தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் காவல் ஆய்வாளர் மீது அவதூறு செய்தி வெளியிட்டது சம்பந்தமாக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் 10லட்சம் அபராதம் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு.2019 செய்தி தவறான, ஆதாரங்களற்ற செய்தியினை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Total Pageviews
Monday, January 25, 2021
தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை
Tuesday, January 19, 2021
மாலைமலர் கட்டுரையில் பிழை
Sunday, January 17, 2021
தோல்வியை எதிர்பாருங்கள்
தோல்விகள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நம் அனைவரது கனவாக இருக்கின்றது. ஆனாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு வெற்றியை மட்டுமே அடைய வேண்டும் என்று நினைப்பதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம்.
சிறுவயதில் “நீ படிச்சு என்னவாக விரும்புற?” என்கிற கேள்விக்கு “மருத்துவராக விரும்புகிறேன்!” என்று ஒரு மாணவி கூறுகிறாள். அவள் கூறியதைப் போலவே பள்ளி பருவம் முதலாகவே அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவியாகவே திகழ்கிறாள். முதல் முறையாக 12ஆம் வகுப்புக்குப் பின் நீட் தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றும், முதல் 1000 மதிப்பெண்களுக்குள் வரமுடியவில்லை. முதல் முறையாக ஒரு தோல்வி, இதை ஏற்க விரும்பாமல் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள் அந்த மாணவி. இதன் காரணம் என்ன?
“தோல்வி அடைந்தால் வாழக்கூடாது!” என்று சமுதாயம் கற்றுக்கொடுக்கும் தவறான பாடமே காரணம். தோல்விகள் இன்றியமையாதவை, எல்லோரும் எல்லாவற்றிலும் வெற்றியே பெற முடியாது, தோல்விகளைக் கொண்டு வெற்றியின் பாதையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வது தான் இலக்காக இருப்பின், வேறு வகையில் மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கி தன் மனதைச் செலுத்தி இருக்கலாம். அல்லது மருத்துவராவது தான் இலக்கு என்றால் என்ன செய்தால் மருத்துவராகலாம் என்பதைக் குறித்து தொடர்ந்து போராடலாம். இவ்வாறாக வாழ்க்கையை முடித்துக்கொள்வதால் என்ன கிடைக்கிறது? ஒன்றுமில்லை
படித்து முடித்தபின் என்ன செய்வதென்று யோசிக்கும்போது சில மாணவர்கள் யாரையாவது திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏதோ ஒரு நபர் மீது காதல் கொள்கிறார்கள். தவறில்லை. மகிழ்ச்சியாக வாழத்தானே அந்தக் காதல். ஆனால், அதில் ஏதோ ஒரு வகையில் தோல்வி ஏற்பட்டுவிட்டால், உலகில் வேறு மனிதரே இல்லாதது போல தற்கொலை செய்வதும், காதலித்ததாகக் கூறும் நபரைக் கொலைசெய்வதும் ஏனோ? “தோல்வி அடைந்தால் வாழக்கூடாது!” என்று சமுதாயம் கற்றுக்கொடுக்கும் தவறான பாடம் தான்.
சினிமாவும், சமுதாயமும் பல நேரங்களில் “தோல்வியின் அவசியம்” குறித்து பேசாமல் தோல்வி என்பதே இல்லாதவர் தான் சிறந்தவர் என்பது போல பிரம்மையை உருவாக்கிச் சென்றுவிடுகின்றனர். இந்த பிரம்மையை ஏற்படுத்தியவர்கள் எத்தனைத் தோல்விகளைக் கண்டாலும் துடைத்து எறிந்துவிட்டு அடுத்தகட்ட முயற்சியை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே நபரைக் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று திரைப்படத்தில் கூறிய நடிகர்கள் அதைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்தால் இன்னமும் அவர்கள் திருமணமாகாமல் தான் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி இருப்பதில்லை.
தமிழ் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?
தமிழ் மொழி உலகெங்கிலும் சுமார் 5 நாடுகளில் அதிகாரபூர்வ மொழியாக இருக்கிறது. இருந்தபோதிலும், தமிழை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இந்தி மொழியைத் திணிப்பதில் அவ்வப்போது இந்திய அரசாங்கம் வேலைசெய்து வருவதை நாம் அறிவோம்.
பல இடங்களில் வங்கிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையங்களில் இந்தியில் மட்டும் பலகைகள் வைக்கப்படும் சூழல்களையும் பார்த்தோம். விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தமிழ் அறியாத மக்களைப் பணியமர்த்தியதைப் பார்த்தோம். இன்னும் தொடர்ந்து இது போன்ற பல சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அப்படியானால் நம் தமிழ் மொழியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்து இருப்பதற்கும், அடுத்த சந்ததியருக்கும் தமிழ் மொழி கிடைக்கச் செய்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கம் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது தங்கள் இணையதளங்கள், செயலிகள் மற்றும் பிற மென்பொருட்களைத் தமிழில் வெளியிட்டு வருகின்றன. அவற்றை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பதன் அடிப்படையிலேயே அவை தொடர்ந்து தமிழாக்கம் செய்வதற்கான ஊக்கம் அந்தந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.
உதாரணத்திற்கு Gpay, PhonePe, YouTube, நீங்கள் பயன்படுத்தும் ஆண்டிராய்டு மொபைல், ATM உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் பயன்படுத்துவேன் என்று உறுதிகொள்ளுங்கள்.
அந்த இணையதளங்களிலும் மென்பொருட்களிலும் இருக்கும் தமிழ் உங்களுக்குப் புரிகிறதா இல்லையா? ஏதேனும் உங்களுக்குச் சிரமமாக உள்ளதா? என்பவற்றை எல்லாம் குறித்து தொடர்ந்து அந்தந்தத் தளங்களில் கருத்து தெரிவியுங்கள். இது அந்தந்தச் செயலிகளையும் மென்பொருட்களையும் தமிழ் மொழி மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்கும்.
Thursday, January 14, 2021
தினத்தந்தி கட்டுரையில் பிழை
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அவனியாபுரத்திற்கு வருகை தந்தார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வி.ஜ.பி. மேடையில் ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.
ஆதாரம்: https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14133952/Tamil-language-and-culture-are-essential-for-the-future.vpf
எழுத்துப்பிழையும், சந்திப் பிழையும்
தினமலர் கட்டுரையில் உள்ள பிழைகள்
டிரம்பிற்கு எதிராகப் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்
கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' எனக், குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர். டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
Thursday, January 7, 2021
கிரிப்டோகரன்சியும் டிரான்(TRON) நெட்வொர்க்கும்
கிரிப்டோகரன்சி என்றாலே பலரும் பிட்காயின் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால், பிட்காயினைத் தவிர 8000க்கும் மேற்பட்ட கிரிப்டோகாயின்கள் உள்ளன. சரி, அவற்றைக் குறித்து தெரிந்துகொள்ளும் முன் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நீங்கள் Amazon அல்லது Flipkart போன்ற ஷாப்பிங் இணையதளங்களுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதற்காக உங்களுக்கு 10 Amazon Coinகளையோ 10 Supercoinகளையோ அந்தந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் பொருள் வாங்கும்போது இந்த காயின்களைக் கொண்டு தள்ளிபடியோ அல்லது முழுப்பொருளையுமோ பெற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் அரசாங்கம் அச்சிட்ட ரூபாய் நோட்டு அல்லாத வேறொரு நாணயத்தை நீங்களும் அந்த நிறுவனமும் செல்லுபடியாகும் செலவாணியாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இதை கிரிப்டோகரன்ஸி என்று அழைக்கிறோம்.
https://steemit.com/ என்கிற வலைதளத்தில் தற்போது நம்மைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் வீடியோ படைப்பாளர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்காக வழங்கப்படும் செலவாணி டிரான் (TRON), இதை டிரான் என்னும் ஒரு நிறுவனம் வழங்குகிறது.
இந்த டிரான் நிறுவனத்தின் TRX கிரிப்டோகரன்சியை நீங்கள் பெற்றுக்கொண்டு உங்கள் வாலட்டுக்கும் அனுப்பலாம். அவற்றை ஸ்டேக் (Stake) என்னும் முறையில் சேமிப்பு வைப்பதன் மூலம் Staking rewards எனப்படும் வட்டிக்கு நிகரான வெகுமதிகளையும் அதே நாணயத்திலோ SEEDS போன்ற தொடர்புடைய வேறு நாணயங்களிலோ நீங்கள் பெறுவீர்கள். இவை 2,3 நாட்கள் இடைவெளியில் உங்கள் வாலெட்டிற்குத் தானாகவே வந்துசேரும். மேலும் தொடர்ந்து பல கிரிப்டோகரன்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த வலைப்பூவைப் பின்தொடருங்கள்...
Tuesday, January 5, 2021
ரிட்டயர்மெண்ட் பிளான்
தற்போது 35 வயதை நெருங்கியிருக்கும் பலரும் ரிட்டயர்மெண்ட் பிளான் குறித்து யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். இன்னும் சில நாட்களில் கண்கள் சோர்ந்துவிடும், கை கால்கள் தளர்ந்துவிடும், பணியில் இருந்து அவர்களே அனுப்பிவிடுவார்கள் போன்ற காரணங்கள் அதிகம். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாகவே ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்குப் பின் ஓய்வாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டும், செய்தித்தாளைப் படித்துவிட்டு அரசியல் பேசிக்கொண்டும் இருக்கலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், வழக்கமான வருமானம் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும் என்பதால் அதற்கான சிறந்த திட்டத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நான் ஒன்றைச் சொல்கிறேன். பல்வேறு வகையான முதலீடுகளைச் செய்வது மிகவும் அவசியமான ஒன்றுதான், அதை நீங்கள் எப்போதும் செய்துகொண்டே இருக்க வேண்டும். குறைந்த விலையில் அதிக வளர்ச்சியடையக்கூடிய பங்குகள், வருடந்தோறும் டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகள் என்று ஆராய்ந்துபார்த்து பங்குசந்தையில் முதலீடுசெய்யுங்கள். வளர்ச்சியடைய வாய்ப்புள்ள க்ரிப்டோகரன்சிகளில் முதலீடுசெய்யுங்கள். மாதம்தோறும் இவற்றுக்காக 5% பணத்தையாவது ஒதுக்கி வையுங்கள். நீங்கள் பணியில் இருந்து வெளியே அனுப்பப்படும் தருணத்தில் நிச்சயம் உங்களுக்கு இவை உதவியாக இருக்கும்.
ஆனால், நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் சில பணிகளைச் செய்பவர்கள் பணி ஓய்வைப் பற்றியோ பணி ஓய்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியோ யோசிப்பதே கிடையாது. அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும்முதலாளிகள், சமூகசேவகர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மரணம் தழுவும்வரை தங்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணத்தையே தங்களுக்குள் வைத்துக்கொள்வது கிடையாது. போலீஸ், மிலிட்டரி போன்ற அரசு வேலைகளில் கட்டாயம் ஒரு வயதுக்கு மேல் பணிவோய்வு கொடுக்கப்படும் என்றாலும் அதன் பின்னரும் வீட்டில் சோர்ந்து உட்கார்ந்துவிடலாம் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள். சமூகப்பணி, டிரேடிங், செக்யூரிட்டி, முதலீட்டு ஆலோசகர், கடைக்காரர் என உங்களுக்கு எந்தத் தொழில் ஒத்துவருமோ அதை பணிவோய்வுக்குப் பின்னும் தொடர்ந்துசெய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஏனென்றால், வீட்டில் சும்மா இருந்தால் அது உங்க்ளைச் சோம்பேரியாக்குவதுடன் நீங்கள் வாழ்வதற்கான காரணத்தையும் குறைத்துவிடுகிறது. வாழ்க்கை மீதான உங்கள் நாட்டம் குறைந்து அதன் காரணமாகவே அதிக நோய்களை உங்கள் வசம் ஈர்ப்பீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் அதிக பாரம் ஏற்படும். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள், ஓய்வுக்குப் பின்னும் வேறு வேலையை ரசித்துச் செய்யுங்கள், மரணமும் சற்று தள்ளிப்போகலாம்!
இதயம் சொல்வதைப் பின்பற்றுதல்
இக்காலத்தில் இதயம் சொல்வதைப் பின்பற்றுதல் குறித்து அதிகமானோர் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்த வேலையைச் செய்துகொண்டு வாழ்நாளைக் கழிப்பதே மனிதராய் பிறந்தவருக்கான கடமையாக இருந்துவந்தது. ஆனால், இப்போது தன் இதயத்தின் உணர்வுகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதை எப்படிச் செய்வது என்பது குறித்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.
நான் பல்வேறு துறைகளில் பணிசெய்துவிட்டு இறுதியாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கணிப்பொறி சார்ந்த ஒரு வேலையில் இருக்கிறேன். ஓய்வுநேரத்தில் டிவியில் தோனி கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் சிக்சர் அடித்து முடிப்பதும், சாதுரியமான விக்கட் கீப்பிங் மூலம் பலரை அவுட் செய்வதும், பந்துவீச்சாளர்களைத் திறமையாகக் கையாண்டு வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்வதையும் பார்க்கிறேன். அரங்கம் நிறைந்த கரகோஷம், ஏராளமான விளம்பரங்களில் தோனி காட்சியளிக்கிறார். சிறுவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தோனியைப் போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதன் மூலம் எனக்குள் கிரிக்கெட் வீரராக மாறவேண்டும் என்கிற ஒரு ஆசை உருவாகின்றது. அப்படியானால் நான் என்ன செய்யவேண்டும். உடனடியாக என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னைக்குப் பிரயாணம் செய்து கிரிக்கெட் மைதானத்தில் ஏதாவது ஒரு கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டுமா?
நிச்சயம் நான் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனென்றால், என் வயது 35, தற்போதுள்ள வேலைக்கு வருவதற்காக என் வாழ்க்கையில் பல வருடங்களை முதலீடு செய்து இருக்கிறேன். இரண்டாவதாக, புதிதாக வேறொரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அதே அளவிலான காலத்தை முதலீடு செய்ய வேண்டும். காலத்தை முதலீடுசெய்யும்போடுஹ் என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள போதிய வருமானம் வேண்டும். சரி, அப்படியே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று மட்டையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது ஏதோ ஒரு இளையராஜா பாடல் காதில் வந்து விழ, பாடகராகவேண்டும் என்கிற ஆசை எழுந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது இசைஞானி ஆகவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டால் என்ன செய்வது?
என்னைப் பொருத்தவரை கிரிக்கெட் விளையாட ஆசை ஏற்பட்டால் பக்கத்து மைதானத்திற்குச் சென்று சிறுவர்களிடம் ஒரு ஓவர் கேட்டு விளையாடுவேன். பாட்டுப்பாட ஆசை வந்தால் ஸ்ம்யூல் போன்ற ஆப்ஸில் பாடுவேன், அல்லது குளியலறையில் குளிக்கும்போது பாடுவேன். இசை வாசிக்க ஆசை ஏற்பட்டால், 1 வருடமாவது தினமும் மாலை நேரத்தில் யாராவது ஒரு இசை வாத்திய ஆசிரியரிடம் சென்று வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்வேன். அதுவே சிறந்ததாக இருக்கும்.
உங்களுக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்தில் தீராத பற்று இருக்குமானால், அதை அடைவதற்கான பின்னணி பண முதலீடு, நேர முதலீடு ஆகியவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், பொழுதுபோக்காக அவற்றை நீங்கள் வைத்துக்கொண்டு, உங்களுக்கு உணவளிக்கும் தொழிலைத் தொடரவேண்டும்!
சிலர் சிறுவயதுமுதலே மருத்துவத் தொழிலுக்குச் செல்ல வேண்டும், அல்லது விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்து வளர்வது உண்டு. அந்த ஆசை முதலில் எவ்வாறு உருவானது? சேவை செய்ய வேண்டும் என்பதற்கா அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கா? இரண்டில் எதுவாக இருந்தாலும் அப்படி ஒரு தொழில் செய்ய முடியாது என்கிற நிலை வரும்போது இரண்டு முடிவுகளில் ஒன்றைச் செய்யலாம்
1. தடைகளை உடைத்து அந்தத் தொழிலுக்குள் நுழைதல்
2. அதே போன்று சேஐ செய்ய அல்லது பணத்தைச் சம்பாதிக்க வேறு வாய்ப்புகளைக் கண்ட
றிதல்.
மகிழ்ச்சியாக வாழத்தானே ஆசை, இலட்சியம் போன்றவற்றை எல்லாம் உருவாக்கிக்கொண்டோம். அந்த ஆசை நிறைவேறாதபோது ஒன்று தொடர்ந்து மேலும் கடினமாக அதற்கான உழைப்பச் செலுத்த வேண்டும், இல்லையேல் அதே நோக்கத்தை வேறு தொழில்கொண்டு செய்ய வேண்டும். ஆனால், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் அந்த இலட்சியத்தை உருவாக்கியதன் நோக்கத்தையே மாற்றிவிடுகிறார்கள் மாணவச் செல்வங்கள். இவர்களுடைய தற்கொலையினால் வேறு யாராவது பயனடைவார்களா என்று தெரியாது, ஆனால் இலட்சியம் நிறைவேறாவிட்டால் தற்கொலை தான் செய்யவேண்டும் என்று பல மாணவர்களும் தூண்டப்படுகிறார்கள் என்பது நம் கண்முன்னே நிகழும் கொடூரம்.
Friday, January 1, 2021
கார்ப்பரேட் என்பவர்கள் யார்? அவர்கள் நமக்கு என்ன செய்தார்கள்?
Blog Archive
-
▼
2021
(13)
-
▼
January
(10)
- தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ண...
- மாலைமலர் கட்டுரையில் பிழை
- தோல்வியை எதிர்பாருங்கள்
- தமிழ் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?
- தினத்தந்தி கட்டுரையில் பிழை
- தினமலர் கட்டுரையில் உள்ள பிழைகள்
- கிரிப்டோகரன்சியும் டிரான்(TRON) நெட்வொர்க்கும்
- ரிட்டயர்மெண்ட் பிளான்
- இதயம் சொல்வதைப் பின்பற்றுதல்
- கார்ப்பரேட் என்பவர்கள் யார்? அவர்கள் நமக்கு என்ன ச...
-
▼
January
(10)
Labels
வலைதளம் பதிவுசெய்தல்
Search This Blog
தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்
தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...
-
Tamil Font Drag-and-Drop Matching Game Drag Modern Tamil Script (left) to match Ancient Tamili Font (r...
-
சமையலறை என்பது வீட்டின் இதயமாகக் கருதப்படுகிறது, அது அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். பயன்படுத்தும்படியாக்குதல் அம்சங்...
-
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு: தமிழ்நாட்டில் பயன்படுத்தும்படியாக்குதல் மற்றும் தமிழ் மொழி அமைப்புகளைப் பற்றிய மரியாதைம...












