்பாடுகள் மற்றும் தகமைகள் பரிசீலிக்கப்படுவதோடு, அவை உங்கள் Profile இல் பிரசுரிக்கப்பட்டு தொழில் வழங்குனருக்கு (Employer) சிறந்த தொழிலாளியை பெற்றுக்கொடுக்கும்.
மேற்குறிப்பிட்ட இரு இணையதளங்களிலும் போலி தொழில் வழங்குனர்களும், போலி தொழிலார்களும் இருந்தாலும்கூட, அவர்களை இனங்கண்டு அவர்களின் கணக்குகளை முடக்கும் பாதுகாப்பு முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இணையதளம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது? | How to earn online?
இணையதளம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது?
இன்றைய உலகில் பல துறைகளிலும் இணையம் (Internet) என்பது ஓர் முக்கியமான அம்சமாக மாற்றிவிட்ட நிலையில் இணையத்தை பலரும் பல தேவைகளுக்காக உபயோகிக்கின்றனர். தற்போதை காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களின் (Social Media) அளப்பரிய வளர்ச்சியினால் இணையம் என்பது ஓர் பொழுதுபோக்கு அம்சமாகவே மாறிவிட்டது எனக் கூறலாம்.
இணையவழி தொழில் வாய்ப்புக்கள் (Online Jobs)
இணையப் பயன்பாட்டில் பொழுதுபோக்குடன் சேர்த்து பலர் வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இது உண்மையில் சாத்தியமா ? ஆம், மாணவர் உலகம் இணையதளத்தின் அட்மின் ஆகிய நானும் பல்வேறு வகையில் இணையத்தின் மூலம் மாதாந்தம் குறிப்பிடத்தக்களவு ஓர் வருமானத்தை பெறுகிறேன்.
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தமட்டி,ல் சாதாரண கணனி அறிவு மற்றும் ஆங்கில அறிவைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவில் (பகுதி நேர / முழு நேர) இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய பல வழிமுறைகள் உள்ளன. இவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் ஆக இருக்க வேண்டிய தேவையில்லை. சிலவேளைகளில் இதற்கு ஒரு சாதாரண ஸ்மார்ட் போன் (Smart Phone) இனை இயக்கும் அறிவு மட்டுமே போதுமானதாக அமையும்.
எனினும், கணினி சம்பத்தப்பட்ட எதாவது துறையில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் அத்துறையில் (பகுதி நேர / முழு நேர) இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் உங்களுக்கும் அதிகமாகவே உள்ளன.
போலி இணையதளங்கள் (Scam Sites)
இணையத்தில் பணம் சம்பாதிக்க முற்படும் அனைவரும் முதலில் முகம்கொடுக்கும் மிகப்பெரும் பிரச்சினைதான் Scam Sites எனப்படும் போலி இணையதளங்களாகும். இப்போலி இணையதளங்கள் இணையவழி வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி உங்களிடமிருந்து பணம் அறவிடலாம், அல்லது உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, passwords போன்ற தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.
முதல் தடவை இணையத்தில் பணம் சம்பாதிக்க முற்படும் ஒருவர் அல்லது அது பற்றி தகவல்களைத் திரட்ட முற்படும் ஒருவர் இவ்வாறான இணையதளங்களை தவிர்த்து, உண்மையாகவே இணையவழி வேலைவாய்ப்புக்களை பெறுவது மிகவும் பெரிய ஒரு சவாலாக அமைந்துவிடும்.
போலி இணையதளங்களை எவ்வாறு தவிர்ப்பது?
ஒரு மணித்தியாலத்தில் 100 டாலர்கள் அல்லது ஒரு நாளில் 1000 டாலர்கள் இணையத்தில் உடனடியாக சம்பாதிக்கலாம் என்று யாராவது கூறினால் அது பொய்யான ஓர் கருத்தாகும். முதலில் இவ்வாறு கூறி உங்கள் பணத்தை கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கும்பல்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களின் கற்பனைக்கு மிஞ்சிய ஒரு தொகையினை உங்களால் ஒருபோதும் இணையத்தில் இவ்வாறு இலகுவில் சம்பாதித்துவிட முடியாது.
எதாவது ஒரு இணையதளம் இணையத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நீங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அதற்காக உங்களிடம் இருந்து அவர்கள் வழங்கும் சேவைக்காக பணம் அறவிட முற்பட்டால், ஒருபோதும் பணம் செலுத்தாதீர்கள். உண்மையாக இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்கும் எந்தவொரு இணையதளமும் இவ்வாறு பணம் அறவிடுவதில்லை.
உங்களது தனிப்பட்ட தகவல்களை ஒரு இணையதளத்திற்கு வழங்க முன் அவ்விணையத்தளம் போலியானதா இல்லையா என்பதை Google மூலம் ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள். (இலகு வழிமுறை : <website name> scam? என ஒருமுறை Google இல் search செய்யுங்கள்).
சிலவேளைகளில் இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு கடினமான விடயம் எனத் தோன்றினாலும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, அவற்றை கற்று சரியான முறையில் செய்துவந்தீர்கள் என்றால், காலப்போக்கில் இது உங்களுக்கு இலகுவான ஒரு விடயமாக மாறிவிடும்.
எனினும் மேலே கூறியதுபோல் மணிக்கு 100 டாலர்கள் அல்லது ஒரு நாளைக்கு 1000 டாலர்களை உடனடியாக இணையத்தில் சம்பாதிப்பது என்பது எமது நாடுகளில் நடைமுறையில் இலகுவில் சாத்தியப்படாத விடயமாகும். எனினும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை மற்றும் கணனி அறிவினைப் பொறுத்து சாதாரணமாக உங்களால் ஒரு நாளைக்கு கணிசமான வருமானத்தினைப் பெற முடியும்.
How to Work Online?
ஆம், Online Jobs மற்றும் Online Jobs in Tamil ஆகிய பகுதிகளினூடாக இனையவழி தொழில் வழங்கும் இணையதளங்கள் மற்றும் நிறுவங்களைப் பற்றி தனித்தனியாக ஆராய்ந்து விரைவில் உங்களுக்கு வழங்கவுள்ளோம்.
Subscribe to:
Comments (Atom)
Labels
வலைதளம் பதிவுசெய்தல்
மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க
Search This Blog
தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்
தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...
-
Tamil Font Drag-and-Drop Matching Game Drag Modern Tamil Script (left) to match Ancient Tamili Font (r...
-
சமையலறை என்பது வீட்டின் இதயமாகக் கருதப்படுகிறது, அது அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். பயன்படுத்தும்படியாக்குதல் அம்சங்...
-
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு: தமிழ்நாட்டில் பயன்படுத்தும்படியாக்குதல் மற்றும் தமிழ் மொழி அமைப்புகளைப் பற்றிய மரியாதைம...
