Total Pageviews

Tuesday, January 5, 2021

ரிட்டயர்மெண்ட் பிளான்

 தற்போது 35 வயதை நெருங்கியிருக்கும் பலரும் ரிட்டயர்மெண்ட் பிளான் குறித்து யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். இன்னும் சில நாட்களில் கண்கள் சோர்ந்துவிடும், கை கால்கள் தளர்ந்துவிடும், பணியில் இருந்து அவர்களே அனுப்பிவிடுவார்கள் போன்ற காரணங்கள் அதிகம். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாகவே ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்குப் பின் ஓய்வாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டும், செய்தித்தாளைப் படித்துவிட்டு அரசியல் பேசிக்கொண்டும் இருக்கலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், வழக்கமான வருமானம் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும் என்பதால் அதற்கான சிறந்த திட்டத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். 



நான் ஒன்றைச் சொல்கிறேன். பல்வேறு வகையான முதலீடுகளைச் செய்வது மிகவும் அவசியமான ஒன்றுதான், அதை நீங்கள் எப்போதும் செய்துகொண்டே இருக்க வேண்டும். குறைந்த விலையில் அதிக வளர்ச்சியடையக்கூடிய பங்குகள், வருடந்தோறும் டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகள் என்று ஆராய்ந்துபார்த்து பங்குசந்தையில் முதலீடுசெய்யுங்கள். வளர்ச்சியடைய வாய்ப்புள்ள க்ரிப்டோகரன்சிகளில் முதலீடுசெய்யுங்கள். மாதம்தோறும் இவற்றுக்காக 5% பணத்தையாவது ஒதுக்கி வையுங்கள். நீங்கள் பணியில் இருந்து வெளியே அனுப்பப்படும் தருணத்தில் நிச்சயம் உங்களுக்கு இவை உதவியாக இருக்கும். 

ஆனால், நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் சில பணிகளைச் செய்பவர்கள் பணி ஓய்வைப் பற்றியோ பணி ஓய்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியோ யோசிப்பதே கிடையாது. அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும்முதலாளிகள், சமூகசேவகர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மரணம் தழுவும்வரை தங்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணத்தையே தங்களுக்குள் வைத்துக்கொள்வது கிடையாது. போலீஸ், மிலிட்டரி போன்ற அரசு வேலைகளில் கட்டாயம் ஒரு வயதுக்கு மேல் பணிவோய்வு கொடுக்கப்படும் என்றாலும் அதன் பின்னரும் வீட்டில் சோர்ந்து உட்கார்ந்துவிடலாம் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள். சமூகப்பணி, டிரேடிங், செக்யூரிட்டி, முதலீட்டு ஆலோசகர், கடைக்காரர் என உங்களுக்கு எந்தத் தொழில் ஒத்துவருமோ அதை பணிவோய்வுக்குப் பின்னும் தொடர்ந்துசெய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். 

ஏனென்றால், வீட்டில் சும்மா இருந்தால் அது உங்க்ளைச் சோம்பேரியாக்குவதுடன் நீங்கள் வாழ்வதற்கான காரணத்தையும் குறைத்துவிடுகிறது. வாழ்க்கை மீதான உங்கள் நாட்டம் குறைந்து அதன் காரணமாகவே அதிக நோய்களை உங்கள் வசம் ஈர்ப்பீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் அதிக பாரம் ஏற்படும். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள், ஓய்வுக்குப் பின்னும் வேறு வேலையை ரசித்துச் செய்யுங்கள், மரணமும் சற்று தள்ளிப்போகலாம்! 

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...