நம் ஒவ்வொருவருக்குமே வாழ்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் பல வேலைகளையும் தொழில்களையும் முயற்சித்து பார்த்திருப்போம். சிலருக்கு இது கைகூடி பணம் லட்சம் லட்சமாக கொட்டும். பலரோ, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எந்த முதலீடும் செய்யாமல் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
தொழில்நுட்ப வசதிகள் மிகுந்துள்ள இன்றைய காலத்தில், வீட்டிலிருந்தே லட்சக்கணக்காக சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆம், உண்மையை தான் சொல்கிறேன். இதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என நீங்கள் பயப்பட வேண்டாம்.
ஒரு கணினி அல்லது லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு – இது இருந்தாலே போதும்.
சரி, என்னிடம் லேப்டாப்பும் இண்டர்நெட் தொடர்பும் இருக்கிறது. இதை வைத்து என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக தான் இந்த கட்டுரை.
வலைப்பதிவு (Blog) அல்லது வலைதளம் (Website):
உங்களுக்கென்று சொந்தமாக ப்ளாக் அல்லது வெப்சைட் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள். இதற்கு நிறைய படிப்பறிவு எல்லாம் தேவையில்லை. கணினியை கையாளும் திறன் இருந்தாலே போதும். ப்ளாக்/வெப்சைட் உருவாக்குவதெற்கென்றே Blogger, Wordpress போன்ற தளங்கள் உள்ளன. இதில் உங்கள் கணக்கை தொடங்கி (முற்றிலும் இலவசம்) உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள் அல்லது கதைகளை எழுதுங்கள்.
தற்போது கூகுள் நிறுவனம் தமிழுக்கும் Ad sense அறிமுகப்படுத்தியுள்ளதால், உங்கள் கதைகளை வாசிக்க வரும் வாசகர், உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். உங்கள் ப்ளாக்கிற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்தால் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
அடுத்ததாக, Affiliate Marketing என்பதன் மூலம் சம்பாதிப்பது. எளிமையாக கூறினால், மற்ற நிறுவனங்களின் பொருளை – அது புத்தகமாக, ஷூவாக, டிவியாக, எதுவேண்டுமானாலும் இருக்கலாம் – உங்கள் வெப்சைட்/ப்ளாக்கில் விற்பனை செய்வது. இதில் எப்படி நமக்கு பணம் கிடைக்கும் என கேட்கலாம். உங்கள் தளத்திற்கு வருகை புரியும் ஒருவர் இதிலுள்ள பொருள் ஒன்றை வாங்கினால் குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுக்கு கமிஷனாக கிடைக்கும்.
ஃப்ரீலேன்சர் (Freelancer):
இன்றைய நாளில் Content is King. ஆம், உள்ளடக்கமே இணையத்தை ஆட்சி செய்கிறது. உங்களுக்கு கட்டுரை எழுதும் திறமையோ அல்லது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் திறமை இருந்தால் உங்கள் காட்டில் பணம் மழை தான். நான் ஒன்றும் ஜோக் அடிக்கவில்லை. இந்த துறையில் வாய்ப்பு அபரிதமாக கொட்டிக் கிடக்கிறது. நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் பனத்தை ஈட்டி தரும். சாதாரணமாக ஒரு வார்த்தைக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாய் வரை மிக எளிதாக சம்பாதிகிறார்கள். தினமும் உங்களால் 1000 வார்த்தை எழுத முடுயும் என்றால், உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இதற்கென்று பல தளங்கள் உள்ளன. குறிப்பாக Upwork, Freelancer, Fiverr. அதில் நீங்கள் பதிவு செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கு தேவையான வேலையே தேர்வு செய்து வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். இதில் நம் வேலைக்கான தொகையை நாமே நிர்ணயிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் Freelance Tamil Conetent Writer என்று தேடினாலே பல வாய்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். எழுதும் திறமையுடையவர்கள் மட்டும் தான் இதில் சம்பாதிக்க முடியுமா என்றால், நிச்சியம் இல்லை. ஓவியம், கிராபிக்ஸ் டிசைன், போட்டோகிராபி, லோகோ டிசைன் போன்ற திறமைகள் இருந்தால், நீங்கள் இந்த தளங்கள் மூலம் சம்பாதிக்கலாம்.
Youtube:
யூடுயுப் மூலம் சம்பாதிக்கலாம் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் நீங்கள் எடுக்கும் வீடியோவை பதிவிடுவதின் மூலம் நிறைய பார்வையாளர்களை பெற்று விளம்பரம் மூலம் சம்பாதிக்கலாம். சுவாரஸ்யமான வீடியோக்களை பதிவிடுவதின் மூலம் நிறைய பார்வையாளர்களை பெறலாம். அல்லது மற்றவர்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றி விளக்குவது மற்றும்கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோ வெளியிடுவதின் மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
இப்போது புதிதாக ASMR வீடியோ Youtube-ல் பிரபலமாகி வருகிறது. இந்த மாதிரி வீடியோக்களில் நீங்கள் திரையில் கூட தோன்ற வேண்டாம். உங்கள் குரல் கூட தேவை இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெறும் ஓசை தான் இந்த ASMR வீடியோவில் முக்கியம். உதாரணமாக, நாம் சாப்பிடும் போதோ, அப்பளத்தை நொறுக்கும் போதோ, பரோட்டாவை பிசையும் போதோ, முடி வெட்டும் போது கத்திரிக்கோலில் இருந்து ஒரு ஓசை வருமல்லவா, அது தான் ASMR. இந்த வகை வீடியோவிற்கு வெளிநாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இணையம் என்பது கடல் போன்றது. அதில் மூழ்க மூழ்க தான் முத்தெடுக்க முடியும். ஆன்லைன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கும் சில வழிகள் மட்டுமே இதில் கூறியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள்.
No comments:
Post a Comment