Total Pageviews

Friday, January 1, 2021

கார்ப்பரேட் என்பவர்கள் யார்? அவர்கள் நமக்கு என்ன செய்தார்கள்?

பல நாடுகளில் வணிகம் செய்யும் நிறுவனத்தை நாம் கார்ப்பரேட் என்று அழைக்கிறோம். பன்னாட்டு நிறுவனம் என்பது இதன் மற்றொரு பொருள். கார்ப்பரேட் மூலம் விவசாயம் அழிகிறது, கார்ப்பரேட் மூலம் அரசாங்கத் துறைகள் தனியாருக்குச் செல்கின்றன, கார்ப்பரேட் மூலம் விலைவாசி உயர்கின்றது என்பவை எல்லாம் நாம் அறிந்ததே. நிச்சயம் கார்ப்பரேட் எல்லா துறைகளிலும் வருவது பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் என்றாலே பொதுவாக நமக்கு எதிரிகள் என்கிற கண்ணோட்டம் வளர்ந்துவிட்டது. ”இந்தக் கார்ப்பரேட்டுகளால் எந்த நன்மையுமே கிடையாதா?” என்றால் இல்லை. கார்ப்பரேட்டுகளால் நமக்குப் பல நன்மைகள் உள்ளன அவற்றை கீழே பட்டியலிடுகிறேன். 1. வேலைவாய்ப்பு: அனைவராலும் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபடவோ, சொந்தமாக தொழில்செய்யவோ முடியாது. பல ஆண்டுகளாக இந்தியாவில் நிலவிவந்த வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தை பெருமளவில் குறைத்தது TCS, CTC, Infosys, Accenture, HCL போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். 2. பாலின சமன்பாடு: முன்பெல்லாம் பெண்கள் என்றால் வீட்டைப் பார்த்துக்கொள்ளவேண்டும், ஆண்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது போன்ற ஒரு நிலை இருந்தது. அப்படியே வேலை கிடைத்தாலும் ஆசிரியர், மருத்துவர், கணக்கர் என்கிற வெகு சில வேலைகளை மட்டுமே பெண்கள் செய்வார்கள். கார்ப்பரேட்கள் வந்த பிறகு மென்பொருள் பொறியாளர், உதவி மைய நிபுணர், உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டனர். இதனால், பெண் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதை பாரமாக நினைத்த பெற்றோர்கள் பெருவாரியாக இப்போது பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளுக்குச் சமமாக வளர்க்கத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் இது மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று நம்பலாம். 3. புதிய தொழில்கள்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாட்களைக் கூட்டிச் செல்வதற்கான வாகனங்கள் (கேப்), வாகன ஓட்டிகள், அங்குள்ள அங்காடிகள், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சுற்றி தொடங்கப்படும் மால்கள், தியேட்டர்கள், உணவு ஜாயிண்ட்டுகள், ஜொமாட்டோ, ஸ்விகி போன்ற உணவு விநியோகச் சேவைகள் என கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி தொழில் தொடங்கி, வேலைகிடைத்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர்கள் பலர் உண்டு. 4. மேம்பட்ட சேவைகள்: 2500 ரூபாய் செலவுசெய்து ஒரு நாள் கூட இண்டர்நெட் கிடைக்காமல் தொலைபேசியைத் திரும்பக் கொடுத்த நியாபகம் உண்டு, அரசாங்க இணையதள சேவைகள். இப்போது கார்ப்பரேட்கள் அளிக்கும் சேவைகளுக்குப் பணம் அதிகமாகச் செலவானாலும், லஞ்சம், மெத்தனம் மற்றும் சேவை குறைபாடு போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. கார்ப்பரேட்களின் சதியை எதிர்க்கும் அதேநேரத்தில் அனைத்து கார்ப்பரேட்களும் சதிகாரர்கள் என்கிற எண்ணத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...