Total Pageviews

Thursday, January 20, 2022

இணையவழி வேலைவாய்ப்புக்களை பெற உதவும் முக்கிய இரு இணையதளங்கள் | The best websites for Online Jobs

 இணையவழி வேலைவாய்ப்புக்களை பெற உதவும் முக்கிய இரு இணையதளங்கள்.



Upwork என்பது இணையவழி வேலைவாய்ப்புக்களுக்கு முன்னர் மிகவும் பிரசித்திபெற்ற இரு இணையதளங்களின் சேர்க்கையாகும் (oDesk + Elance). Upwork இணையத்தளத்தில் உங்களுக்கு பிடித்த துறையில் உங்கள் வசதிக்கு ஏற்ப பொருத்தமான இணையவழி வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம். 


பொதுவாக இவ்விணையதளம் இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்குவதில்லை, மாறாக இது தொழில் வழங்குனரையும் (Employer), தொழிலாளியையும் (Employee) இணைக்கும் ஓர் தளமாகவே இயங்கிவருகிறது.

நீங்கள் இங்கே புதிதாக இணைவதெனின் சற்று பொறுமையுடனேயே செயற்படவேண்டும். உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் பரீசீலிக்கப்படுவதோடு, இங்கே உள்ள பரீட்சைகள் மூலம் (Online Exams) உங்கள் ஆங்கில அறிவு மற்றும் குறித்த துறையில் வேலைசெய்வதற்கான உங்கள் தகமைகளும் பரிசீலிக்கப்பட்டு அவை உங்கள் Profile இல் பிரசுரிக்கப்படும். எனவே தொழில் வழங்குனர் (Employer) தன் வேலையை முறையாக செய்துமுடிக்கக் கூடிய தொழிலாளியை பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்.





Freelancer என்பதும் Upwork இணையதளத்தை ஒத்த ஒரு இணையவழி தொழில் வழங்கும் இணையதளமாகும். இங்கே நீங்கள் பல்வேறுபட்ட இணைவழி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.



Upwork இணையத்தளத்தினைப் போன்றே இவ்விணையதளமும் இணையவழி வேலைவாய்ப்புக்களை வழங்குவதில்லை, மாறாக இதுவும் தொழில் வழங்குனரையும் (Employer), தொழிலாளியையும் (Employee) இணைக்கும் ஓர் தளமாகவே இயங்கிவருகிறது.

இங்கேயும் உங்கள் செயற்பாடுகள் மற்றும் தகமைகள் பரிசீலிக்கப்படுவதோடு, அவை உங்கள் Profile இல் பிரசுரிக்கப்பட்டு தொழில் வழங்குனருக்கு (Employer) சிறந்த தொழிலாளியை பெற்றுக்கொடுக்கும்.

மேற்குறிப்பிட்ட இரு இணையதளங்களிலும் போலி தொழில் வழங்குனர்களும், போலி தொழிலார்களும் இருந்தாலும்கூட, அவர்களை இனங்கண்டு அவர்களின் கணக்குகளை முடக்கும் பாதுகாப்பு முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...