Total Pageviews

Monday, January 25, 2021

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை

 தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் காவல் ஆய்வாளர் மீது அவதூறு செய்தி வெளியிட்டது சம்பந்தமாக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் 10லட்சம் அபராதம் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு.2019 செய்தி தவறான, ஆதாரங்களற்ற செய்தியினை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் கடந்த 2005 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்தமிழ் முதல்வன். அப்போது தினமலர் நாளிதழில் வரும் டீக்கடை பெஞ்ச் பகுதியில் இவர் சட்டவிரோதமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்துவதை அனுமதித்து அதற்காக லஞ்சம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் சொத்து வாங்கியதாகவும் செய்தி வெளியிட்டது.
இதனால் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன், தினமலரிடம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் பதிலளிக்காததை அடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தினமலர் வழக்கறிஞர் ‘செய்தி வெளியிடுவது நாளிதழ்களின் உரிமை’ என வாதாடினார்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் ‘இந்த செய்தி ஆதாரங்களோடு வெளியிடப்படவில்லை. ஆனால் யூகங்களின் அடிப்படையில் வெளியான செய்தியில் ஏன் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவேண்டும் ‘எனக் கேட்டு தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.
காவல்துறையினர் கொண்டாட வேண்டிய தீர்ப்பு.
ஆனால் அனாதையாக கிடக்கிறது.
எதை எதையோ தேவையில்லாமல் ஷேர் பண்றோம்.
இதை கண்டிப்பாக ஷேர் பண்ணுங்க.
வைரல் ஆக்கவேண்டும்.
தினமலர் மாதிரியான பத்திரிக்கைகள் அதன் நிருபர்கள் நாணிக்கூச வேண்டும்.👆👆👆👆👆👆

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...